தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாண்டிராஜ் இயக்கத்தி்ல் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ ஆகிய படங்களில் நடிக்கப் போகிறார் சூர்யா.
இந்த படங்களை முடித்து விட்டு முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பார் என தகவல்கள் வருகின்றன.
ஏ.ஆர்.முருகதாஸ் – சூர்யா கூட்டணியில் ஏற்கெனவே வெளியான ‘கஜினி, ஏழாம் அறிவு’ ஆகிய படங்கள் இருவருக்குமே நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
10 வருடங்களுக்கு முன் அமைந்த கூட்டணி மீண்டும் அமையாதா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் விஜய் 65வது படத்திலிருந்து முருகதாஸ் விலகிவிட்டதால் டாப் ஹீரோவுடன் இணைய காத்திருக்கிறாராம் முருகதாஸ்.
எனவே தான் சூர்யா படத்தை இயக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
After 10 years Suriya and Murugadoss again joins hands together