தனது மகனுக்கு GUCCI என பெயர் வைத்த திருமணமாகாத நடிகை வரலட்சுமி

தனது மகனுக்கு GUCCI என பெயர் வைத்த திருமணமாகாத நடிகை வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பலரது வீட்டில் செல்லப்பிராணி என்றால் அது நாய்தான்.

பலரது வீட்டில் நாய்கள் வளர்ப்பதை பார்த்திருப்போம்.

அதுவும் நடிகர் – நடிகைகளுக்கும் நாய்க்கும் உள்ள பாசம் உறவு நாடறிந்த ஒன்றாகும்.

தெரு நாய்களுக்காக நடிகை த்ரிஷா நடிகர் விஷால் என பலரும் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி, எனது மகன் என்று தனது வளர்ப்பு நாயை அறிமுகப்படுத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

தனது நாய்க்கு Gucci என்று பெயர் வைத்துள்ளார்.

அந்த நாயை பின்தொடர Guccivaralaxmi என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் அக்கௌண்ட்டும் தொடங்கியுள்ளார் வரலட்சுமி.

Actress Varalaxmi revealed her son name

Varalaxmi

‘ஜகமே தந்திரம்’ பட ட்ரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர்

‘ஜகமே தந்திரம்’ பட ட்ரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜ் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை திரையரங்கில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.

இயக்குனர் கார்த்தி்க்கும் நடிகர் தனுஷூம் தியேட்டர் வெளியீட்டையே எதிர்பார்ப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

ஆனால் கொரோனா ஊரடங்கால் இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது.

ஆனால் தயாரிப்பாளர் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

அதன்படி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வரும் ஜூன் 1-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Dhanushs Jagame Thandhiram trailer release announcement

‘மாநாடு’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் அடுத்த பட அப்டேட்

‘மாநாடு’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் அடுத்த பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தை இயக்கி வருகிறார் வெங்கட்பிரபு.

யுவன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் மாநாடு படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் டி.முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு.

அவர் இயக்கும் 10-வது படமாக இது உருவாகவிருக்கிறது.

Director Venkat Prabus next movie update

கொரோனா ஊரடங்கால் முடங்கி கிடக்கும் பட்ஜெட் படங்கள்.; முழு விவரம் இதோ..

கொரோனா ஊரடங்கால் முடங்கி கிடக்கும் பட்ஜெட் படங்கள்.; முழு விவரம் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வருடம் பொங்கல் சமயத்தில் விஜய்யின் ‘மாஸ்டர்’ & சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஆகிய படங்கள் ரிலீசானது.

இவையிரண்டும் தியேட்டருக்கு ரசிகர்களை குடும்பம் குடும்பமாக வரவழைத்தது.

பின்னர் சட்டமன்ற தேர்தல் பரபரப்பில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகவில்லை.

இதனையடுத்து ஏப்ரல் மாதத்தில் தனுஷின் ‘கர்ணன்’ கார்த்தியின் ‘சுல்தான்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகி வெற்றி பெற்றன.

கொரோனா உச்சத்தை தொட ஆரம்பித்த உடன் படங்களின் ரிலீசுக்கு தடை வந்தது. சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் வந்தாலும் தியேட்டர்கள் திறப்பது என்பது இப்போது நடக்காத காரியம்.

ஆகஸ்ட் அல்லது செப்டம்பரிலேயே தியேட்டர்கள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் 40க்கும் மேற்பட்ட சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீசுக்கு ரெடியாக உள்ளன.

அந்த விவரம் வருமாறு…

காகித பூக்கள், உழைக்கும் கரங்கள், சினிமா கனவுகள், இளஞ்ஜோடிகள், இது கதை அல்ல நிஜம், வீரமகன், இளவரசி, வைரி, சில்லாட்ட, பூதமங்கலம் போஸ்ட் , டம்மி ஜோக்கர், பிரம்மபுரி, வாழ்க ஜனநாயகம், இரவா இரவு , உத்ரா, கபாலி டாக்கீஸ், எல்லைக்காவலன், பிறர்தர வாரா, சின்ன பண்ணை பெரிய பண்ணை, நெஞ்சாக்கூட்டில், வெற்றித்திருமகன்,
ஆகிய படங்கள் உட்பட 40 படங்கள் திரை அரங்குகள் திறக்கும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

கொரோனா பிரச்சினை முடிந்த உடன் படங்களை ரிலீஸ் செய்வது குறித்து தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து பேச வேண்டும் என்று திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்.

