நல்லவர்கள் வருவதில்லை… மோசமான காவல்துறை..; முதல்வருக்கு கடிதம் எழுதிய ரிட்டையர்டு போலீஸ்

நல்லவர்கள் வருவதில்லை… மோசமான காவல்துறை..; முதல்வருக்கு கடிதம் எழுதிய ரிட்டையர்டு போலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதல்வரின் கவனத்திற்கு

எனது பெயர் சிவக்குமார், எனது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம். எனது தந்தை காவல்துறையில் 33 ஆண்டுகள் பணி செய்து எந்தவித தண்டனையும் இல்லாமல் கோயமுத்தூர் இருப்பு பாதை காவல்நிலையத்தில் 1964 ம் ஆண்டு பணி செய்து கொண்டிருக்கும் போது தங்க கட்டிகள் (18) கடத்தி வந்தவரை கைது செய்தவர்.

நானும் 1993ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு கடைசியாக இரயில்வே திருப்பூரில் பணி செய்து வந்தேன்.

நான் சிறுவயதில் உதகை பஸ் நிலையம் அருகே நியூஸ்பேப்பர் விற்பனை செய்தும், கட்டிடம் வேலை செய்தும் பின்பு ஓட்டலில் வேலை செய்து பின்பு தான் காவல்துறையில் சேர்ந்தேன்.

நான் இரயில்வே காவல் நிலையத்தில் வேலை செய்து வரும்போது 2015ஆம் ஆண்டு என்னை வேண்டும் என்றே திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு காவல்நிலையத்தில் 1 மாதம் தனி அலுவலாக அனுப்பி வைத்தனர்.

நானும் அதிகாரிகளின் ஆணையை மதித்து செங்கல்பட்டு இரயில்வே காவல்நிலையத்திற்கு சென்றேன்.

அப்போது எனது மகள் 12ஆம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதும் சமயத்தில் பணிமாறுதல். நான் செங்கல்பட்டு இரயில்வே காவல்நிலையத்திற்கு 1 மாதம் தனி அலுவல் முடிந்தும் என்னை மாற்றம் செய்யாமல் இருந்ததால் நான் மருத்துவ விடுப்பில் சென்றேன்.

அப்போது எனக்கு இரண்டு மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. நானும் அதிகாரிகளை சந்தித்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

எனக்கு பதவி உயர்வு ஒன்றரை வருடம் கழித்து தான் HC to SSI வழங்கப்பட்டது. காரணம் கேட்டால் சர்வீஸ்புக் காணாமல் போய்விட்டது என்று கூறினார்கள்.
பிறகு மீண்டும் திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்திற்கு வந்து பணி செய்து கொண்டிருக்கும்போது மீண்டும் திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்தில் இருந்து காட்பாடி இரயில்வே காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்தார்கள்.

அப்போது எனது மகன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சமயத்தில் பணி மாறுதல் ஏன் பழி வாங்குகிறார்கள். எனது குழந்தைகளின் வாழ்க்கை கல்வியை நான் எப்படி பார்ப்பது? மேலும் காட்பாடி இரயில்வே காவல் நிலையத்திற்கு இருந்து மேட்டுப்பாளையம் இரயில்வே காவல்நிலையத்திற்கு மாற்றுதல் வாங்கி வந்தேன்.

ஆனால் என்னை 1 மாதம் கூட வேலை செய்யவிடாமல் கோயமுத்தூர் இரயில்வே காவல்நிலையம் ஈரோடு இரயில்வே காவல்நிலையம் ஆகிய காவல்நிலையங்களில் அடிக்கடி மாற்றம். ஏன் என்று கேட்டால் நீங்கள் தான் அனுபவசாலி என்று கூறி கொடுமை செய்தார்கள்.

பிறகு திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் யாரும் இல்லை. நீங்கள் தான் வந்து வேலை செய்ய வேண்டும்.

கட்டாயப்படுத்தி மீண்டும் திருப்பூர் இரயில்வே காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் வந்து வேலை செய்து கொண்டிருக்கும் போது காவல் ஆளினர்கள் யாரும் சரியான நேரத்திற்கு பணிக்கு வரமாட்டார்கள்.

