‘அதிமேதாவிகள்’ பட நிறுவன அப்சல்யூட் பிக்சர்ஸின் முக்கிய அறிவிப்பு

‘அதிமேதாவிகள்’ பட நிறுவன அப்சல்யூட் பிக்சர்ஸின் முக்கிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anthony dasan‘அதிமேதாவிகள்’ படத்தைத் தயாரிக்கும் மால்கம் ஆகிய நான் முதற்கண் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைப்படத் தொழில் உட்பட அனைத்து தொழில்களையும் முடக்கி, அனைவரையும் மனச்சோர்வுக்குள்ளாக்கியிருக்கிறது சர்வதேச பரவலனான இந்த பெருந்தொற்று நோய்.

விரைவில் ஒவ்வொருவரும் இயல்பு நிலையை அடைந்து, தங்கள் வழக்கமான வாழ்வுக்குத் திரும்ப என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை நாம் உற்சாகப்படுத்த ஏதேனும் செய்வோம்…

‘அதி மேதாவிகள்’ படத்தின் படப்பிடிப்பை முழுமையாகப் பூர்த்தி செய்து, பின் தயாரிப்புப் பணிகளில் தற்போது நாங்கள் இருக்கிறோம். முழுமையான ஊரடங்கு காரணமாக ‘அதிமேதாவிகள்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை எங்களால் சிறப்புற நடத்த இயலாமல் போய்விட்டது.

பொதுவாக படத்தின் அனைத்து பாடல்களும் ஒன்றாகவே வெளியிடப்பட்டு, இறுதியில் சில மட்டுமே ரீ-மிக்ஸ் செய்யப்படும். ஆனால் எங்கள் படத்தின் ஒரு பாடலை மட்டும் ரீ-மிக்ஸ் செய்து வெளியிடும் வித்தியாசமான திட்டத்தில் நான் இறங்கியிருக்கிறேன். நகைச்சுவையான இந்த பாடல் வரிகளையும், அதற்கான நடன அசைவுகளையும் நீங்கள் வெகுவாக ரசிப்பீர்கள்.

சிறப்பான முறையில் ரீ-மிக்ஸ் செய்யும் எனது டி.ஜே.நண்பர்கள் ஏ-சென் மற்றும் மஜார் ஆகிய இருவரும்தான் இந்த யோசனையை எனக்குச் சொன்னார்கள்.

உடனடியாக இது குறித்து அருமையானதொரு கருத்துருவுக்கு செயல் வடிவமும் கொடுத்தார்கள்.

நாட்டுப்புறப்பாடலின் சாயலில் பாடகர் அந்தோணி தாசனை வைத்து இந்தப் பாடலை இனிமையான கிராமிய மணத்துடன் ரீ-மிக்ஸ் செய்து விட்டனர் டி.ஜே.நண்பர்கள்.

படத்தின் இயக்குநர் ஆர்.டி.எம். மற்றும் நாயகன் சுரேஷ் ரவி இருவரும் மறு சிந்தனையே இன்றி இந்த ரீ-மிக்ஸ் திட்டத்தை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு சிறப்பான முறையில் இதைக் கொண்டு வருகின்றனர்.

படத்தின் பிரதான பாத்திரங்களுக்கிடையே உள்ள நட்பை விளக்கும் வகையிலான கேலிச் சித்திர வடிவிலான படங்கள், பாடல் வரிகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

அப்சல்யூட் பிக்சர்ஸ் என்ற எங்கள் நிறுவனத்தின் யு-ட்யூப் சேனலில் இன்று (2020, ஆகஸ்ட் முதல் தேதி) மாலை ஆறு மணிக்கு வெளியாகிறது. பாடலைப் பார்த்து மகிழுங்கள்…

தைரியமாக இருங்கள் … சமூக இடைவெளியுடன் தனித்திருங்கள்… விழிப்புடன் இருங்கள்…நல்வாழ்த்துகள்.
2 Attachments

தல போல வருமா.? அஜித்தை பிரபலங்கள் பின்பற்ற திமுக MLA டி.ஆர்.பி. ராஜா வேண்டுகோள்

தல போல வருமா.? அஜித்தை பிரபலங்கள் பின்பற்ற திமுக MLA டி.ஆர்.பி. ராஜா வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TRB Rajaசினிமாவை தாண்டி பைக் ரேஸ் & கார் ரேஸ் என அனைத்திலும் சிறந்தவர் நடிகர் அஜித்.

