அஜித்-விஷாலை தொடர்ந்து விஜய்யுடன் இணையும் அர்ஜூன்

New Project (4)100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்த அர்ஜூன், சமீபகாலமாக டபுள் ஹீரோ சப்ஜெக்டிலும், வில்லன் வேடத்திலும் நடித்து வருகிறார்.

அஜித்துடன் மங்காத்தா, விஷாலுடன் இரும்புத்திரை, விஜய் ஆண்டனியுடன் கொலைகாரன் படங்களிலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின்ன் 64-வது படத்தில் அர்ஜூன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் ராசிகண்ணா, ராஷ்மிகா மந்தனா நாயகிகளாக நடிக்கிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

Overall Rating : Not available

Latest Post