இரவு பணிக்கும் 8.00 மணிக்கு வரவேண்டும். ஆனால் காவல் ஆளினர்கள் 10.00 மணிக்கு வருவார்கள். வரும்போது மதுபோதையில் தான் வருவார்கள்.

இரவு 1 மணி வரை வேலை செய்வார்கள். அதற்கு அவர்களை பார்க்கவே முடியாது எங்கே படுத்து எந்திரித்து காலை 6.00 மணிக்கு வந்து அறிக்கை செய்வார்கள். யாரையும் கேள்வி கேட்ககூடாது. அவர்கள் வைத்ததுதான் சட்டம். காரணம் எஸ்.பி., டிஐஜி, ஐஜி அதிகாரிகள் சென்னையில் இருப்பதால் யாரும் கண்டுகொள்வதில்லை. ஒரு காவலர் பணிக்கு வராமல் 3 நாட்கள் இருந்தவரை அழைத்து அறிவுரை வழங்கியபோது என்னை வசைச்சொல்லில் திட்டினார்.

நான் மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க அவர் அந்த காவலர் எந்த ஜாதி என்று கேட்கிறார். இப்படி காவல்துறை சென்று கொண்டிருப்பதால் மனமுடைந்து இனிமேல் காவல்துறையில் நல்லவர்கள் வேலை செய்ய முடியாது என்று முடிவு செய்து கடந்த 2020ம் தேதி விருப்ப ஓய்வுக்கு மனு சமர்ப்பித்தேன்.

விருப்ப ஓய்வு பெற்று 1 வருடம் ஆகியும் எனக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் இதுவரை வழங்கப்படவில்லை. எஸ்.பி., டிஐஜி அவர்களிடம் பலமுறை தெரிவிக்க எந்த தகவலும் இல்லை.

நான் காவல்துறையில் 28 ஆண்டுகள் வேலை செய்து எந்தவித தண்டனையும் இல்லாமல் சிறப்பாக வேலை செய்து வந்தேன்.

நான் திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்தில் பணி செய்து வந்தபோது என்னால் ஒருவரின் உயிரையும் காப்பாற்றி உள்ளேன். இதுதான் எனக்கு சந்தோஷம். நல்லவர்கள் வேலை செய்ய வருவது இல்லை. காவல்துறை ரொம்ப மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

– சிவக்குமார், தலைமை காவலர் எண் 110

An ordinary police requests Tamil Nadu cm

காதலர் தினத்தில் ‘அரபி குத்து..’ போடும் விஜய் சிவகார்த்திகேயன் அனிருத் கூட்டணி

காதலர் தினத்தில் ‘அரபி குத்து..’ போடும் விஜய் சிவகார்த்திகேயன் அனிருத் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் ரிலீஸ் செய்திட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் “அரபி குத்து” பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள் காதலர் தினத்தை ஒட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார்.

இது பற்றிய அறிவிப்பில்… கோலமாவு கோகிலா & டாக்டர் பட பாடல்கள் ப்ரோமோ போல இந்த பாடலுக்கும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இந்த ப்ரோமோ வீடியோவில் சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் ஆகியோருடன் மற்றும் விஜய்யின் குரலும் இடம்பெற்றுள்ளது.

Arabic Kuthu – Beast First Single Promo is here

‘மாலை’ படத்தில் மாஸ்டர் ரீ-என்ட்ரி..; மகுடம் சூடுவாரா..?

‘மாலை’ படத்தில் மாஸ்டர் ரீ-என்ட்ரி..; மகுடம் சூடுவாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குநர் ராபர்ட் மறுபிரவேசம் செய்யும் ‘மாலை’ படத்தின் தொடக்க விழா!

நடனத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துப் பிரபலமானவர் ராபர்ட் மாஸ்டர். இவர் சற்று இடைவெளிக்குப் பின் மறுபிரவேசமாக ரீ-என்ட்ரி கொடுக்கும் படம் ‘மாலை’.

இப்படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா சென்னை ஆலப்பாக்கம் பிள்ளையார் கோவிலில் விமரிசையாக நடைபெற்றது.

ராபர்ட் மாஸ்டர் கதை நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குபவர் ராஜேஷ் ராஜா. இவர் சில குறும்படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர்.

