சானியா மிர்சா வாழ்க்கை வரலாற்று படத்தில் அஜித்-தனுஷ் பட ஹீரோயின்.?

சானியா மிர்சா வாழ்க்கை வரலாற்று படத்தில் அஜித்-தனுஷ் பட ஹீரோயின்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

taapsee pannuபிரபலங்களின் வாழ்க்கையை திரைப்படமாக்குவது வழக்கமான ஒன்றுதான்.

தேசிய தலைவர்கள் முதல் சாதனையாளர்கள் வாழ்க்கையை படமாக்கி வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோரது வாழ்க்கை படங்கள் அதாவது (பயோபிக்) படங்கள் ஏற்கெனவே ரிலீசாகி வசூல் வேட்டையாடியது.

தற்போது கபில்தேவ், சாய்னா நேவல், ஜூலன் கோஸ்வாமி, கர்ணம் மல்லேஸ்வரி போன்ற பிரபலங்களின் வாழ்க்கை படங்களாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாக உள்ளது.

ரோனி ஸ்குருவாலா என்பவர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

சானியா மிர்சா வேடத்தில் நடிக்க டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜின் பயோபிக்கான ‘சபாஷ் மித்து’ எனும் படத்தில் நடித்து வருகிறார் டாப்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனுஷ் உடன் ஆடுகளம், அஜித்துடன் ஆரம்பம் படங்களில் நடித்தவர்.

Ajith and Dhanush film heroine to star in Sania Mirza’s biopic ?

தாதா சாகேப் பால்கே விருதின் வரலாறு..: ரஜினிக்கு முன்பே பெற்ற நட்சத்திரங்கள் யார்.? ஒரு பார்வை

தாதா சாகேப் பால்கே விருதின் வரலாறு..: ரஜினிக்கு முன்பே பெற்ற நட்சத்திரங்கள் யார்.? ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஏப்ரல் 1…. தமிழக தேர்தல் நேரத்திலும் மிகவும் பரபரப்பாக பேசப்படும் பொருளாக மாறியுள்ளது தாதா சாகேப் பால்கே விருது.. இதற்கு முக்கிய காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அந்த விருதின் வரலாறு குறித்த பார்வை இதோ…

தாதா சாகேப் பால்கே விருது..: இந்திய சினிமா துறையில் பெரும் சாதனை படைக்கிறவர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது இது.

இந்திய சினிமாவின் தந்தை என்று கருதப்படும் தண்டிராஜ் கோவிந்த பால்கேவின் பெயரில் வழங்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் முழுநீள சினிமாவாகக் கருதப்படும் ராஜா ஹரிச்சந்திராவை 1913 ஆண்டில் இயக்கி தயாரித்தார் இவர்.

அதற்கு முன்பு வரை திரைப்படங்கள் ஊமைப்படங்களாகவே இருந்தது.

அதை மாற்றிக் காட்டி தனது ‘ராஜா அரிச்சந்திரா’ திரைப்படம் மூலம் மாற்றத்தை தொடங்கியவர் தான் தாதா சாகேப்.

எனவே அவரது பெயரிலேயே சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்பட்டு வருகிறது.

1969ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் மிகப் பெரும் பங்களித்தவர்களை கௌரவப்படுத்தும் விதத்தில் இந்த விருதை அறிமுகப்படுத்தியது இந்திய அரசு.

முதன்முதலாக இந்த விருது இந்திய சினிமாவின் முதல் பெண் என்று கருதப்படும் தேவிகா ராணிக்கு வழங்கப்பட்டது.

அவருக்குப் பிறகு பிருத்விராஜ் கபூர், நௌஷத், எல்.வி. பிரசாத், சத்யஜித் ரே, வி. சாந்தாராம், நாகி ரெட்டி, ராஜ் கபூர், லதா மங்கேஷ்கர், நாகேஸ்வரராவ், திலீப் குமார், ராஜ்குமார், சிவாஜி கணேசன், ஆஷா போஸ்லே, யாஷ் சோப்ரா, தேவ் ஆனந்த், மிருணாள் சென், ஷ்யாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், கே. பாலச்சந்தர், குல்ஸார், கே. விஸ்வநாத், அமிதாப் பச்சன் உள்ளிட்டோருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது 2021 மே 3ஆம் தேதி ரஜினிகாந்த் இந்த விருதை பெறவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் தலைவா….

