ப்ளூ சட்டையும்.. புளுகு மூட்டையும்.; ஓடாத படத்திற்கு சாட்டிலைட் & ஓடிடி போட்டியா.?

ப்ளூ சட்டையும்.. புளுகு மூட்டையும்.; ஓடாத படத்திற்கு சாட்டிலைட் & ஓடிடி போட்டியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதிய படங்களை விமர்சனம் செய்த புகழ்பெற்றவர் ப்ளூ சட்டை மாறன். இவர் புதிய படங்களை சகட்டுமேனிக்கு திட்டி விமர்சனம் செய்வார்..

5% படங்களை மட்டுமே பாராட்டி இருப்பார். 95% நெகட்டிவ் விமர்சனங்கள் செய்து அதிக பிரபலமானவர் இவர்.

இதனையடுத்து பல்வேறு தரப்பு ரசிகர்களும் முடிந்தால் நீங்கள் ஒரு படத்தை டைரக்ட் செய்யுங்கள் என சவால் விட்டனர்.

எனவே இவரே இசையமைத்து ஒரு படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் தான் ‘ஆண்டி இந்தியன்’. ஆனால் அந்த படமும் ஒரு ஹிந்தி படத்தின் காப்பியடிக்கப்பட்டது என்பது பின்னர் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த படம் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.்இவரே பல்வேறு தரப்பினரையும் அழைத்து இலவச காட்சிகளை போட்டு காண்பித்து இருந்தார்.

இந்த நிலையில் ஓடாத இந்த படத்திற்கு தற்போது OTT வியாபாரம் வந்துள்ளதாக படக்குழு சார்பில் செய்தி வந்துள்ளது.

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் கடந்த வருட இறுதியில் வெளியான படம் ஆன்டி இண்டியன்.

யூடியூப் சேனல் சினிமா விமர்சனரான ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்திருந்தார். இந்த படத்தில் ராதாரவி, ஆடுகளம் நரேன், இயக்குனர் வேலு பிரபாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறி மரணித்த ஒருவரின் இறுதிச்சடங்கு எந்த அளவுக்கு மதரீதியான, அரசியல் ரீதியான பிரச்சனைகளை உருவாக்குகிறது என்பதை தனது பாணியில் நையாண்டி கலந்து இந்த படத்தை இயக்கியிருந்தார் ப்ளூ சட்டை மாறன்.

இந்த நிலையில் இந்த படத்தை தற்போது ஓடிடியில் வெளியிடுவதற்கும் சாட்டிலைட் உரிமையை பெறுவதற்கும் சில முன்னணி நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாம்.

Anti Indian movie  Satellite & OTT rights  competition  here

ராக் ஸ்டார் அனிருத்தின் தாத்தாவும் இயக்குனருமான எஸ்‌வி ரமணன் காலமானார்

ராக் ஸ்டார் அனிருத்தின் தாத்தாவும் இயக்குனருமான எஸ்‌வி ரமணன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழம்பெரும் இசை அமைப்பாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான எஸ்.வி. ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று (செப்டம்பர் 26) அதிகாலை காலமானார்.

இவருக்கு பாமா என்ற மனைவியும், லட்சுமி, சரஸ்வதி என்ற மகள்களும் உள்ளனர். யூத் ஐகான் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் நடிகர் ஹிருஷிகேஷ் அவரது பேரன்கள்.

1983 ஆம் ஆண்டு வெளியான ‘உருவங்கள் மாறலாம்’ படத்தின் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அவரது அடையாளம் விளங்குகிறது.

JUST IN ‘காபி வித் காதல்’ இசை விழாவில் குஷ்பூ – சுந்தர்.சி சண்டை.; போட்டுக் கொடுத்த டிடி

JUST IN ‘காபி வித் காதல்’ இசை விழாவில் குஷ்பூ – சுந்தர்.சி சண்டை.; போட்டுக் கொடுத்த டிடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர்.சி இயக்கத்தில் காதல் மற்றும் காமெடி கலந்த உருவாகியுள்ள படம் ‘காபி வித் காதல்’.

குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர்.

மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

இந்த நிலையில் காபி வித் காதல் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இன்று செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

இந்த இசை விழா தற்போது சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

குஷ்பூ

குஷ்பூ பேசும்போது..

” எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் மீடியாவுக்கு என்றும் நன்றி.

இந்த படத்தில் பிரதாப் போத்தன் முக்கிய இடத்தில் நடித்துள்ளார். அவர் தற்போது நம்மிடம் இல்லை. ஐ மிஸ் யூ சார்.