இயக்குநர் ராஜேஷ் ராஜா அரை மணி நேரத்தில் சொன்ன கதை பிடித்துப்போய் படத்தில் நடிக்கச் சம்மதிக்கும் அளவிற்கு அவர் கதை சொல்லும் விதம் ராபர்ட் மாஸ்டருக்குப் பிடித்து இருந்ததாகக் கூறுகிறார்.

அதை மீண்டும் விரிவாகச் சொல்லக் கேட்டபோதும் அவ்வளவு தெளிவாகக் கதை சொன்னதால் உடனே நடிக்க சம்மதித்து விட்டார்.

இப்படத்தில் சங்கீதா முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு முன் அவர் சின்னச்சின்ன வேடங்களில் சில படங்களில் தலைகாட்டியவர் .

மகாலட்சுமி என்கிற குழந்தை நட்சத்திரம் படத்தில் அறிமுகமாகிறது. மகாலட்சுமியின் நடிப்பாற்றலை இயக்குநர் சோதித்துப் பார்த்தபோது நடித்துக் காட்டிய விதம் இயக்குநரை வியக்கவைத்திருக்கிறது.

மேலும் பல அறிமுகமான முகங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை பாலகங்கா கிரியேஷன்ஸ் ஜி கே எம் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கும் ‘மாலை’ படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாகும்.

Dance Master Robert re entry in Maalai

தமிழ் தெலுங்கில் உருவாகும் படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்த 3 டாப் ஹீரோயின்ஸ்

தமிழ் தெலுங்கில் உருவாகும் படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்த 3 டாப் ஹீரோயின்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டில் பிரமாண்ட படங்களை தந்து மிகப்பெரும் நிறுவனமாக உலகெங்கும் புகழ்பெற்றிருக்கும் Viacom18 studios, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் திரைப்படத்திற்கு “நித்தம் ஒரு வானம்” என தமிழிலும் “ஆகாஷம்”என தெலுங்கிலும் தலைப்பிடப்பட்டுள்ளது.

தமிழில் தரமான படங்களை வழங்கி வரும் Rise East Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் Ra.கார்த்திக் இயக்கியுள்ளார்.

“நித்தம் ஒரு வானம்” நம் மனதின் நேர்மறை எண்ணங்களையும், அன்பையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது.

அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை பிரபல நடிகர் துல்கர் சல்மான் இன்று வெளியிட்டார்.

அஜித் அந்தரே, COO Viacom18 Studios படம் குறித்து கூறுகையில்..,
“Viacom18 Studios தயாரிப்பில், பல தளங்களிலும் மொழிகளிலும் தரமான கதைகள் சொல்ல முடியும் என நம்புகிறோம்.

எங்கள் தயாரிப்பில் சமீபத்திய தமிழ் மற்றும் தெலுங்கு படைப்புகளின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக இருமொழிகளிலும் இதயம் கவரும் ஒரு அழகான படைப்பை உருவாக்கியுள்ளோம்.

திறன் மிகுந்த நடிகர்கள், திறமையான புதிய இயக்குனர் மற்றும் அதீத திறமை கொண்ட தயாரிப்பாளர் குழுவுடன், உருவாகும் ‘நித்தம் ஒரு வானம்’ (தமிழ்) மற்றும் ‘ஆகாஷம்’ (தெலுங்கு) என இரண்டு படங்களும் பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்து வரும், பல சாதனைகளை தகர்க்கும் என்று நம்புகிறோம்”.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி இருக்கும் இப்படம், சென்னை, குலுமனாலி, சிக்கிம், கோவா, டெல்லி, சண்டிகர், கொல்கத்தா, விசாகப்பட்டினம், ஹைதராபாத், மதுரை, பொள்ளாச்சி என இந்தியாவின் பல்வேறு அழகான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்க, விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இசை வெளியீடு பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

