மீண்டு வரும் ‘பிளாக் விடோ’..; கெஸ்ட் ரோலில் ‘அயர்ன் மேன்’

மீண்டு வரும் ‘பிளாக் விடோ’..; கெஸ்ட் ரோலில் ‘அயர்ன் மேன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Black Widow movie finally has a new release date ஹாலிவுட் படமான ‘அவெஞ்சர்ஸ்’ படத்தில் உள்ள கேரக்டர்களில் முக்கியமான கேரக்டர் ‘பிளாக் விடோ’.

‘அவெஞ்சர்ஸ்’ குழுவை உருவாக்கி ‘ஷீல்டு’ ஏஜென்சியில் பணி புரிபவர்தான் பிளாக் விடோ.

‘பிளாக் விடோ’ கதாபாத்திரத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடித்துள்ளார்.

ஆனால், அண்மையில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ படத்தில் பிளாக் விடோ கேரக்டர் இறந்து போவது போல காட்சியிருக்கும்.

இந்த நிலையில் தான் பிளாக் விடோ கேரக்டர் மட்டும் தனி ஒரு படமாக வருகிறது.

‘கேப்டன் அமெரிக்கா – சிவில் வார்’ படத்திற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களில் ‘பிளாக் விடோ’ முக்கிய கேரக்டராக நடிக்கும் படம் தான் இது.

இதில் ‘அயர்ன் மேன்’ கூட கெஸ்ட் ரோலில் வரவிருக்கிறாராம்.

ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

மே 1ம் தேதியில் வெளியாகவிருந்த ‘பிளாக் விடோ’ படம் தற்போது கொரோனா பிரச்சினையால் நவம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Black Widow movie finally has a new release date

கொரானாவால் தள்ளிப் போகும் டாம் குரூஸின் ‘டாப் கன்’ ரிலீஸ்

கொரானாவால் தள்ளிப் போகும் டாம் குரூஸின் ‘டாப் கன்’ ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tom Cruise confirms Top Gun sequel release new date due to COVID 19கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த உலகமே முடங்கியுள்ளது.

ஒரு சில நாடுகள் தற்போது தான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளன.

ஆனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களான தியேட்டர்கள் மால்கள் மூடப்பட்டுள்ளன.

சில ஹாலிவுட் நட்சத்திரங்கள் கூட கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியீட்டுக்கு தயாரான ஜேம்ஸ் பாண்ட் படம், வொண்டர் உமன் போன்ற படங்கள் கூட கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது போல டாம் குரூசின் ‘டாப் கன்’ படமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

டாம் க்ரூஸ் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான படம் டாப் கன்.

அதில் டாம் கெல்லி மெக்கில்ஸ், வல் கிம்மர், அன்டோனி எட்வர்ஸ் உள்ளிட்டோர் நடிக்க டோனி ஸ்கார் என்பவர் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் 35 ஆண்டுகளுக்கு பிறகு டாப் கன் மேவரிக் என்ற பெயரில் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

ஜோசப் கொசினிக்ஷி இயக்கியுள்ள இப்படத்தில் டாம் குரூசுடன் மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கொனோலி, ஜான் ஹம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கொரோனா பிரச்சினையால் டாப் கன் படம் தற்போது டிசம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tom Cruise confirms Top Gun sequel release new date due to COVID 19

ஊரடங்கில் அவுட்டிங் சென்ற நடிகை..; கடித்து குதறிய தெரு நாய்கள்

ஊரடங்கில் அவுட்டிங் சென்ற நடிகை..; கடித்து குதறிய தெரு நாய்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Aanchal Khurana attacked by 3 street dogsகொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனை மதித்து பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

ஒரு சிலர் போரடிக்குது என்ற பெயரில் தெருக்களில் வலம் வருகின்றனர். இவர்களை போலீசார் கண்டித்தும் தண்டித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் தெருக்களில் தன் நாயை வைத்துக் கொண்டு வாக்கிங் சென்ற ஒரு நடிகையை அங்குள்ள தெரு நாய்கள் கடித்து குதறுகின்றன.

அந்த சீரியல் நடிகையின் பெயர் ஆஞ்சல் குரானா.

டெல்லியில் வசிக்கும் இவர் நிறைய ஹிந்தி சீரியல்களில் நடித்துள்ளார்.