2a852108b4c1425ca1fdb30fc9493026 (1)

Everything you need to know about #DadasahebPhalkeAward

தமிழக தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளே டெல்லியில் ரஜினிக்கு கௌரவம்

தமிழக தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளே டெல்லியில் ரஜினிக்கு கௌரவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth (6)இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு ஏற்கெனவே கௌரவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தகவலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில் வெளியிட்டார். அந்த ட்வீட்டில் :

“இந்தியத் திரைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான 2019 ‘தாதா சாகேப் பால்கே’ விருதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியராக அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது.

நடுவர் குழுவில் இருந்த ஆஷா போன்ஸ்லே, சுபாஷ்கை, மோகன்லால், சங்கர், பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு நன்றி.”

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விருதுக்கான விழா இந்திய தலைநகர் டெல்லியில் வருகிற மே மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ளதாம்.

மே 2ஆம் தேதி தான் தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

எனவே இந்த மாநிலங்களின் அடுத்த முதல்வர் யார்? என்ற முழுமையான தகவல்கள் மே 3க்குள் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor #Rajinikanth, fondly known as Thalaiva by his fans, will receive the 51st #DadaSahebPhalke award, India’s highest film honour, on May 3, 2021.

He had also been honoured with the Padma Bhushan & Padma Vibhushan in the past.

@rajinikanth @MIB_India https://t.co/kCyrgLb358

Super Star Rajinikanth will receive the 51st #DadaSahebPhalke award, on May 3, 2021.

ஆ.ராசாவின் ஆபாச பேச்சு.; பிரச்சாரம் செய்ய தடை போட்டது தேர்தல் ஆணையம்

ஆ.ராசாவின் ஆபாச பேச்சு.; பிரச்சாரம் செய்ய தடை போட்டது தேர்தல் ஆணையம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DMK Raja (2)தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக எம்பி ஆ.ராசா பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

முதல்வரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனவே ராசா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து மனு மீதான உரிய நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் ஆ.ராசா மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் தமிழகம் & தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையும் அனுப்பியது.

இதனையடுத்து புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆ.ராசா தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் முதல்வருக்கு எதிரான விமர்சனம் குறித்து ஆ.ராசா அளித்த விளக்கம் திருப்தி இல்லை எனவும் அவர் 2 நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்தது தேர்தல் ஆணையம்.

அத்துடன் திமுகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்தும் ஆ.ராசாவின் பெயரை நீக்கவும் உத்தரவிட்டது.

தேர்தல் விதிமுறைகளை மீறி ஆ.ராசா
பேசியது கண்டிக்கத்தக்கது,

இனி எச்சரிக்கையுடன் பேச வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Election Commission warns DMK Raja for his controversy speech

ராம் சரண் படத்தை இயக்கக்கூடாது..; ஷங்கருக்கு தடை விதிக்க கோரி லைகா வழக்கு

ராம் சரண் படத்தை இயக்கக்கூடாது..; ஷங்கருக்கு தடை விதிக்க கோரி லைகா வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shankar (1)லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’.

கடந்த ஆண்டு இப்பட படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்டது.

அப்போது நிறுத்தப்பட்ட, இப்பட படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு என பல பிரச்னைகளால் அதன்பின் சூட்டிங் தொடங்கப்படவில்லை.

அதன்பின் பிக்பாஸ் ஷோ, காலில் ஆப்ரேசன், அரசியல் கட்சி தேர்தல் பிரச்சாரம் என கமல் பிஸியாகிவிட்டார்.

இதனால் வெறுத்துப்போன டைரக்டர் ஷங்கர் தெலுங்கில் தில் ராஜு தயாரிக்க ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார்.

இதனையடுத்து பாலிவுட்டிலும் ஷங்கர் ஒரு படம் (அந்நியன் ரீமேக்) இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷங்கருக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் புகார் அளித்துள்ளது.

அதில்… “இந்தியன் 2 படத்திற்காக போடப்பட்ட 236 கோடி ரூபாய் பட்ஜெட்டில், இதுவரை 180 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டது.