தயாரிப்பாளர் – ஸ்ரீநிதி சாகர் (ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட்), வயகாம் 18 ஸ்டூடியோஸ்
இயக்குநர் – Ra.கார்த்திக்
ஒளிப்பதிவு – விது அய்யனா
இசை – கோபி சுந்தர்
கலை – எஸ். கமலநாதன்
படத்தொகுப்பு – ஆண்டனி
சண்டைப் பயிற்சி – விக்கி
எக்ஸிகுயுடிவ் புரொடுயுசர் – S.வினோத் குமார்
நடனம் – லீலாவதி குமார்
பாடல்கள் – கிருத்திகா நெல்சன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Viacom18 Studios & Rise East Entertainment Presents Ashok Selvan starrer ‘Nitham Oru Vaanam’

கடவுள் அருளால் ‘கூர்மன்’ சூட்டிங்கில் மேஜிக் நடந்தது… – ஜனனி ஐயர்

கடவுள் அருளால் ‘கூர்மன்’ சூட்டிங்கில் மேஜிக் நடந்தது… – ஜனனி ஐயர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Entertainment தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்கத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் நடிப்பில், உருவாகியுள்ள, சைக்கலாஜிகல், திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. இதன் கதை மனதில் உள்ளதை கண்டுபிடிக்கும் ஒரு பாத்திரத்ததை முதன்மை பாத்திரமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

மாறுப்பட்ட பாணியில் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை விழா இன்று படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில்…

முதலில் படக்குழுவினர் மனதில் உள்ளதை அறியும் மெண்டலிஸ்ட் அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை, பார்வையாளர்களுக்கு ஒரு சிறிய டெமோவாக, பார்வையாளர்களிலிருந்தே ஒருவரை அழைத்து, மனதில் நினைப்பதை கண்டுப்டிக்கும் நிகழ்வினை செய்துகாட்டினர். இதனை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.

இதனை தொடர்ந்து இப்படம் மூலம் மக்கள் தொடர்பாளர்களாக அறிமுகமாகும் பரணி அழகிரி மற்றும் திருமுருகன் ஆகியோருக்கு மக்கள் தொடர்பாளர் சங்கம் சார்பாக டைமண்ட் பாபு தலைமையில் மரியாதை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நடந்த விழாவில்

நடிகர் பாலசரவணன் பேசியதாவது…

‘கூர்மன்’ தலைப்பே வித்தியாசமானது, இங்கு நடந்த மெண்டலிஸ்ட் நிகழ்வும் வித்தியாசமாக இருந்தது. இதைப்போலவே படத்தின் திரைக்கதையும் உருவாக்கமும் மிக வித்தியாசமாக இருந்தது.

இந்த டீமும் வித்தியாசமானவர்கள் தான். இந்தப்படத்தில் இயக்குநரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். இந்தப்படத்தில் முதல்முறையாக கொஞ்சம் வயதானவராக வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளேன், எங்களுடன் ஒரு நாயும் நடித்தது அது இப்போது இல்லை என்பது வருத்தமாக உள்ளது. நண்பன் ராஜாஜியுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. படம் மிக அற்புதமாக வந்துள்ளது, அனைவரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் முருகானந்தம் பேசியதாவது…

கூர்மன் படத்தில் சின்ன கேரக்டர் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ஆனாலும் நடித்தேன். அதற்கு காரணம் தயாரிப்பாளர் தான், மதன் மிகவும் நல்ல தயாரிப்பாளர். ஒரு படம் தோற்றால் யாருக்கு வேண்டுமானாஅலும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் ஆனால் தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கிடைக்காது. அவர் ஜெயிக்க வேண்டும். நண்பன் ராஜாஜி அவருடன் எங்கிட்ட மோதேதே படம் செய்துள்ளேன். இப்படத்தில் நன்றாக நடித்துள்ளார்.

இயக்குநர் கத்தி எடுத்து குத்தப்போறாங்க என்பதையே, சத்தமே இல்லாமல் அமைதியாக சொல்வார். படத்தை அழகாக எடுத்துள்ளார் இப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. எல்லோருக்கும் வாழ்த்துகள் நன்றி.

