என் இனிய தமிழ் மக்களே..; பாரதிராஜாவின் பாசமான ‘அவசர’ அறிக்கை

என் இனிய தமிழ் மக்களே..; பாரதிராஜாவின் பாசமான ‘அவசர’ அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பாரதிராஜாவிற்கு உடல்நிலை குறைவு காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவரே வெளியிட்டதாக ஓர் அறிக்கை அவரது பிஆர்ஓ தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு…

வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.

மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.

மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்.

அன்புடன்,

பாரதிராஜா

பாரதிராஜா

***
My Dear Tamil people,

I am your beloved Bharathiraja. I was admitted to hospital recently due to an health issue, and I am recovering due to the excellent treatment and kind care of doctors and medical staff.

I humbly request all my loved ones not to come to see me in person as visitors are not allowed in the hospital. I hope to get well soon and meet you all in person.

I would like to express my sincere gratitude to all those who have kindly inquired and prayed for my recovery in person, over the phone and online after hearing the news of my admission to the hospital. See you all soon.

With love,
Bharathiraja

பாரதிராஜா

பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் பழம்.; தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் பழம்.; தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் & மித்ரன் ஜவஹர் கூட்டணிக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

மேலும் இவர்களின் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அனிருத்தும் இணைந்து விட்டதால் இதன் மீதான எதிர்பார்ப்பு இன்னும் எகிறியது.

அதன்படி இவர்கள் இணைந்த ‘திருச்சிற்றம்பலம்’ படம் பெரும் பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்தன. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இப்படம் கடந்த வாரம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் தாத்தா திருச்சிற்றம்பலமாக பாரதிராஜா நடிக்க பேரன் திருச்சிற்றம்பலம் கேரக்டரில் தனுஷ் நடித்திருந்தார்.

இதில் தனுஷை அவரது நண்பர்கள் பழம் பழம் என்றே அழைப்பர்.

உலகளவில் 600 திரையரங்குகளில் வெளியான நிலையில் முதல் 3 நாட்களில் ரூ. 20 கோடி வசூலை அள்ளியது.

10 நாட்கள் ஆன நிலையில் இப்படம் தற்போது வரை ரூ. 60 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

‘இறைவி’ தந்த இலாபம்.; விஜய்சேதுபதி சகோதரிக்கு நல்லி குப்புசாமி பாராட்டு

‘இறைவி’ தந்த இலாபம்.; விஜய்சேதுபதி சகோதரிக்கு நல்லி குப்புசாமி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ எனும் விற்பனையகமும் ஒன்று.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி திருமதி ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் ‘இறைவி’ விற்பனையகம் ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது.

இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவன வளாகத்தில் பிரம்மாண்டமான விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினரான தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியாருக்கு இறைவி நிறுவனத்தின் தூண்களில் ஒருவரான உமா சண்முக பிரியன் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

தொழிலதிபர் நல்லி குப்புசாமி பேசுகையில்…

‘ இறைவி விற்பனையகத்திற்கு இப்போதுதான் முதன்முறையாக வருகைத் தந்திருக்கிறேன். 1950 களில் இந்த பகுதியில் ஒரே ஒரு சாலை மட்டுமே இருந்தது. அந்த சாலையில் எப்போதாவது ஒரு கார் கடக்கும். வேளச்சேரியிலிருந்து கிழக்கு தாம்பரம் சாலை வரும் வரை சற்று பயமாகத்தான் இருக்கும்.

