தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமா துறை தாண்டி பல திறமைகளுக்கு சொந்தக்காரன் நடிகர் தல அஜித்.
பைக் ரேஸ், கார் ரேஸ், ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது, போட்டோகிராபி, துப்பாக்கி சுடுதல் பயிற்சி் என பல துறைகளில் இவரின் சாதனைகள் அதிகம்.
தற்போது சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்.
இந்த நிலையில் 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.
முதலிடம் பிடித்த அஜித்துக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
இதனையறிந்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் தல கால் புரியாமல் கொண்டாடி வருகின்றனர்.
Ajith Received Gold Medal at 46th TN State Shooting Championship
#CongratsTHALAAjith