ஆன்மிக விவசாயத்தை பேசும் ‘ஜம்பு மகரிஷி’.; 14 ஆண்டுகளாக ஒரே படத்தை தயாரித்த பாலாஜி

ஆன்மிக விவசாயத்தை பேசும் ‘ஜம்பு மகரிஷி’.; 14 ஆண்டுகளாக ஒரே படத்தை தயாரித்த பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டி வி எஸ் ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாலாஜி கதையின் நாயகனாக நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஜம்பு மகரிஷி’.

இந்த திரைப்படத்தில் பாலாஜி, ‘டத்தோ’ ராதா ரவி, டெல்லி கணேஷ், ‘பாகுபலி’ பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பகவதி பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு புவனேஸ்வரன் இசையமைத்திருக்கிறார்.

ஜம்பு மகரிஷி எனும் சித்தரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் பூ. பாலாஜி மற்றும் பா. தனலட்சுமி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து இம்மாதம் 21ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் வெளியீட்டில் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும், படத்தை பற்றியும் தயாரிப்பாளரும், இயக்குநருமான பாலாஜி பத்திரிகையாளர்களை சென்னையில் சந்தித்தார்.

இதன் போது அவர் பேசுகையில்…

” அனைத்து விவசாயிகளுக்கும், விவசாய சங்கங்களுக்கும் என்னுடைய நன்றிகள். இந்த ‘ஜம்பு மகரிஷி’ எனும் திரைப்படம், விவசாயத்தை பற்றியும், விவசாயிகளைப் பற்றியும், ஆன்மீகத்தின் அடிப்படையில் பேசும் திரைப்படம்.

திருவானைக்காவல் சிவாலயத்தில் உள்ள வெண் நாவல் மரத்தினடியில் இன்றும் ஜம்பு மகரிஷி உயிருடன் நடமாடுவதாக ஐதீகம் இருக்கிறது. இந்த ஐதீகத்தை மையமாக வைத்து தான் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. 3000 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவங்களை தான் இப்படத்தில் கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் கதையை விவரிக்க வேண்டுமென்றால், நம்மை ஆங்கிலேயர்கள் எப்படி அடிமைப்படுத்தினார்களோ.. அதே போல் தற்போது ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தி நிலங்களை கையகப்படுத்தி வருகிறார்கள்.

இதன் நீட்சியாக அவர்கள் ஜம்பு மகரிஷியையும் தொடுகிறார்கள். அதற்குப்பின் என்ன நடந்தது? என்பதுதான் திரைக்கதை.

இன்றைய சூழலில் ஒரு விவசாய குடும்பம் எப்படி சீரழிகிறது? அவர்களின் சொத்து எப்படி மறைமுகமாக சூறையாடப்படுகிறது? அவர்கள் எப்படி ரியல் எஸ்டேட் அதிபர்களின் கடன் வலையில் சிக்கி, தங்களது நிலத்தை இழக்கிறார்கள். கோழிக்குஞ்சுகளை கழுகு எப்படி வானத்திலிருந்து பறந்து வந்து கண நேரத்திற்குள் கவர்ந்து செல்கிறதோ… அதேபோல் பெரும் தனவந்தர்களிடம் விவசாயிகள் தங்கள் நிலங்களை இழக்கிறார்கள்.

மேலும் குத்தகை அல்லது ஒப்பந்த பத்திரங்களின் மூலம் அவர்களை ஆயுள் முழுவதும் அடிமைகளாகவே நடத்துகிறார்கள். வேறு சிலர் வட்டிக்கு பணம் வாங்கி, அதனை திரும்ப செலுத்த இயலாமல் நிலத்தை இழக்கிறார்கள். நானும் இதே போல் என்னுடைய நிலத்தை வட்டிக்காரர்களிடம் இழந்திருக்கிறேன்.