இந்த நிலையில் அஜித்தின் ரேஸ் விளையாட்டுக்கள் குறித்து திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில்…

நடிகர் அஜித்தை பின்பற்றி, மற்றவர்களும் தங்களது பிரபலத்தை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள விளையாட்டுகளுக்கு ஆதரவு தர வேண்டும்!

என திமுக MLA டி.ஆர்.பி. ராஜா ட்வீட் செய்துள்ளார்.

சூர்யாவுக்கு நடிக்கவே தெரியாது.; நான் இருந்தா கீர்த்தி சுரேஷ் வரமாட்டாங்க.. – மீரா மிதுன்

சூர்யாவுக்கு நடிக்கவே தெரியாது.; நான் இருந்தா கீர்த்தி சுரேஷ் வரமாட்டாங்க.. – மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meera mithunகோலிவுட் ஹீரோஸ் & ஹீரோயின்ஸை வம்புக்கு இழுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் நடிகை மீரா மிதுன்.

சமீப காலமாக த்ரிஷா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவரை வம்புக்கு இழுத்தார்.

மேலும் ரஜினி & விஜய்யை பற்றி தவறாக பேசியுள்ளார்.

இதனிடையில் அஜித்தை மட்டும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

தற்போது சூர்யாவை வம்புக்கு இழுத்து அவரது ரசிகர்களை வெறுப்பேத்தி இருக்கிறார் மீரா மிதுன்.

சூர்யாவுக்கு ஆக்டிங் என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என கலாய்த்துள்ளார்.

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசன் இறந்தபின் சூர்யா அழ வேண்டும்.. பலமுறை டேக் எடுத்தார். நடிப்பே வரலை அவருக்கு.

நான் ஒரே டேக்கில் ஓகே வாங்கி விடுவேன்.

(சூர்யாவுக்கு நடிப்பின் நாயகன் எனவும் இன்னொரு பெயர் உண்டு என்பது இங்கே கவனிக்கத்தக்கது.)

சூப்பர் மாடல் மீரா நடித்த படம் என்று தானா சேர்ந்த படத்திற்கு மீடியா புரோமோசன் மீடியா பண்ணினாங்க.. அதான் சூர்யா டென்ஷனாயிட்டார்.

தானா சேர்ந்த கூட்டம் பட இசை விழாவுக்கு கூட நான் இருந்தா கீர்த்தி சுரேஷ் வரமாட்டாங்க சொன்னாங்க. என்னைய வர விடல..

சிவகுமார் குடும்பம் தான் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மாபியாக்கள் எனவும் தெரிவித்துள்ளார் மீரா.

மீரா மிதுன் நடித்த காட்சிகளை தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வெட்டி எடுத்து விட்டார்கள். அதான் இவ்வளவு ஆத்திரம் அம்மணிக்கு என்கிறார்கள் பலரும்.

அஞ்சுகம் – அமெரிக்கா ஜனாதிபதியா? ராசாத்தி – ராஜ குடும்பமா?.. உதயநிதியை உருட்டும் நெட்டிசன்ஸ்..; ஏன்.?

அஞ்சுகம் – அமெரிக்கா ஜனாதிபதியா? ராசாத்தி – ராஜ குடும்பமா?.. உதயநிதியை உருட்டும் நெட்டிசன்ஸ்..; ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanidhi stalinகோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்ட அரசாணை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் நடிகர் உதயநிதி.

தன் ட்விட்டர் பக்கத்தில்.. முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையாலும், தலைவர் @mkstalin அவர்களின் உழைப்பாலும் உருவான மெட்ரோ ரயில் நிலையத்துக்கு முதல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவரின் பெயரை வைத்துள்ளது அடிமைக்கூட்டம். மெட்ரோ ஆகாதென மோனோ கேட்டவர் பெயரை, கழக அரசால் வந்த மெட்ரோவுக்கு வைப்பது அறுவறுப்பின் உச்சம்!…

என பதிவிட்டார்.

இது குறித்து நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்த பதிவுகள் இதோ…

உங்கள் கட்சியில் திரு .ராசா,திருமதி.கனிமொழி யும் குற்றவாளி தானே எப்படி தூத்துக்குடி யில் நாடாளுமன்ற தேர்தலில் நின்றார் அப்ப திமுக விற்கு அறுவறுப்பு தெரியவில்லை..தானே..