ஆனால் தற்போது சாலை வசதிகளும் மேம்பட்டு இருக்கிறது. மக்களும் ஏராளமானவர்கள் இங்கு வசிக்கிறார்கள். சாலை விரிவாக்கம் நடைபெற்று, ஏராளமான விற்பனையகங்களும் இருக்கின்றன. நீண்ட நாள் கழித்து இன்று தான் மீண்டும் இந்த சாலை வழியாக பயணித்து, ‘இறைவி’க்கு வருகை தந்திருக்கிறேன். சாலை நன்றாக விஸ்தாரமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற இடத்தில் இவ்வளவு பிரம்மாண்டமாக இறைவி கடை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

இதனை நான் எதிர்பார்க்கவில்லை. இது இங்குள்ள மக்களுக்கும், இந்த கடைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கும் உற்சாகம் அளிக்கும். இறைவியின் சிறப்பம்சம் என்னவென்றால், ஆடை வடிவமைப்பாளர்கள் இங்கேயே இருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை துல்லியமாக உணர்ந்து உடனடியாக அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுகிறார்கள். புதிய புதிய டிசைன்களை நாங்கள் அறிமுகப்படுத்துவதை விட, நீங்கள் அறிமுகப்படுத்தும்போது அது கூடுதல் கவனத்தை பெறும். அதனால் இந்த நிறுவனம் மேலும் அமோகமாக வளர வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். உங்களிடம் திறமையும், துணிவும் இருப்பதால் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும். வளர்வீர்கள் என ஆசீர்வதிக்கிறேன்.

எங்களுடைய வீட்டிலும், என்னுடைய சகோதரர்களின் வீட்டிலும் உள்ள அனைவரும் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர்கள்.

நல்லி சில்க்ஸ் தொடங்கி 94 ஆண்டுகள் ஆகிவிட்டது. சிறிய அளவில் தொடங்கப்பட்ட நல்லி சில்க்ஸ் கடை வாடிக்கையாளர்களின் பேராதரவால் இன்று உலகம் முழுவதும் 40 கிளைகளுடன் சேவையாற்றி வருகிறது. எங்களைப் போன்றே நீங்களும் உலகம் முழுவதும் ஏராளமான கிளைகளுடன் செயல்பட வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

இறைவி நிறுவனர் ஜெயஸ்ரீ ராஜேஷ் பேசுகையில்…

” இன்று இறைவி விற்பனையகம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இதன் பின்னணியில் ஏராளமானவர்களின் கடுமையான உழைப்பும், பேராதரவும் இருக்கிறது. அவர்கள் அனைவரையும் இந்த தருணத்தில் நன்றியுடன் அன்பையும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் இருநூறு சதுர அடியில் விற்பனையகத்தை தொடங்கினோம். இன்று 18,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக விரிவுப்படுத்தி இருக்கிறோம். இதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தது என்னுடைய சகோதரர் விஜய் சேதுபதி தான். எண்ணமும், கற்பனையும் இருந்தாலும், அதனை வணிக ரீதியாக சாத்தியப்படுத்தியதில் இவர்களுக்கு கணிசமான பங்கு இருக்கிறது.

அதில் ப்ரியன் அண்ணா, டேனியல், லோகு, காயத்ரி என பலரின் கடின உழைப்பும் இருக்கிறது.

இதைத் தவிர்த்து ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னணியில் இருக்கும் ஆண் மகனைப் போல், என்னுடைய ஒவ்வொரு வெற்றியின் பின்னணியில் கணவர் ராஜேஷின் பரந்த மனப்பான்மையுடனான ஒத்துழைப்பு இருக்கிறது. என் தொழில் வாழ்க்கையையும், சொந்த வாழ்க்கையையும் சமச்சீராக எடுத்துச் செல்வதில், என்னுடைய அம்மாவின் பங்களிப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

என்னுடைய வியாபார வழிகாட்டி, தொழில் ரீதியான மானசீக குருவாக கருதும் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் இங்கு விருந்தினராக வருகை தந்து வாழ்த்தியிருப்பதை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன். நான் எப்போதும் வியந்து பார்க்கும் தொழிலதிபரான நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களின் முன்னிலையில் நான் பேசுவேன் என கனவு கூட கண்டது கிடையாது. 2007 ஆம் ஆண்டில் புதிய விற்பனையகம் ஒன்றின் திறப்பு விழாவின் போது அவரை சந்தித்திருக்கிறேன். அவருடைய கம்பீரமான தோற்றம் என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒருமுறை அதிகாலை 5 மணி அளவில் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு செல்லும் விமானத்தில் பயணித்தோம்.

