சிவகார்த்திகேயனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைக்கு ஏஆர்.ரஹ்மான் இசை!

AR Rahman may compose music for Sivakarthikeyans nextவேலைக்காரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தன் ஆஸ்தான இயக்குனர் பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க, சூரி முக்கிய வேடத்தில் நடிக்க இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தையும் வேலைக்காரன் படத்தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு ‘சீமத்துரை’ எனத் தலைப்பிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படம் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையை பின்னணியாக கொண்டு உருவாகவுள்ளதாம்.

இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதை அதிகாரப்பூர்வமாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த படத்தையும் ஆர்.டி.ராஜாவின் ‘24 AM STUDIOS’ நிறுவனமே தயாரிக்கிறது.

அடுத்த 2019 ஆண்டில் இப்படத்தை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

AR Rahman may compose music for Sivakarthikeyans next

Overall Rating : Not available

Latest Post