இயக்குனர் ஷங்கருக்கு பேசப்பட்ட சம்பளமான 40 கோடி ரூபாயில் 14 கோடி ரூபாயை கொடுத்து விட்டோம்.

அவருக்கு கொடுக்க வேண்டிய மீதமுள்ள 26 கோடி ரூபாயையும் நீதிமன்றத்தில் இப்போதே கட்டிவிடுகிறோம்.

ஆனால் அவர் ‘இந்தியன் 2’படத்தை முடிக்கும் வரை மற்ற படங்களை இயக்க கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா கூறியதாவது…

“இயக்குனர் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் அளிக்க முடியாது எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

இதுகுறித்து, இயக்குனர் ஷங்கர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Lyca case filed against director Shankar

JUST IN ரஜினியை தலைவா என அழைத்து மோடி வாழ்த்து…; பழனிச்சாமி ஸ்டாலின் தமிழருவி வைரமுத்து பாரதிராஜா வாழ்த்து

JUST IN ரஜினியை தலைவா என அழைத்து மோடி வாழ்த்து…; பழனிச்சாமி ஸ்டாலின் தமிழருவி வைரமுத்து பாரதிராஜா வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini modi (2)தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

ரஜினியை தலைவர் என சொல்லி வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி.

இதோ அவரது ட்வீட்…

Popular across generations, a body of work few can boast of, diverse roles and an endearing personality…that’s Shri @rajinikanth Ji for you.

It is a matter of immense joy that Thalaiva has been conferred with the Dadasaheb Phalke Award. Congratulations to him.

தமிழக முதல்வர் பழனிச்சாமி தன் ட்வீட்டில்..

தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன்.

திரைத்துறையில் தங்களது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது.

தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

திமுக தலைவர் ஸ்டாலின் தன் ட்வீட்டில்…

இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் @rajinikanth-க்கு, #DadasahebPhalkeAward கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.

தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது!

நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்! https://t.co/VFYsXWoAhC

கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து:

“தாதா சாகேப் பால்கே விருதுபெறும் ரஜினிக்கு என் வாழ்த்துக்கள்

அவரது கலைப்பயணத்தின்
முற்றுப்புள்ளி என்று கருதிவிடமுடியாது.

அடுத்த சிகரம் அடைவதற்கான
ஆக்சிஜன் என்று கருத வேண்டும்;
அவர் கருதுவார்…” என வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழருவி மணியன் தன் ட்விட்டரில்…

இந்தியத் திரைத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் திருமிகு. ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள்
– காந்திய மக்கள் இயக்கம்.

பாரதிராஜா தன் வாழ்த்து செய்தியில்…

மூன்று தலைமுறைகளின் முடிசூடா மன்னனாகத் திகழும் எனதருமை சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்துக்கு “தாதா சாகேப் பால்கே விருது” கிடைத்தமைக்கு உண்மையிலேயே பெருமை கொள்கிறேன்.

கலைஞன் என்பவன் மக்களை தன் பக்கம் ஈர்க்கும் திறன் கொண்டவனாக இருப்பது முக்கியம்.

எத்தனை கால கட்டங்களைக் கடந்தாலும், தன்னை இன்னமும் உச்ச நாற்காலியில் இருத்தி வைக்க எத்துணை உழைப்பு வேண்டுமோ அத்தனை உழைப்பையும் கொடுத்து மக்களை தன் பக்கமே ஈர்த்து வைத்திருக்கும் இந்திய நாயகன், என் நண்பன், சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்திற்கு ஏற்புடைய விருதாகவே எண்ணி மகிழ்கிறேன்.

திரு. ரஜினிகாந்த் மேலும் எத்தனை உயரம் உண்டோ அத்தனை உயரத்தையும் அடைய அன்பின் வாழ்த்துகள்.

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் சார்பாகவும் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன். இந்திய சினிமாவின் இந்த உயரிய விருதை உரிய நேரத்தில் வழங்கிய மத்திய அரசிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாசத்திற்குரிய இயக்குநர்,

பாரதிராஜா
தலைவர்
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்.

PM Modi wishes to Super Star Rajinikanth on #DadasahebPhalkeAward

More Articles
Follows