அப்போது சக பயணியாக அதிகாலையிலேயே விமான பயணத்தை மேற்கொண்ட அவரது சுறுசுறுப்பினையும், திட்டமிடலையும் கண்டு வியந்தேன். 2020 ஆம் ஆண்டில் ஆண்டிலேயே அவரை அழைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக அந்தத் திட்டத்தை கைவிட்டோம்.

அவரை நேரில் சென்று அழைத்த போது மிக இயல்பாக தேதி, நேரம், இடம் எது என கேட்டார். அவரிடம் ஒவ்வொரு முறை உங்கள் விற்பனையகத்திற்கு வரும்போது பல நுட்பமான விசயங்களை கற்றுக் கொள்கிறோம் என்றேன். அவரும், ‘நாங்களும் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதனை பூர்த்தி செய்து வருகிறோம்’ என்றார்.

200 சதுர அடியிலிருந்து 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவு வரை அவருடைய கடின உழைப்பில் நல்லி சில்க்ஸ் விரிவடைந்து இருக்கிறது. 40 கிளைகளையும் தொடங்கி இருக்கிறார்கள். ஏராளமான புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். மிக இயல்பான மனிதர். அவர் எங்கள் இறைவி விற்பனையகத்திற்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி. ” என்றார்.

Iravi show room 5th Anniversary celebration

விமல் நடிக்கும் மா.பொ.சி.; டைட்டில் சர்ச்சைக்கு போஸ் வெங்கட் விளக்கம்

விமல் நடிக்கும் மா.பொ.சி.; டைட்டில் சர்ச்சைக்கு போஸ் வெங்கட் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மா.பொ.சி. என்ற புதிய படத்தின் பூஜை அறந்தாங்கியில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் போஸ் வெங்கடேஷ் பேசியதாவது…

பெரும்பாலும் ஒரு திரைப்படத்தின் பூஜை சென்னையில் தான் நடைபெறும். ஆனால், அறந்தாங்கி என்னுடைய பிறந்த இடம், இங்கு பூஜை நடைபெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

எனது சிறுவயது கனவு நிறைவேறியதற்கு சட்டத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் இருவருக்கும் நன்றி..

அடுத்து, என் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட என்னுடைய கதாநாயகன், என்னுடைய மாப்பிள்ளை விமலுக்கு நன்றி.

‘கன்னிமாடம்’ என்ற படத்தில் என்னுடன் பணியாற்றிய கதாநாயகி சாயா தேவி இப்படத்தில் நடிக்கிறார்.

‘பருத்தி வீரன்’ படத்தில் ஒரு கலக்கு கலக்கி தமிழ்நாட்டையேத் திரும்பி பார்க்க வைத்த அன்பு சகோதரர் சரவணன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகவுள்ளார்.

மா.பொ.சி.

சிறுவயதாக இருந்தாலும் இந்த கதையைக் கேட்டு தைரியமாக இப்படத்தை தயாரிக்க ஒப்பு கொண்ட தயாரிப்பாளர் சிராஜுக்கும் நன்றி. இந்த திரைப்படம் நடக்க உறுதுணையாக இருந்தவர் அன்பு சகோதரர் நிர்வாக தயாரிப்பாளர் கண்ணனுக்கும் நன்றி.

மேலும், அன்பு சகோதரன் S Focus N.சரவணன் மற்றும் T. சரவணன் அவர்களுக்கு வாழ்த்துகளுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மா.பொ.சி. என்றதும், மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் பெயர் தான் நினைவிற்கு வரும். ஆனால், தலைப்பு அதுவல்ல. மா என்ற எழுத்தில் துணைக் கால் சேர்த்து தலைப்பு போட்டதில் இருந்தே சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது.

