தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் ‘துக்ளக் தர்பார்’.
இவர்களுடன் பார்த்திபன், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்திலிருந்து அதிதிராவ் விலகியதால் அவருக்கு பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம் ஆனார்.
இப்படத்துக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுத 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
96 பட புகழ் கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.
வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரித்து வருகிறது.
அரசியலை மையப்படுத்தி இப்படத்தை உருவாகி வருகின்றனர்.
இந்நிலையில் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா இணைந்துள்ளார்.
Bigg Boss Samyuktha is on board for Vijay Sethupathi’s tughlaq durbar