பாலியல் குற்றங்களுக்கு எதிராக உருவாகி இருக்கும் ‘அகடு’

பாலியல் குற்றங்களுக்கு எதிராக உருவாகி இருக்கும் ‘அகடு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

agadu tamil filmசௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் அகடு. இதில் ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குனர் எஸ். சுரேஷ்குமார், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறத்தல்கள், உலக மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்கள் குறையவில்லை.

பாலியல் குற்றங்களுக்கு எதிராக அகடு திரைப்படம் உருவாகி வருகிறது. கொடைக்கானலுக்கு நான்கு இளைஞர்கள் சுற்றுலா செல்கிறார்கள்.

அங்கு சுற்றுலா வந்த 13 வயது சிறுமிக்கு நான்கு இளைஞர்களால் எதிர்பாராத ஒரு கொடூர செயல் நடைபெறுகிறது. அச்சிறுமிக்கு என்ன நடந்திருக்குமோ என்று எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவராஜ்சிங்காரவேலு இணை தயாரிப்பு செய்திருக்கிறார்.

ஜோகன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சாம்ராட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கபிலன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். படத்தொகுப்பை தியாகு கவனிக்கிறார். அகடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து இம்மாதம் வெளியாக இருக்கிறது.

Agadu – a film based against sexual crimes

வெற்றிமாறன் வெளியிட்டுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக்: உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது

வெற்றிமாறன் வெளியிட்டுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக்: உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Endravadhu Oru Naalசமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன. நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இணைகிறார் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி.

பல சம்பவங்கள் நாளிதழில் சிறு செய்தியாக வந்திருக்கும். அதை படித்துவிட்டு எளிதில் கடந்துவிடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. மனிதக் குலத்தின் இன்றியமையாத பகுதியான கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம்பெயர்வு பற்றிய கதை இது. தண்ணீர் பஞ்சம், குழந்தை தொழிலாளிகள், நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களின் முன்னிருக்கும் சவால்களை எல்லாம் காட்சியாக அமைத்து மக்களை யோசிக்க வைக்கும் வகையில் இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார்.

இந்தியாவின் கிராமப்புற மக்களின் எளிய வாழ்வு கால்நடைகளுடன் அவர்களது அழகான உறவைப் பற்றிய இந்தப் படத்துக்கு ‘என்றாவது ஒரு நாள்’ எனத் தலைப்பிட்டுள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள எதார்த்தமான வாழ்வியலை அப்படியே இந்தப் படத்தில் காணவுள்ளோம். அங்குள்ள வட்டார மொழியை பேசி அனைத்து நடிகர்களும் நடித்துள்ளது இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும்.

எதார்த்தமான படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள விதார்த் இதில் நடித்துள்ளார். வித்தியாசமான தனக்கு முக்கியத்துவமுள்ள கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் ரம்யா நம்பீசன் நாயகியாக புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ‘சேதுபதி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நம்மை கொள்ளைக் கொண்ட ராகவன் நடித்துள்ளார்.

‘தி தியேட்டர் பீப்பிள்’ என்ற நிறுவனம் இந்தப் படத்தின் மூலம் படங்கள் தயாரிப்பில் இறங்குகிறது. வித்தியாசமான அதே சமயத்தில் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் படங்களைத் தயாரிப்பதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். அதில் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம் தங்களுடைய முதல்படி என்று நம்புகிறார்கள். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக என்.சண்முக சுந்தரம், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன், எடிட்டராக மு.காசி விஸ்வநாதன் பணிபுரிந்துள்ளனர். அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தப் படத்தின் மூலம் ஒரு எதார்த்த வாழ்க்கையை நம் கண்முன் காணவிருக்கிறோம். இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Vetrimaran releases First Look of Endravadhu Oru Naal, a film based on real-life incidents!

அப்பாடா விபிஎஃப் விவகாரம் தீர்ந்தது.; புதிய படங்கள் ரிலீசாவதில் சிக்கல் இல்லை..

அப்பாடா விபிஎஃப் விவகாரம் தீர்ந்தது.; புதிய படங்கள் ரிலீசாவதில் சிக்கல் இல்லை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் நவம்பர் 10-ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துவிட்டது.

Virtual Print Fee எனப்படும் விபிஎஃப் கட்டணங்களை எங்களால் செலுத்த முடியாது. எனவே படங்களை வெளியிட மாட்டோம் என நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்தார்.

இதற்கு அனைத்து தயாரிப்பாளர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

ஆனால் தியேட்டர்கள் உரிமையாளர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து இரு தரப்புக்கும் பிரச்சினை உருவானது.

தற்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கும் டிஜிட்டல் நிறுவனத்திற்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பலமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு எட்டியுள்ளது.

டிஜிட்டல் நிறுவனங்கள் மார்ச் மாதம் முதல் 60 சதவீத கட்டணத்தை குறைத்துக்கொள்ள முன்வந்து இருப்பதால் புதிய திரையரங்குகளை வெளியிடலாம் என பாரதிராஜா தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில்…

“கடந்த இரண்டு மாதங்களாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், க்யூப் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இடையே விபிஎஃப் கட்டணம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

அந்த பேச்சு வார்த்தை இன்று இனிதே முடிந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், க்யூப் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அதன் படி, க்யூப் நிறுவனம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தற்போது இருக்கும் கட்டணத்தில் கணிசமான சதவீதத்தை குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 31.3.2021 தேதிக்குள், இந்த விபிஎஃப் பற்றிய ஒரு நிரந்தர தீர்வை மூன்று சாராரும் இணைந்து செய்து கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட துறை இந்த கொரோனா கால பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டும், புதிய திரைப்படங்கள் வெளியாவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், மூன்று சாராரும் இந்த சுமூகமான முடிவுக்கு வந்துள்ளனர்.