அதைத் தெளிவுப்படுத்த இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன். மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என்று வைத்திருந்தோம், அது பெரிய தலைப்பாக இருக்கிறது என்று சுருக்கி மா.பொ.சி. என்று வைத்தோம்.

ஒருவேளை ம.பொ.சி அவர்களை நினைவுபடுத்தினால் தமிழுக்குச் செய்யக் கூடிய நல்ல விஷயமாகத்தான் இருக்கும்.

நிச்சயமாக அவர் பெயரை பன்மடங்கு பெருமைப்படுத்தும் விதமாகத்தான் இப்படம் இருக்குமே தவிர, கலங்கப்படுத்தும் படமாக இருக்காது. அரசியல் காழ்ப்புணர்ச்சி எனக்கு கிடையாது. கல்வியை மையப்படுத்தி எடுக்கப்படும் படம். இப் படம் ம.பொ.சி. ஐயா அவர்களை போற்றக்கூடிய படமாகத்தான் இருக்கும்.

நடிகை ரமாவும் இப்படத்தில் நடிக்கவுள்ளர். ஒளிப்பதிவாளர் இனியன், படத்தொகுப்பாளர் சிவா, இசையமைப்பாளர் சித்து குமார், மற்றும் கலை இயக்குனர் பாரதி, நடிகர் ஜனா இருவரும் புதியதாக இணைந்துள்ளனர்.

மா.பொ.சி.

Ma Po Si movie pooja and Title explanation by Director Bose Venkat

இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து அவரது உதவியாளர் தந்த அப்டேட்

இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து அவரது உதவியாளர் தந்த அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து அவரது உதவியாளர் சுரேஷ் கூறியதாவது…

‛‛டைரக்டர் பாரதிராஜா உடல்நிலை நேற்று கொஞ்சம் சீரியஸாக இருந்தது.

ஆனால் இன்று ஆகஸ்ட் 27 அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மெல்ல உடல் நலம் தேறி வருகிறார்.

இப்போதைக்கு பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. ஒரு வாரத்திற்குள் கண்டிப்பாக பாரதிராஜா வீடு திரும்புவார்” என்றார்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சென்னையில் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு நேற்று தான் மாற்றப்பட்டு இருந்தார்.

அப்போது அவரை மருத்துவமனையில் சந்தித்த கவிஞர் வைரமுத்து…

“பாரதிராஜாவுக்கு சளி தொற்று பிரச்சினை உள்ளது. எனவே சிகிச்சைக்கு பின்னர் விரைவில் நலம் பெற்று பாரதிராஜா வீடு திரும்புவார்” என செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கையில் 2வது வாய்ப்பு கிடைத்தால்.? அதையெல்லாம் ‘கணம்’ சொல்லும் – எஸ்.ஆர். பிரபு

வாழ்க்கையில் 2வது வாய்ப்பு கிடைத்தால்.? அதையெல்லாம் ‘கணம்’ சொல்லும் – எஸ்.ஆர். பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கணம்’ படம் அனைவரையும் திருப்திப்படுத்தும் படமாக இருக்கும் என ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அமலா நடித்துள்ள ‘கணம்’ படம் செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படம் குறித்து தயாரிப்பாளர் மேலும் கூறியதாவது…

வாழ்க்கையில் ஒவ்வொரு ‘கணமும்’ நமக்கு முக்கியம் என்பதைக் கூறும் படம். டைம் டிராவல் மற்றும் அம்மா சென்டிமெண்ட் இருக்கிறது.

பசங்களுக்கான விஷயங்கள் நிறைய இருக்கிறது. அறிவியல் புனைகதை (Science Fiction) படம் மட்டுமல்ல, அனைத்து விஷயங்களும் இருக்கும். குழந்தைகள் முதல் அனைவருக்குமான படமாக இருக்கும்.