ஹலோ வாரிசு தலைவரே, ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தவங்க பெயரை வைப்பது அருவருப்புனா, அஞ்சுகம் அம்மாள் என்ன அமெரிக்கா ஜனாதிபதியா இல்ல ராசாத்தி என்ன இராஜ குடும்பமா? https://t.co/HiQN8lg1Xy

ஹலோ உஸ் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குல அல்சைமர் நோய் வந்துருச்சின்னு சொன்னீங்களே உங்க தாத்தாவோட மூனாவது சம்சாரம் ராசாத்தீ அவங்க ஐநா சபை லீடருங்களா??? https://t.co/pkO1uEotvH

Attachments area

‘களவாணி 2’ பட வில்லனுக்கு ‘டேனி’ படம் தந்த புரோமோசன்

‘களவாணி 2’ பட வில்லனுக்கு ‘டேனி’ படம் தந்த புரோமோசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

danny posterகதாநாயகனாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்வர் துரை சுதாகர்.

அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய அவர் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து களவாணி 2 படத்தில் கலக்கினார்.

தற்போது வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் ‘டேனி’ படத்தில் மிடுக்கான தோற்றத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் டேனி திரைப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் துரை சுதாகர், கொலை குறித்து தனது கோணத்தில் புலனாய்வு செய்து வழக்கை முடிக்க, வரலட்சுமி அதே வழக்கில் இருக்கும் பல மர்மங்களை தனது விசாரணை மூலம் கண்டுபிடிக்கும் போது படத்தில் பல எதிர்ப்பார்க்காத திருப்பங்கள் ஏற்படுகிறது.

பிறகு வரலட்சுமியும், துரை சுதாகரும் இணைந்து தொடர் கொலைகளின் பின்னணி குறித்தும் உண்மையான குற்றவாளி யார்? என்பதை கண்டு பிடிக்கிறார்கள்.

வரலட்சுமி அளவிற்கு நிகரான கதாபாத்திரத்தை ஏற்று அதை சிறப்பாக செய்திருக்கிறார் துரை சுதாகர். இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இவரிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

எந்த வேடம் இருந்தாலும் சரி மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறும் துரை சுதாகர், முன்னணி இயக்குனர்கள் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே படம்

பஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

What the birds want to say will be screened at Bahamas country’தாய்நிலம்’ என்ற திரைப்படம் மூலம் மலையாளத்தில் இருந்து தமிழ் திரைப்பட உலகிற்கு காலெடுத்து வைதிருப்பவர் டாக்டர் அமர் ராமச்சந்திரன்…

மலையாளத்தில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் நடித்த தாய்நிலம் நிறைவு பெற்று ரிலீசிற்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் ’பக்ஷிகளுக்கு பறயான் உளது’ (பறவைகள் சொல்ல நினைப்பது ) கதாநாயகனாக நடித்துள்ளார்.

பஹாமாஸ் நாட்டின் உலக பெண்கள் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த விழாவிற்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு திரைப்படமும் இதுவே.

சுதா ராதிகா என்ற பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சந்தர்ப்பம் சூழலால் சில தவறுகளுக்கும் புதைக்கப்பட்ட மனநிலை கொண்ட ஒரு பறவைகள் ஆராய்ச்சியாளராக தன் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் டாக்டர் அமர் இராமச்சந்திரன் என்கிறார்கள் விழாத் தேர்வுக்குழுவினர்.

செல்லும் விழாக்களில் எல்லாம் பாராட்டுக்களை அள்ளி வருகிறது ’பக்ஷிகளுக்கு பறயான் உளது.’ அநேக திரைப்பட விழாக்களில் இதுவரை திரையிடப்பட்ட இப்படம் பஹாமாஸில் அதிலும் பெண்கள் திரைப்பட விழாவில் பங்கேற்பதால் ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் மிகப் பெருமையாக உள்ளது எனக் குறிப்பிட்டார் டாக்டர் அமர் ராமச்சந்திரன்.

இந்த திரைப்படத்தில் அமர் ராமச்சந்திரன், மீனாக்ஷி, நீலாஞ்சனா, லைலா, நமீதா ஆகியோர் நடித்திருக்கின்றனர்…டாக்டர் அமர் இராமச்சந்திரன் ஏற்கெனவே நடித்து தயாரித்திருக்கும் தமிழ் திரைப்படம் தாய்நிலம் இந்த வருடம் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கேற்க தயாராகி வருகிறது.

ஒரே வருடம் இரண்டு திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் டாக்டர் அமர் இராமச்சந்திரன்.

What the birds want to say will be screened at Bahamas country

More Articles
Follows