இந்தப் படத்தில் யுவனின் பாடல்கள் நன்றாக வந்துள்ளன. இதில் என்னுடைய ரம்பம் ரம்பம் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அந்த பாடலுக்கு என்னை அழைக்கவே இல்லை. என கம்ப்ளைன்ட் செய்தார்.

அப்போது மேடை ஏறிய சுந்தர் சி அவங்க தான் அந்த பாட்டுக்கு ஆல்ரெடி ஆடிட்டாங்க என்றார்.

இதனை அடுத்து இருவருக்கும் செல்லச் சண்டை மேடையில் ஏற்பட்டது.

இதனிடையில் பேசிய நடிகை டிடி.. “குஷ்பூ மேடம் நீங்க ரொம்ப பிஸி.. உங்க கால் ஷீட் கிடைக்கலன்னு சுந்தர் சார் சொன்னாரு.” என போட்டு கொடுத்தார்.

காபி வித் காதல்

Khushboo speech in Coffee with Kadhal Trailer launch

JUST IN யுவன் இசையே போதை.; ‘காபி வித் காதல்’ இசை விழாவில் சுந்தர்.சி பேச்சு

JUST IN யுவன் இசையே போதை.; ‘காபி வித் காதல்’ இசை விழாவில் சுந்தர்.சி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர்.சி இயக்கத்தில் காதல் மற்றும் காமெடி கலந்த உருவாகியுள்ள படம் ‘காபி வித் காதல்’.

குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

காபி வித் காதல்

மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

இந்த காதல் பட்டாளத்துடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி உள்ளிட்டோரும் இணைந்துள்ளார்கள்.

இதன் தமிழக திரையங்க வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் காபி வித் காதல் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இன்று செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியாகியுள்ளது

காபி வித் காதல்.

இந்த இசை விழா தற்போது சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த இசை விழாவில் இப்பட பாடல்களை எழுதிய சினேகன் மற்றும் பேரரசு மேடை ஏறி பேசினர்.

சினேகன் பேசும்போது..

“உள்ளத்தை அள்ளித்தா” படமும் சுந்தர்சியால் இயக்க முடியும். அருணாச்சலம் & அன்பே சிவம் உள்ளிட்ட படங்களையும் இயக்க முடியும் என நிரூபித்தவர்.

நான் பிக் பாஸ் வீட்டுக்கு செல்லும்போது இந்த படத்திற்கான வாய்ப்பு எனக்கு வந்தது. யுவனுக்காக அந்த பாடல் எழுதினேன்” என கூறினார்.

காபி வித் காதல்

சுந்தர் சி பேசும்போது…

“யுவன் இசை என்றாலே அது போதை தான். அந்த போதை எனக்கு மட்டும் அல்ல. எல்லாருக்கும் தான். இந்த படத்தில் மூன்று ஹீரோக்கள் நடித்துள்ளனர். 6 நாயகிகள் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர்” என பேசினார்.

இந்த விழாவில் ஸ்ரீகாந்த் மற்றும் யோகிபாபு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காபி வித் காதல்

Coffee with Kadhal songs and Trailer launch live updates

சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தில் இதுவரை ஏற்காத கேரக்டரில் வரலக்‌ஷ்மி

சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தில் இதுவரை ஏற்காத கேரக்டரில் வரலக்‌ஷ்மி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மஹா மூவிஸ்’ பேனரில் மகேந்திர நாத் கொண்டலா தயாரிப்பில், அனில் கட்ஸ் இயக்கும் ‘சபரி’ படத்தில் நடிக்கும் வரலக்‌ஷ்மி இதற்கு முன்பு ரசிகர்கள் பார்த்திராத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தை மகரிஷி கொண்டலா வழங்குகிறார்.

இதன் படபிடிப்பு மிக விரைவாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கிய கட்டத்தை சமீபத்தில் படக்குழு முடித்துள்ளது.

இதன் முக்கிய காட்சிகள் இரண்டு வாரங்களாக கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த கொடைக்கானல் ஷெட்யூலில் நடிகை வரலக்‌ஷ்மி மற்றும் படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய நடிகர்கள் நடித்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் மகேந்திர நாத் கொண்டலா தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் பேசும்போது…

“படத்தின் ஒரு பாடல், க்ளைமாக்ஸ் காட்சிகள் மற்றும் முக்கிய காட்சிகளை இந்த 14 நாட்களில் கொடைக்கானலின் அழகான இடங்களில் படமாக்கியுள்ளோம்.