இப்படத்தின் கதையை கேட்கும்போதே இப்படத்திற்கு செலவுகளும், வேலைகளும் அதிகமாக ஆகும் என்று தோன்றியது. ஆகையால், அதற்கு தகுந்த குழு வேண்டும் என்று நினைத்தோம்.

‘மாயா’ படத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு கதையையும் ஷரவானந்துக்கு அனுப்பிக் கொண்டே இருப்பேன். கடைசியில் இந்தக்கதையில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இப்படத்தின் தெலுங்கு மொழி பெயர் ‘ஒக்கே ஒக்கா ஜீவிதம்’ (ஒரே ஒரு வாழ்க்கை). மூன்று கதாநாயகர்களுக்குமே மூன்று விதமாக உணர்வுகள் இருக்கின்றது.

நமது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வோம்? அப்படி கிடைத்தால் இதையெல்லாம் சரி செய்து இருக்கலாம், இவை நடக்கமால் இருந்திருக்கலாம் என்று சில விஷயங்களில் தோன்றும்.

அப்படிப்பட்ட விஷயங்களை சரி செய்ய வாய்ப்பு கிடைத்தால் என்ன முயற்சி எடுப்போம்? அப்படி முயற்சி எடுக்கும்போது என்ன மாதிரி விஷயங்கள் எல்லாம் நடக்கும்? என்பதைத் தான் இந்த படத்தில் கூறியிருக்கிறோம்.

மேலும், அடுத்தடுத்த காட்சிகளில் இது தான் நடக்கும் என்று கணிக்க முடிந்தாலும் அது சுவாரஸ்யமாகவே இருக்கும்படியாக தொழில்நுட்பம், வசனங்கள் மற்றும் இசையும் இருக்கும்.

ஒரு கதாபாத்திரம், ஒரு காட்சியில் தோன்றினாலும் கச்சிதமாக பொருந்தும் படி எடுத்துள்ளோம். அதேபோல், ஒரு படம் எடுக்கும்போது நிதானமும் பொறுமையும் அவசியம் தேவை, அது ஸ்ரீகார்த்தியிடம் நிறையவே இருக்கிறது.

முதல் முறையாக இருமொழிப் படம் எடுக்கிறோம், பெரிய ஒரு செலவில் எடுக்கிறோம், அந்த படம் வருவதற்குள் அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பும், ஆவலும் இருக்க வேண்டும் மற்றும் அனைவரையும் திருப்திபடுத்தும் படமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். நாங்கள் நினைத்தது போல் படம் நன்றாக வந்திருக்கிறது. அனைவருக்கும் சம்பந்தப்படுத்தும் விதமாக இருக்கும்.

அறிவியல் புனைகதையை தனியாக எடுத்து வைத்துவிட்டு பார்த்தாலும் இந்த படம் நன்றாக இருக்கும். அம்மா மகன் செண்டிமென்ட்டை தனியாக எடுத்து பார்த்தாலும் நன்றாக இருக்கும். இப்படம் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்பதால், பின்புலம் இருக்கக் கூடிய நடிகர்கள் தேவை.

இந்த கதையைப் புரிந்து கொண்டு உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக நடிக்க வேண்டும். அந்த நேரத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

ரீது வர்மா நாயகியாக நடிக்கிறார். நாசர் விஞ்ஞானியாக நடித்திருக்கிறார்.
சதீஷ் கதாபாத்திரத்தை பார்ப்பவர்கள் எப்படி இதுபோன்ற சவாலான பாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள்? என்று நிச்சயம் கேட்பார்கள்.

மூன்று நண்பர்கள், அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் பற்றிய கதை என்பதால், இந்த கதாபாத்திரம் தேவையில்லை, இந்த காட்சி தேவையில்லை என்று தோன்றாது. அனைத்து பாத்திரங்களுமே முக்கியமாகத்தான் தோன்றும். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும்” என்றார்.

What will you do if you get 2nd Chance in life

More Articles
Follows