நடிகர் ஆடுகளம் நரேன் பேசியதாவது…

கூர்மன் பிஜு கதை சொன்னபோது அவனிடம் எப்ப வரனும்னு சொல்லு வர்றேன் என்று சொன்னேன், அவனை எனக்கு நன்றாக தெரியும். ஒரு சிறு காட்சிக்கு பின்னால் அடுக்கடுக்காக நிறைய விசயங்கள் வைத்திருந்தார். எனக்கு புரிய கஷ்டமாக இருந்தது. போலீஸ் வேடம் நிறைய செய்திருந்தாலும் இது வித்தியாசமாக இருந்தது. கூட நடித்தவர்கள் அனைவரும் கேஷிவலாக நடித்தார்கள், எல்லோருக்கும் வாழ்த்துக்கள் இது நல்ல பொழுது போக்கு படமாக இருக்கும். படம் வற்றி பெற வாழ்த்துகள்.

எடிட்டர் தேவராஜ் பேசியதாவது..

படத்தில் வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் மதன் மற்றும் இயக்குநர் பிஜுவுஜ்கு நன்றி. பிஜுவும் நானும் 12 வருட நண்பர். மற்ற படத்திற்கும் இப்படத்திற்கும் புட்டேஜிலேயே நிறைய வித்தியாசம் இருந்தது. எடிட்டிங்கில் நான் செய்ய வேண்டியதை திரைக்கதையில் அவரே வைத்திருந்தார். படம் நன்றாக வந்துள்ளது படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் பிரவீன் பேசியதாவது…

இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. டிரிப் படத்திற்கு பிறகு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு. மதன் எப்போதோ சொன்னது, படம் செய்யும் போது என்னை கூப்பிட்டு வாய்ப்பு தந்தார். இதில் இரண்டவது லீட் மாதிரி ஒரு முக்கியமான வேடம், கேட்டபோதே இதில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன், என்னுடன் நடித்த அனைவரும் அருமையாக நடித்தார்கள்.

ராஜாஜி, பாலாசரவணன் இருவரும் நிறைய படங்கள் நடிப்பவர்கள் என்னை ஆதரித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
இந்தப்படத்தை கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார் மதன், இந்தப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் நன்றி.

சூப்பர் குட் சுப்ரமணி பேசியதாவது…

சமீபத்தில் உலகம் முழுக்க வெற்றி பெற்ற படம் ஜெய்பீம், அது கூடிய சீக்கிரத்தில் ஆஸ்கர் பெறும், அந்தப்படத்தில் எனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது அந்தப்படம் போல் இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றிபெறும். பிஜுவை உதவி இயக்குநராக பல படங்களில் பார்த்திருக்கிறேன். அவர் உழைப்பு தெரியும். அவர் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். ஜெயிப்பார் நன்றி.

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் சதீஷ் பேசியதாவது…

என்னுடன் பயணித்த என் குழுவிற்கும், அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை அனைவரும் கடுமையாக உழைத்து உருவாக்கியிருக்கிறார்கள், இந்தப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வந்து விடுவோம் படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

பாடலாசிரியர் உமா தேவி பேசியதாவது…

கூர்மன் என இலக்கிய விகுதியை, தமிழுக்கு தந்திருக்கும் குழுவிற்கு என் நன்றிகள். இப்படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். பிரிட்டோ சந்தோஷ் நாரயணன் மூலம் அறிமுகமானவர், அவரது இசை வித்தியாசமாக இருந்தது. கூர்மனில் வரும் இரண்டு பாடல்களும் எல்லோருக்கும் பிடிக்கும். ஆம்பல் பூ எனும் பாடல் திவாகர் வைசாலி பாடியுள்ளார்கள், இன்னொரு பாடல் பிரதீப் பாடியுள்ளார்.

நாசூக்காக வேலை வாங்குவதில் இந்தக்குழு கில்லாடி, பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து, பாடலை கவிதையாய் வேண்டுமென எழுதி வாங்கினார்கள். பாடலும் படமும் நன்றாக வந்துள்ளது. இந்தப்பாடல்களுக்கு ஆதரவு தந்து வெற்றி பெற செய்வீர்கள் என நம்புகிறேன் நன்றி

இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ பேசியதாவது…

தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. பாடல் இசை பற்றி இயக்குநரிடம் கேட்டால் அவர் என்ன நினைக்கிறார் என்பதே தெரியாது, அவர் உதவியாளர்களிடம் கேட்டால் தான் தெரியும், நான் கொடுத்த முதல் சில டியூன்களே அவர்களுக்கு பிடித்திருந்தது அது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

இரண்டு பாடல்களுமே உமாதேவி மேடம் கரக்சனே சொல்ல முடியாமல் எழுதி தந்துவிட்டார். இன்னொரு பாடலை பிஜுவே எழுதி விட்டார். இந்தப்படத்தில் பாடலை கேட்டு, அவரது கருத்துக்கள் கூறி, எனக்கு வழிகாட்டிய சந்தோஷ் நாராயணன் சாருக்கு நன்றி. பாடல் பிடித்திருந்தால், ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ராஜாஜி பேசியதாவது…

நன்றி சொல்லும் மேடையாக இதை நினைத்துகொள்கிறேன். MK Entertainment தயாரிப்பாளர் ‘ தான் மட்டும் நல்லாருக்கனும்னு நினைப்பவர் அல்ல தன்னை சுற்றியிருக்கும் எல்லோரும் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைப்பவர்’ நான் நன்றாக இருக்க வேண்டுமென இந்தக்கதை கேட்டவுடன் என்னை அழைத்து நடிக்க சொன்னார்.

சுரேஷ் இப்படத்தில் பெரும் உதவியாக இருந்தார். இப்படத்தில் ஒரு ஜெர்மன் செப்பர்ட் நாய் நன்றாக நடித்துள்ளது அது இப்போது இல்லை என்பது வருத்தமே. பிஜு என்னை முதலில் சந்தித்தபோது ஆடிசன் பண்ணலாம் என்றார் ஒண்ணுல்ல, இத பண்ணா போதும்னு சொல்லியே தலைகீழாக நிற்க வைத்தார், படத்தில் நன்றாக வேலை வாங்கினார். படத்தை அருமையாக எடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் டோனிஜி பின்னணி இசையில் கலக்கியுள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள், இந்தப்படத்தில் கேரக்டர் ரொம்ப முக்கியம் நரேன் சார் நிறைய சொல்லிக்கொடுத்தார்.

பாலசரவணன் உடன் வேலை செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. முருகானந்தம் இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் எங்கள் படத்திற்கு நேரம் ஒதுக்கி நடித்து தந்தார் என் நெருங்கிய நண்பர். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் ஒரு தரமான படமாக இருக்கும் வெளியீட்டுக்கான வேலைகள் நடந்து வருகிறது. மிகச்சிறந்த படமாக இருக்கும் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் பேசியதாவது…

எல்லோரும் இப்படத்தில் அவரவர் வேலையை ஈஸியாக செய்து தந்தார்கள், அதனால் தான் இந்தப்படம் நடந்தது. நான் எதுவும் செய்யவில்லை. ஒரு தயாரிப்பாளர் 40 நிமிடத்தில் இந்தப்படத்தின் கதையை கேட்டு ஓகே சொன்னார். சினிமாவில் அது அவ்வளவு எளிதாக நடக்காது அதற்காக மதன் சாருக்கு நன்றி.

இந்தப்படத்தை சிக்கல் இல்லாமல் உருவாக்க காரணமாக இருந்த சுரேஷ் சாருக்கு நன்றி. நாயகன் ராஜாஜி தலைகீழாக நிற்க வைத்தேன் என்று சொன்னார். ஆனால் நான் என்ன சொன்னாலும் அதை மறுபேச்சில்லாமல் செய்தார். தலைகீழாக நிற்பாரா என நினைத்தேன் ஆனால் நின்று அசத்தி விட்டார். ஜனனி ஐயர் தமிழ் பேசும் நாயகி வேண்டுமென தான் அவரை நடிக்க வைத்தேன்.

ஒரு நாளில் நான்கைந்து காட்சியெல்லாம் நடித்தார். அட்டகாசமாக நடித்தார். நரேன் சார் எனக்காக நடியுங்கள் என்றேன், உனக்காக நடிக்கிறேன் என நடித்து தந்தார். உமா தேவி மேடம் அட்டகாசமாக பாடல் எழுதி தந்துள்ளார். அவருக்கு நன்றி. பிரிட்டோ அருமையாக இசையை தந்துள்ளார். ஒரு நல்ல படம் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை ஜனனி ஐயர் பேசியதாவது…

பிரையன் B. ஜார்ஜை தெகிடி படத்திலிருந்தே தெரியும், அவரிடம் நீங்கள் படம் எடுக்கும்போது வேறு யாரையாவது நாயகியாக போட்டால் சண்டை போடுவேன் என்றேன் ஆனால் உண்மையிலேயே என்னை நடிக்க வைத்துவிட்டார். இந்தக்கதையே வித்தியாசமாக இருந்தது என்று சொன்னால் அது வழக்கமாக இருக்கும்.

ஆனால் இன்று இங்கு நடந்த நிகழ்வை பார்த்திருந்தால் உங்களுக்கே தெரியும். நீங்கள் இங்கு பார்த்த அதே அளவு ஆச்சர்யம் படத்திலும் இருக்கும். படத்தில் ஒரு மேஜிக் நடந்தது ஒரு நாள் 5 காட்சி எடுக்க வேண்டும் ஆனால் அன்று நல்ல மழை, அதனால் மழையில் காட்சியை மாற்றி எடுத்தோம் அப்ப்டியும் மழை மாலை வரை நிற்காமல் பெய்ய வேண்டுமே என தவித்தோம், ஆனால் மேஜிக்காக கடவுள் ஆசிர்வாதத்தில் மழை நிற்காமல் பெய்தது. அந்த ஆசிர்வாதம் படத்திற்கும் கிடைக்க வேண்டும். படம் பாருங்கள் பிடிக்கும் நன்றி.

இப்படத்தின் இசைத்தட்டை நடிகர் நரேன் வெளியிட நடிகை ஜனனி ஐயர் உடன் படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

தொழில்நுட்ப குழு விபரம்
எழுத்து இயக்கம் பிரையன் B. ஜார்ஜ்
ஒளிப்பதிவு – சக்தி அர்விந்த்
இசை – டோனி பிரிட்டோ
எடிட்டிங் – S. தேவராஜ்
கலை – கருணாநிதி
ஒலி வடிவமைப்பு – தாமஸ் குரியன்
ஸ்டண்ட் – ஸ்டன்னர் ஷாம்
உடை வடிவமைப்பு – டினா ரோஸாரியோ
விஷுவல் எபெஃக்ட்ஸ் – R.ஜீவரத்தினம்
புரடக்சன் எக்ஸிக்யூட்டிவ் – D.நரசிம்மன்
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – S.கணேஷ், சதீஷ்பாபு
மேக்கப் – U.K.சசி
ஸ்டில்ஸ் – ஜீகே
மக்கள் தொடர்பு – பரணி அழகிரி, திருமுருகன்
இணை தயாரிப்பு – சுரேஷ் மாரிமுத்து
தயாரிப்பு – MK

Actress Janani Iyer talks about her working experience in Koorman

ரிலீசுக்கு வரிசை கட்டிய 5 படங்கள்..; அண்ணாமலையாரிடம் ஆசி பெற்ற அருண்விஜய்

ரிலீசுக்கு வரிசை கட்டிய 5 படங்கள்..; அண்ணாமலையாரிடம் ஆசி பெற்ற அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அருண்விஜய்.

படத்திற்குப் படம் தனது தனித்துவமான நடிப்பாலும் தன்னார்வ தொண்டு செயல்களினாலும் பல ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் அருண்விஜய்.

தனது நடிப்பில் உருவான ‘சினம்’, ‘அக்னிசிறகுகள்’, ‘அருண்விஜய்யின் ‘பார்டர்’, ‘யானை’, ‘ஓ மை டாக்’ படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருவதைத் தொடர்ந்து நேற்று (6/02/2022) திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையாரை தரிசித்தார்.

இறைவனின் அருளோடு அனைத்து படங்களும் வெற்றி பெற்று தமிழ் திரையுலகம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என வேண்டிக் கொண்டதாகப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

நேற்று முன் தினம் இரவு (05/02/2022) ரசிகர்களுடன் இணைந்து நடிகர் அருண் விஜய் கிரிவலம் மேற்கொண்டார்.

Arun Vijay visits Annamalaiyar temple for worship

More Articles
Follows