20 ஆண்டு ஒப்பந்தம்… 30 ஆண்டு ஒப்பந்தம்… என்று விவசாயிகளை அலைகழித்து, அவர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள். மேலும் விவசாயிகளின் வாரிசுதாரர்கள், விவசாய நிலத்தை குறைந்த விலைக்கு விற்று விடுகிறார்கள். வாரிசுதாரர்களும் விவசாய நிலத்தை மீட்பதில்லை.

அங்கு வீடும் கட்டுவதில்லை. விவசாயி என்ற தனக்கான அடையாளத்தையும் தொலைத்து விடுகிறான். விவசாயிகளிடமிருந்து ஏன் விவசாய நிலத்தை பறிக்கிறீர்கள் ? நம்முடைய பாட்டன்.. பூட்டன் எப்படி செழிப்பாக வாழ்ந்தார்கள் என யோசிக்க வேண்டும்? அதனால் விவசாயிகளே…! உங்களுடைய விவசாய நிலத்தை ஒருபோதும் விற்காதீர்கள்.

இந்த தருணத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறேன். கள்ளு கடையை திறக்க அனுமதிக்க வேண்டும். ஏனெனில் இன்றைய விவசாயிகளுக்கு அவரது பாட்டன் பூட்டன் பனை மரத்தை விட்டு விட்டு சென்றிருக்கிறார்கள்.

அந்த பனைமரமாவது விவசாயிகளின் மரணத்தை தடுத்து, அவர்களின் இறுதி காலத்திற்கு போதிய வருவாயை அளிக்கும். தற்போதுள்ள சூழலில் சில தொழிலதிபர்கள், இந்த பனைமரம் எதற்கும் உதவாது என்று கூறி, செங்கல் சூலையில் செங்கல்களை உருவாக்க மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்து பயன்படுத்துகிறார்கள். அதே தருணத்தில் அந்த பனை மரத்திலிருந்து கள்ளிறக்க அனுமதித்தால்… அதனை அரசிடம் விற்றாவது.. அவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும்.

அதனால் எங்களுடைய கோரிக்கையை தமிழக அரசு பணிவுடன் பரிசிலித்து நிறைவேற்ற வேண்டுகிறேன்.

‘ஜம்பு மகரிஷி’ எனும் திரைப்படத்தினை 14 ஆண்டுகளாக தயாரித்து வருகிறேன். முதலில் இயக்குநர், தயாரிப்பாளரை சந்தித்து, பத்து லட்ச ரூபாய் முதலீடு செய்தால் படத்தை நிறைவு செய்து தருகிறேன் என வாக்குறுதி அளித்து வாய்ப்பை பெறுகிறார். அத்துடன் ஆட்டை மாட்டாக்குகிறேன்… வானத்தை வளைத்து விடுகிறேன்… கடலை கயிராக்கி விடுகிறேன்… என ஏராளமாக பேசி, தயாரிப்பாளரை சம்மதிக்க வைக்கிறார்.

ஆனால் படத்தின் பணிகள் தொடங்கியவுடன் பட்ஜெட் கோடிகளை தொடுகிறது. நான் திரைத்துறையில் தொடர்ந்து படங்களை தயாரிக்கும் பெரிய நிறுவனங்களை குறை சொல்லவில்லை. அவர்கள் தொடர்ந்து லாபத்துடன் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிறிய அளவில் முதலீடு செய்து… சிறிய பட்ஜெட்டில் படமெடுக்கும் தயாரிப்பாளர்களைப் பற்றி தான் பேசுகிறேன். சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் தான் இன்று பெரும்பாலும் ஏமாற்றப்படுகிறார்கள் ஏமாற்றத்திற்குள்ளாகிறார்கள்.

ஒரு தயாரிப்பாளரை சந்தித்து, கதையை விவரித்து, இயக்குநர் பட தயாரிப்பு அலுவலகம் ஒன்றை அமைத்தால் போதும். உதவி இயக்குநர்கள்… ஒளிப்பதிவாளர்.. படத்தொகுப்பாளர்.. கலை இயக்குநர்.. என அனைவரும் அவருடைய ஆதரவாளர்களாகவே இருக்கிறார்கள்.

