தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் டிவியில் கமல்ஹாசன் வழங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.
தற்போது 80 நாட்களை கடந்துவிட்டது. கடந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார்.
இந்த வாரம் மீதமிருந்தவர்களில் ஷிவானி, கேப்ரியலா முதலில் காப்பாற்றப்பட்டனர்.
இதன் பின்னர் ஆஜித், அனிதா வெளியேற இருந்தனர். இறுதியில் அனிதா அவுட் ஆனார்.
அனிதா போட்டியில் இருந்து வெளியேறுவதாக கமல் அறிவித்தார்.
பிக்பாஸ் வீட்டில் கதறியழுத ‘கன்னுக்குட்டி’..; ஓவர் ப்லீஃங்கில் அனிதா கணவர்
இன்றைய நிகழ்ச்சியில் பூமி பட ஹீரோ ஜெயம் ரவி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
அதற்கான புரொமோஷன் நிகழ்ச்சியாக ரவி பங்கேற்றார். இத்துடன் பூமி பட டிரைலரும் திரையிடப்பட்டது.
அப்போது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி பார்ப்பீர்களா? என கமல் கேட்டார்.
அப்போது நீங்கள் எதை செய்தாலும் நான் பார்ப்பேன். ஏனென்றால் நான் வெறித்தனமான பக்தன் என கமலை பார்த்து சொன்னார் ஜெயம் ரவி.
Anitha evicted from Bigg Boss home and Bhoomi special show