தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலிவுட் சினிமாவிலும், மராத்தி சினிமாவிலும் நடிகர், இயக்குநராக திகழ்ந்தவர் ரவீந்திர மஹாஜானி(77).
அவர், ‘மும்பை சா பாஜ்டார்’, ‘ஜூன்ஜ்’, ‘கலத் நகாலத்’ உள்ளிட்ட மராத்தி படங்களில் நடித்து உள்ளார்.
2019-ம் ஆண்டு வெளியான அஷுதோஷ் கவுரிகரின் ‘பானிபட்’ என்ற படத்திலும் அவர் நடித்து உள்ளார்.
இந்த நிலையில், நடிகர் ரவீந்திர மகாஜனி, புனேவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மர்மமான முறையில் மரணம் அடைந்து கிடந்து உள்ளார்.
போலீசாரின் தகவலின் படி, நேற்று மாலை 4.30 மணியளவில் அவரது குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டு, அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரைத் தொடர்புகொண்டனர்.
இதனை தொடர்ந்து, போலீசார் உடனடியாக அவரது இல்லத்திற்கு சென்று, உடலை மீட்டெடுத்த போலீசார் அவர் இறந்து 3 நாட்கள் இருக்கும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
அதன்பின்னரே, அவரது மரணத்திற்கான காரணம் பற்றி கண்டறியப்படும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும், நடிகர் ரவீந்திர மஹாஜானி, அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டது திரையுலகில் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
bollywood actor ravindra mahajani passes away mysteriously