காட்டில் ஒரு ஆடு இறந்து விட்டால் அதனை நரிகள் சிறிது சிறிதாக பிய்த்து உண்ணும் கதையை போன்றது தான் இயக்குநரின் வாழ்வு. படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் தன் வீட்டை விற்கிறார். இயக்குநர் அலுவலகம் தொடங்குகிறார். படத்தை தயாரித்த தயாரிப்பாளர் நடு ரோட்டில் தத்தளிக்கிறார். இயக்குநர் படத்தை வெளியிட்டுவிட்டு, வேறு படத்திற்காக சென்று விடுகிறார்.

இன்றைய சூழலில் தமிழ் சினிமாவில் பாதியுடன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட படங்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல்… அதேபோல் படத்தின் பணிகளை நிறைவு செய்து தணிக்கை சான்றிதழ் பெற்று வெளியாகாத திரைப்படங்களும் ஆயிரத்திற்கும் மேல்..

இந்த நிலையில் திரைப்படத்தை விற்பனை செய்வதற்காக தரகர்களாக செயல்படும் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளருடன் நடைபெறும் முதல் சுற்று பேச்சு வார்த்தையிலேயே லட்சக் கணக்கில் அட்வான்ஸ் தொகையை கேட்கிறார்கள். தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களுக்கு லட்சக்கணக்கில் ஏன் அட்வான்ஸ் தொகையை கொடுக்க வேண்டும்? கமிஷன் என விளக்கம் தருகிறார்கள். அதனால்தான் உறுதியாக சொல்கிறேன் தமிழ் சினிமா தற்போது கமிஷன் அடிப்படையில் தான் செயல்படுகிறது.

நான் இந்தத் திரைப்படத்தை மார்ச் மாதம் 31 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு விளம்பரம் செய்தேன். ஆனால் குறைவான திரையரங்குகள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டதால் வெளியிடவில்லை.

தற்போது 100 திரையரங்குகளில் ஏப்ரல் 21ஆம் தேதி அன்று ‘ஜம்பு மகரிஷி’ திரைப்படத்தில் வெளியிடுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். இந்த முறை வெற்றி பெறுவேன் என நம்புகிறேன்.

படப்பிடிப்பு தளத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. சண்டைக்காட்சியின் போது சண்டை பயிற்சி இயக்குனருக்குள் கருத்து மோதல் ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடும் போராட்டத்திற்கிடையே இலட்சக்கணக்கில் செலவு செய்து அதன் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தேன். சண்டை பயிற்சி இயக்குநர் பிரச்சனை செய்து படப்பிடிப்பை நிறுத்தினார். இதற்காக தயாரிப்பாளர் சங்க பிரதிநிதியான கலைப்புலி எஸ். தாணுவை சந்தித்து, பிரச்சனையை சொன்னவுடன் அவர் அதனை தீர்த்து வைத்தார். படப்பிடிப்பு மீண்டும் நடைபெற்றது. இருப்பினும் எனக்கு சண்டை பயிற்சி இயக்குநரால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது.

அதேபோல் விரைவில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது. சிறிய பட்ஜெட் தயாரிப்பாளரான நான்்தயாரிப்பாளர் சங்கத்திற்கும் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு நல்ல முறையில்.. நேர்மையான முறையில் செயல்படும் விநியோகஸ்தர்களின் பட்டியலை வழங்குங்கள்.” என்றார்.

Balaji produced a single film for the 14 years

168 படங்களில் பார்க்காத ரஜினியை பார்ப்பீங்க.; ‘ஜெயிலர்’ நடிகர் தந்த அப்டேட்

168 படங்களில் பார்க்காத ரஜினியை பார்ப்பீங்க.; ‘ஜெயிலர்’ நடிகர் தந்த அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கிய வருகிறார் நெல்சன்.