நாய் கடி குறித்து நடிகை ஆஞ்சல் குரானா கூறியதாவது…

“நான் வாக்கிங் போன போது ஊரடங்கு உத்தரவால் சாலையில் யாரும் இல்லை. அப்போது நாய்கள் சுற்றி வளைத்து என்னை கடித்து குதறி விட்டன. அக்கம் பக்கத்தினர் உதவி செய்து என்னை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

Actress Aanchal Khurana attacked by 3 street dogs

சினிமாவில் அறிமுகமாகிறார் ஜார்ஜ் மகன்; துரை சுதாகருடன் கூட்டணி

சினிமாவில் அறிமுகமாகிறார் ஜார்ஜ் மகன்; துரை சுதாகருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

George Maryan son Britto debut with Durai Sudhakarசைவம், கைதி, தடம், பிகில் உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் ஜார்ஜ் மரியான்.

சின்ன வேடம் தான் என்றாலும் அதில் தன் நடிப்பை முத்திரையை நிச்சயம் பதிவு செய்துவிடுவார் இவர்.

இவரை தொடர்ந்து தற்போது இவரது மகன் பிரிட்டோ எனபவரும் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

தூங்கா கண்கள் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார்.

இந்த படம் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் கிட்டதட்ட 60 வருடங்களுக்கு முன் நடந்த கதையாம் இது.

த.வினு என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் அவரது தந்தை ஜார்ஜ், களவாணி துரை சுதாகர், நிக்கேஷ், கந்தசாமி, காஞ்சனா ரமேஷ், டாக்டர் பிரபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அப்ஷரா, ரேஷ்மா ஆகியோர் ஹீரோயின்களாக அறிமுகமாகிறார்கள்.

இமயவன் ஒளிப்பதிவு செய்ய இளங்கோ கலைவாணன் இசையமைத்துள்ளார்.

George Maryan son Britto debut with Durai Sudhakar

சினிமாவில் நடிக்கிறாரா நடிகர் ஜெயராம் மகள் மாளவிகா..?

சினிமாவில் நடிக்கிறாரா நடிகர் ஜெயராம் மகள் மாளவிகா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

malavika jayaramபிரபல நடிகர் ஜெயராம் அவர்கள் நடிகை பார்வதியை திருமணம் செய்துக கொண்டார்.

தன் பெற்றோரை போலவே இவர்களின மகன் காளிதாஸும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜெயராமின் மகள் மாளவிகாவும் நாயகியாக நடிக்க வந்துள்ளதாக தகவல்கள் வந்தன.

அண்மையில் தன் தந்தை ஜெயராமுடன் இணைந்து ஒரு விளம்பர படத்திலும் மாளவிகா நடித்திருந்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது..

“எனக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை. ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான முதுகலை படிப்பை வெளிநாட்டில் படித்து வருகிறேன்.

அதில் தான் எனது கவனத்தை செலுத்த போகிறேன்” என கூறியுள்ளார் மாளவிகா ஜெயராம்.

உணவு; மளிகைபொருட்கள்; கொரானா உபகரணங்கள் கொடுக்கும் ஷாரூக்கான்

உணவு; மளிகைபொருட்கள்; கொரானா உபகரணங்கள் கொடுக்கும் ஷாரூக்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor shah rukh khanகொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அதன் தடுப்பு பணிகளுக்காக கோடிக்கணக்கான தொகையை மத்திய மாநில அரசுகள் செலவிட்டு வருகின்றன.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவரின் நிவாரண நிதி மற்றும் உதவி குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும்.

நானும், எனது மனைவி கவுரிகான் உரிமையாளர்களாக இருக்கும் ரெட் சில்லிஸ் நிறுவனம் சார்பில் மராட்டிய மாநில முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும்.

மேற்கு வங்கம் மற்றும் மராட்டிய மாநிலத்துக்கு 50 ஆயிரம் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்படும்.

மும்பையில் உள்ள 5 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.

2 ஆயிரம் பேருக்கு உணவு சமைத்து வீட்டு வேலை செய்பவர்கள், ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்படும்.

மேலும் மும்பையில் உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்கப்படும்.

இவ்வாறு ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows