மீடியாக்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வேன்..; பொங்கும் அமலாபால்

amala paul stillsகொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அழகேசன் தனக்கு பாலியல் ரீதியான அணுகுமுறையில் பேசியதாக அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி புகார் அளித்தார்.

இதனால் அழகேசனை போலீஸார் 1 மணி நேரத்தில் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தைச் சார்ந்த பல்லாவரம் பாஸ்கர் என்பவரும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அமலாபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

கடந்த ஜனவரி 31ம் தேதி சென்னையின் ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் நான் நடன பயிற்சியில் ஈடுபட்ட போது அங்கு வந்த ஒருவர், என்னை அணுகி, மலேசியாவில் பிப்ரவரி 3ம் தேதி நடக்கும் விழாவுக்கு பிறகு, அவருடன் இரவு உணவில் கலந்து கொள்ள அழைத்தார்.

அப்படி என்ன விஷேசமான டின்னரா என நான், அவரை குறுக்கு கேள்வி கேட்டேன். அதற்கு அவர், அலட்சியமாக உனக்கு தெரியாதா? என்ற பாணியில் பேசினார். நான் என் நலம் விரும்பிகள், வேலையாட்களிடம் என்னை மீட்க அழைத்தேன். என்னுடைய ஆட்கள் அவரை நோக்கி சென்றபோது, அவர் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க, ‘’அவளுக்கு விருப்பமில்லைனா, இல்லை’’’’னு சொல்லலாமே, இது என்ன பெரிய விஷயமா?” என்றார்.

பின்னர் அங்கிருந்து, எங்கள் குழுவினரை தள்ளி விட்டு, தப்பியோட முயன்றார். அவரை பிடித்து ஸ்டுடியோவில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அவரின் செல்போனில் என்னுடைய சமீபத்திய மொபைல் நம்பர் மற்றும் அந்த விழாவில் கலந்து கொள்ளும் நடிகைகளுடைய விபரங்கள் அனைத்தும் இருந்தன. அவரை மாம்பலம் போலீசில் ஒப்படைத்தோம். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நானும், காவல் நிலையம் விரைந்து சென்றேன்.

இந்த பிரச்னையில் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். விசாரணையில் பல்வேறு ஆதாரங்களை திரட்டியதோடு, இந்த மோசடியில் அச்சாணியாக செயல்பட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். சந்தேகத்தின் பிடியில் இருக்கும் இன்னும் சிலரை கைது செய்ய பிடி வாரண்டுகளும் தயார் நிலையில் உள்ளன. அதோடு, அவர்களது விசாரணையை மேலும் துரிதப்படுத்தி, இந்த மோசடியில் யாரெல்லாம் உடந்தை என்பதையும் வெளி கொண்டு வர வேண்டுகிறேன்.

ஒரு சில மீடியாக்கள் அந்த நாளில் என்ன நடந்தது என்பதையும், யார் குற்றவாளி என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளாமலேயே, என்னை பற்றியும், என் மேலாளரை பற்றியும் தவறான செய்தியை பரப்புகிறார்கள். விசாரணை நடந்து வருகிறது, அதற்கு தடையாக நான் இருக்க கூடாது என்பதாலேயே, நான் அமைதி காத்து வருகிறேன்.

ஆனால் அந்த மாதிரி கீழ்த்தரமாக செய்தி வெளியிடும் மீடியாக்கள், மீது அவதூறு வழக்கு தொடரவும் தயங்க மாட்டேன். இந்த அறிக்கை கூட, சென்னை காவல் துறையின் விசாரணையில் எங்கள் குழு மீதோ, மேலாளர் பிரதீப் குமார் மீதோ எந்த தவறும் இல்லை என்பதை அறிவிப்பதற்காக தான் வெளியிடுகிறேன்.

Overall Rating : Not available

Latest Post