சுசித்ரா சந்திரபோஸ் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இதுமட்டுமல்லாது, நந்து- நூர் இயக்கியுள்ள சண்டை காட்சிகளை இங்கு படமாக்கினோம்.

இதற்கடுத்து விசாகப்பட்டினம் ஷெட்யூல் விரைவில் தொடங்க இருக்கிறது. படத்தின் அனைத்து பாடல்களையும் பதிவு செய்து விட்டோம்.

பாடல்களை பாடகி சித்ரா, அனுராக் குல்கர்னி, ரம்யா பெஹரா மற்றும் அம்ரிதா சுரேஷ் பாடியுள்ளனர்” என்றார்.

மேலும் இயக்குநர் அனில் கட்ஸ் பேசியதாவது…

“படம் சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகையில் பரபரப்பான திருப்பங்களை கொண்டது. இதில் நடிகை வரலக்‌ஷ்மி பல கட்டங்களை உள்ளடக்கிய எமோஷனலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்னால் இது போன்ற வேடத்தில் அவர் நடித்ததில்லை.

படத்தின் ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டும் சிறந்த வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்” என கூறும் இயக்குநர் இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு த்ரில்லிங்கான அனுபவத்தை தரும் என்கிறார்.

படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாக இருக்கிறது. கணேஷ் வெங்கட்ராமன், ஷாஷங்க், மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கோபி சுந்தரின் இசை படத்தில் முக்கிய கவனம் பெறும்.

*நடிகர்கள்*

வரலக்‌ஷ்மி சரத்குமார்,
கணேஷ் வெங்கட்ராமன்,
ஷாஷங்க்,
மைம் கோபி,
சுனைனா,
ராஜ்ஸ்ரீ நாயர்,
மதுநந்தன்,
ரஷிகா பாலி (பாம்பே),
ராகவா,
பிரபு,
பத்ரம்,
கிருஷ்ண தேஜா,
பிந்து பகிடிமாரி,
அஷ்ரிதா வேமுகந்தி,
ஹர்ஷினி கொடுரு,
அர்ச்சனா ஆனந்த்,
ப்ரோமோதினி பேபி நிவேக்‌ஷா,
பேபி கிருத்திகா மற்றும் பலர்.

*தொழில்நுட்பக் குழு*

கூடுதல் திரைக்கதை: சன்னி நாகபாபு,
பாடல்கள்: ரஹ்மான், மிட்டாப்பள்ளி சுரேந்தர்,
ஒப்பனை: சித்தூர் ஸ்ரீனு,
உடைகள்: மானசா,
படங்கள்: ஈஸ்வர்,
விளம்பர வடிவமைப்பு: சுதிர்,
டிஜிட்டல் & மார்க்கெட்டிங்: விஷ்ணு தேஜ் புட்டா,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (D’One),
தயாரிப்பு நிர்வாகம்: லக்‌ஷ்மிபதி கண்டிபுடி,
இணை இயக்குநர்: வம்சி,
சண்டைப் பயிற்சி: நந்து- நூர்,
VFX: ராஜேஷ் பல,
நடன இயக்குநர்கள்: சுசித்ரா சந்திரபோஸ்- ராஜ் கிருஷ்ணா,
கலை இயக்குநர்: ஆஷிஷ் தேஜா புலாலா,
எடிட்டர்: தர்மேந்திரா ககரலா,
ஒளிப்பதிவு: நாஞ் சமிதிஷெட்டி,
எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர்: சீதாராமராஜூ மலேலா,
இசை: கோபி சுந்தர்,
வழங்குபவர்: மஹரிஷி கொண்டலா,
தயாரிப்பாளர்: மகேந்திர நாத் கொண்டலா,

கதை- திரைக்கதை- வசனம் இயக்கம் : அனில் கட்ஸ்

சூர்யா 42 படத்தில் இணைந்த டெர்ரர் வில்லன்

சூர்யா 42 படத்தில் இணைந்த டெர்ரர் வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவும் இயக்குனர் சிவாவும் இணையும் புதிய படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது, மேலும் இந்த படத்தில் 90 களின் ஆபத்தான வில்லன்
மன்சூர் அலி கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் திஷா பதானி தமிழில் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் டாக்டர் படப் புகழ் பிஜோர்ன் சுர்ராவ் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ளார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

More Articles
Follows