31.3.2021 தேதிக்குள், மூன்று சாராரும் இணைந்து விபிஎஃப் கட்டணம் பற்றிய ஒரு நிரந்தர தீர்வை எடுக்க உறுதி கொண்டுள்ளார்கள். அதன் மூலம், இந்த பிரச்சனை மீண்டும் தொடரக் கூடாது என்பதே அனைவரின் நோக்கம். இந்த ஒப்பந்தத்தின் மூலம், 31.3.2021 வரை தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை.

அதிக எதிர்பார்ப்பில் உள்ள பல பெரிய பட்ஜெட் படங்களும், நடுத்தர மற்றும் சிறு பட்ஜெட் படங்களும் தடையில்லாமல் இனிமேல் வெளியாகும். அதன் மூலம், பார்வையாளர்களுக்கு புதிய படங்களை திரையரங்குகளில் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். தமிழ் திரைப்படத்துறை அதன் மூலம் மொத்தமாக மீண்டு வர முடியும் என்று நாங்கள் மூன்று சாராரும் நம்புகிறோம்.

தமிழ் சினிமா மீண்டு வர எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் தமிழக முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட துறை சார்பிலும் மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம்”. இவ்வாறு பாரதிராஜா விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Decks cleared for release of new movies in TN

பீகார் டாக்டரை இரண்டாவது திருமணம் செய்த பிரபுதேவா

பீகார் டாக்டரை இரண்டாவது திருமணம் செய்த பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabhu devaநடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் பிரபுதேவா.

இவர் நடன இயக்குனராக இருந்தபோது துணை நடிகை ரமலத் என்பவரை காதலித்து 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் புற்றுநோய் காரணமாக 2008 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இதன் பின்னர் விஜய் நடித்த வில்லு படத்தை இயக்கியபோது, நடிகை நயன்தாராவை காதலித்தார். இதனால், மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்,

நயன்தாராவும் பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு மாறினார்.

ஆனால், இவர்களின் காதல் திடீரென முறிந்தது. 2012-ல் பிரிந்தனர்.

இந்த நிலையில், தற்போது பீகாரை சேர்ந்த பிசியோதெரபி டாக்டரை காதலித்து வந்ததாகவும் இரு வீட்டார் சம்மதத்துடன் அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்டுகிறது.

தற்போது தம்பதிகள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபுதேவா வீட்டில் வசித்து வருவதாக தவல்கள் வந்துள்ளன.

Actor Prabhu Deva gets married for the second time ?

‘சூரரைப் போற்று’ சூர்யாவுக்கு மகேஷ் பாபு பாராட்டு

‘சூரரைப் போற்று’ சூர்யாவுக்கு மகேஷ் பாபு பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mahesh babu suriyaசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று.

இந்த படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கு சினிமா பிரபலம் மகேஷ் பாபுவும் பாராட்டியுள்ளார்.

“சூரரைப் போற்று, என்ன ஒரு எழுச்சியூட்டும் படம். அற்புதமான இயக்கம், அற்புதமான நடிப்பு. டாப் பார்மில் சூர்யா. பிரகாசிக்கிறீர்கள் பிரதர். மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார்.

“மிகவும் நன்றி பிரதர், டன் நன்றிகள், ‘சரக்குவாரி பாட்டா’வுக்காகக் காத்திருக்கிறேன்,” என மகேஷ்பாபுவுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

Mahesh Babu praises Suriya’s Soorarai Pottru

இந்து மத நம்பிக்கைக்களை கொச்சைப்படுத்தும் ‘மூக்குத்தி அம்மன்’..; பொது மன்னிப்பு கேட்க இந்து தமிழர் கட்சி கோரிக்கை

இந்து மத நம்பிக்கைக்களை கொச்சைப்படுத்தும் ‘மூக்குத்தி அம்மன்’..; பொது மன்னிப்பு கேட்க இந்து தமிழர் கட்சி கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mookuthi ammanநயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ள படம் ‘மூக்குத்தி அம்மன்’.

இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், இந்துஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.

இந்த படத்தில் தன் பாணியில் அரசியல் நையாண்டி செய்திருந்தார் ஆர்ஜே. பாலாஜி.

இந்து மத போலி சாமியார்களையும் அவர்களின் அராஜகங்களையும் அப்பட்டமாக காட்டியிருந்தார்.

ஆனால் கிறிஸ்தவ மத போலி சாமியார்களின் காட்சிகளை மட்டும் நீக்கியிருந்தார். (அது ஏனோ..?)

தீபாவளியை முன்னிட்டு இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில் இந்து தமிழர் கட்சி ‘மூக்குத்தி அம்மன்’ படக்குழு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறது.

இது தொடர்பான அந்த கட்சியின் அறிக்கையில்.. ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் இந்துமத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதாகவும், இந்து மத சாமியார்களை வில்லன்கள் போல் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்து கடவுள் குறித்து அவதூறாக படமெடுத்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்பட காட்சிகளை நீக்க வேண்டும்.

படத்தின் தயாரிப்பாளரை (ஐசரி கணேஷ்) திருப்பதி தேவஸ்தான ஆலோசனை கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

படக்குழுவினர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mookuthi Amman team should ask public apology says Hindu Tamilar Party

More Articles
Follows