இதில் ரஜினியுடன் மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கிசரஃப் ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்து வரும் வசந்த் ரவி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் ரஜினி பற்றி தெரிவித்துள்ளார்.

“ரஜினி சார் 168 படங்களில் இதுவரை நடித்திருக்கிறார். இதுவரை பார்க்காத ரஜினியை ‘ஜெயிலர்’ படத்தில் பார்க்கப் போகிறீர்கள். ‘ஜெயிலர்’ படம் நிச்சயம் பட்டையை கிளப்பும்..” என தெரிவித்துள்ளார்.

Vasanth Ravi talks about Rajinikanth’s jailer

கமல்ஹாசனுடன் இணையும் நயன்தாரா.. அதுவும் இந்த இயக்குனர் படத்திலா?

கமல்ஹாசனுடன் இணையும் நயன்தாரா.. அதுவும் இந்த இயக்குனர் படத்திலா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

36 ஆண்டுகளுக்குப் பிறகு கமலும் மணி ரத்னமும் மீண்டும் இணைகிறார்கள். ஏஆர் ரஹ்மான் இசையமைக்க KH234 படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

முன்னதாக, KH 234 இன் தயாரிப்பாளர்கள் த்ரிஷாவை கதாநாயகிக்காக குறிவைத்ததாகக் கூறப்பட்டது.

தற்போது, ​​நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

த்ரிஷா மாற்றப்படுகிறாரா அல்லது கமல்ஹாசனுக்கு ஜோடியாக இரு நடிகைகளும் நடிப்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இப்படம் 2024ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kamal Haasan and Nayanthara combo for the first time?

ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தளித்த சிம்பு.; இதான் காரணமா? என்ன சொன்னார்.?

ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தளித்த சிம்பு.; இதான் காரணமா? என்ன சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சினிமாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் சினிமா ரசிகர்கள் தான். அதிலும் முன்னணி நடிகர்கள் என்றால் இவர்களின் வெற்றிக்கு பெரிய காரணமாக கருதப்படுபவர்கள் ரசிகர்கள் தான்.

தங்களின் அளவற்ற அன்பால் நடிகர்களை தூக்கி பிடித்து கொண்டாடி வருகின்றனர்.

எனவே பல நடிகர்களும் தங்கள் ரசிகர்களை அடிக்கடி சந்திப்பது வழக்கம்.

நடிகர் ரஜினிகாந்த் பலமுறை தன் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

அதுபோல நடிகர் விஜய் அடிக்கடி தன் ரசிகர்களை சந்திப்பார். மேலும் அவர் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கிய பின் அடிக்கடி அதன் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

அதன் பின்னர் தன்னுடைய ரசிகர்களுக்கு அவர் பிரியாணி விருந்து வழங்கியும் வந்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உள்ளார். மேலும் தன்னுடைய ரசிகர்களுக்கு தன் கையாலே பிரியாணி பரிமாறினார். அந்த வீடியோவும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிம்பு நடித்து வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தை ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடினர். எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிம்பு அவர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.

மேலும் படத்தின் வெளியீட்டின் போது “விழா பணிகளை பாதுகாப்பாக கையாளுங்கள்.. ரசிகர் மன்ற பணிகளை விரிவுப்படுத்துங்கள்.. சமூக பணிகளை செய்து மக்களின் நன்மதிப்பை பெறுங்கள்” என்பது போல ஆலோசனைகளை சிம்பு கூறியதாகவும் தெரியவந்துள்ளது

STR served Briyani to his fans; ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தளித்த சிம்பு Pathu Thala Silambarasan l filmistreet 👌🏻

https://youtube.com/shorts/e7QFPlKNatg?feature=share

Actor Simbu served Briyani to his fans

JUST IN நயன்தாரா – ஜோதிகா போல நடிப்பீர்களா.? ‘விருமாண்டி 2 எப்போ.? FILMISTREET கேள்விக்கு அபிராமி பதில்கள்

JUST IN நயன்தாரா – ஜோதிகா போல நடிப்பீர்களா.? ‘விருமாண்டி 2 எப்போ.? FILMISTREET கேள்விக்கு அபிராமி பதில்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘ஒரு கோடை மர்டர் மிஸ்டரி’.

வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படக்குழுவினர் இன்று ஏப்ரல் 18 தேதி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இதில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ள விருமாண்டி புகழ் நடிகை அபிராமி பத்திரிகையாளர்களை தனியாக சந்தித்தார்.

அப்போது.. “விருமாண்டி பார்ட் 2 படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு.. “விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி கேரக்டர் இறந்து விட்டது அவர் செத்துப் போயிட்ட. பின்பு எப்படி விருமாண்டி 2 வரும் ).

ஒரு வேளை அதற்கான திரைக்கதை அமைத்து கமல் என்னை அழைத்து கண்டிப்பாக நடிப்பேன். மறுக்க மாட்டேன் என்றார். அதன் பிறகு FILMISTREET சார்பில் ஜோதிகா – நயன்தாரா போல FEMALE ORIENTED படங்கள் நடிப்பீர்களா? என கேட்கப்பட்டது.

ஆண்கள் (ஹீரோக்கள்) நடித்தால் அதை யாரும் FEMALE ORIENTED என்று சொல்ல மாட்டார்கள். பிறகு பெண்கள் நடித்தால் மட்டும் FEMALE ORIENTED என்கிறீர்கள்.?

கதை அமைந்தால் நடிப்பேன்” என்றார்.

Abhirami answers FILMISTREET question when ‘Virumandi 2

முதன்முறையாக இணையும் ஜூனியர் என்டிஆர் & சைஃப் அலிகான்.; ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்

முதன்முறையாக இணையும் ஜூனியர் என்டிஆர் & சைஃப் அலிகான்.; ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அதிகாரப்பூர்வமாக ‘என்டிஆர் 30’ படக்குழுவில் இணைந்துள்ளார்.

மேலும் நாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் மூலம் ஜூனியர் என்டிஆர் மற்றும் சைஃப் அலிகான் இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

’NTR 30’ திரைப்படம் தெலுங்கு மொழியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆக்‌ஷன்- ட்ராமா திரைப்படம். இதில் சைஃப் அலிகான், ஜூனியர் என்டிஆர் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அற்புதமான கதைக்களம் மற்றும் திறமையான நடிகர்களுடன் இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு காட்சி விருந்தைக் கொடுக்கும் என்பது உறுதி.

’என்டிஆர் 30’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து படக்குழு சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள புகைப்படம் மூலம் நடிகர் சைஃப் அலிகானை அதிகாரப்பூர்வமாக தங்கள் அணிக்கு வரவேற்று உள்ளனர்.

கடந்த மாதம் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்த பூஜைக்குப் பிறகு ’NTR 30’ படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது. இந்த படம் மூலம் நடிகை ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் இணைந்து ‘என்டிஆர் 30’ படத்தைத் தயாரிக்கிறது மற்றும் நந்தமுரி கல்யாண் ராம் படத்தை வழங்குகிறார்.

மேலும், ஏப்ரல் 5, 2024 அன்று படம் பான் இந்திய அளவில் வெளியாகிறது.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

வழங்குபவர்: நந்தமுரி கல்யாண் ராம்,
பேனர்கள்: என்டிஆர் ஆர்ட்ஸ், யுவ சுதா ஆர்ட்ஸ்,
தயாரிப்பாளர்கள்: ஹரிகிருஷ்ணா.கே, மிக்கிலினேனி சுதாகர்,
எழுதி இயக்குபவர்: கொரட்டாலா சிவா,
இசை: அனிருத் ரவிச்சந்திரன்,
ஒளிப்பதிவு: ரத்னவேலு,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: சாபு சிரில்,
VFX: யுகந்தர்

ஜூனியர் என்டிஆர் - சைஃப் அலிகான்

Saif Ali Khan joins cast of Jr NTR’s next movie

More Articles
Follows