40 Tamil Movies is ready for Theatrical release

வைரமுத்துக்கு கேரளாவில் விருது.. நடிகைகள் எதிர்ப்பு..; விருது பரிசீலனை.; விருது வேண்டாம் பணத்தை நிவாரணமாக கொடுப்பதாக கவிஞர் காமெடி

வைரமுத்துக்கு கேரளாவில் விருது.. நடிகைகள் எதிர்ப்பு..; விருது பரிசீலனை.; விருது வேண்டாம் பணத்தை நிவாரணமாக கொடுப்பதாக கவிஞர் காமெடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவின் மிகவும் உரிய இலக்கியத்திற்கான விருதான ஓஎன்வி விருது வழங்கப்பட்டு வலுகிறது.

இந்த முறை தமிழ் கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டது.

எனவே முதல்வர் ஸ்டாலின் & தமிழ் திரையுலகினர் வைரமுத்துவை பாராட்டினர்.

இந்நிலையில் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பாடகி சின்மயி மீண்டும் சர்ச்சையை கிளப்பினார்.

இவருடன் மலையாள திரையுலகைச் நடிகை பார்வதி, இயக்குநர் அஞ்சலி மேனன், கீது மோகன் தாஸ் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்.

பல பெண்களால் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கு கேரளாவின் ஓஎன்வி விருதை வழங்குவதா? என கண்டன குரல்கள் எழுந்தது.

இதையடுத்து வைரமுத்துவுக்கு விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் நேற்று அறிவித்தது.

இந்த முடிவுக்கு தமிழக பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஓ.என்.வி. விருதை திரும்ப அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

விருதுப்பணம் 3 லட்சத்துடன் 2 லட்சம் சேர்த்து ரூ.5 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

விருதும் கொடுக்கல பணமும் கொடுக்கல.. அப்புறம் எப்படி திருப்பி கொடுப்பார் கவிஞர் வைரமுத்து..

Malayalam film industry had questioned the jurys decision to give the award to Vairamuthu, who has been accused of sexual harassment by many women..

JUST IN கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பீடு – ஸ்டாலின்.; முழு தகவல்கள்

JUST IN கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பீடு – ஸ்டாலின்.; முழு தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்புநிதி என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த தொகை குழந்தைகளின் பெயரில் செலுத்தப்படும் ரூ.5 லட்சம் வைப்புநிதியை, அவர்கள் 18 வயது பூர்த்தியான பின் எடுத்துக்கொள்ளலாம்.

அவர்களுக்கு 18 வயது பூர்த்தியாகும்போது ரூ.5 லட்சம் வைப்புநிதி, வட்டித் தொகையோடு சேர்த்து வழங்கப்படும்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

“தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் நலன்களைப் பாதுகாத்திட, அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (29-5-2021) தலைமைச் செயலகத்தில் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை வழங்கிட ஏதுவாக, மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறப்புப் பணிப் பிரிவு, அரசால் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேற்படி ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கீழ்க்காணும் நிவாரண உதவிகளை வழங்கிட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கிடவும்,

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.

இக்குழந்தைகளுக்கு பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றிடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக 3 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.

ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா நோய்த் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 இலட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித் தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சியும், ஒரு சிறப்புக் குழுவால் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

அனைத்து அரசு நலத் திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும், நோய்த் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும்.

மேற்படி நிவாரண உதவிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு வழங்குவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்து வெளியிட, கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித் துறை அவர்களது தலைமையில் வழிகாட்டுதல் குழு ஒன்று சமூக நலத் துறைச் செயலர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் / அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்டு அமைக்கப்படும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN CM Stalin announces ₹5 lakhs deposit to children orphaned by Corona

More Articles
Follows