ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா.? ஸ்ரீரெட்டியை கண்டிக்கும் பாரதிராஜா

Bharathiraja slams Actress Sri Reddy on her allegationsபாலியல் ரீதியாக திரையுலகினர் பலரும் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார் ஸ்ரீரெட்டி.

தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி என பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை செக்ஸ் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என அண்மையில் தெரிவித்தார்.

இதனிடையில் திரையுலகில் பலரும் ஸ்ரீரெட்டிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

இவரது அண்மை பேட்டியில்…

‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் ? ஸ்ரீரெட்டி அனைத்திற்கும் அனுமதி கொடுத்துள்ளார். ஸ்ரீரெட்டியின் சம்மதத்துடன் தான் எல்லாம் நடந்துள்ளது.

அப்படி இருக்கும்போது அதனை வைத்து அவர் விளம்பரம் தேடி வருகிறார். இதற்காக ஒட்டு மொத்த சினிமா துறையை அவர் குறை சொல்லக்கூடாது’.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Bharathiraja slams Actress Sri Reddy on her allegations

Overall Rating : Not available

Latest Post