நடிகை சுஷ்மிதா சென்னுக்கு திடீர் மாரடைப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை சுஷ்மிதா சென்னுக்கு திடீர் மாரடைப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தனக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். அவர் தனது தந்தையுடன் ஒரு படத்தைப் பகிர்ந்து “உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாகவும் தைரியமாகவும் வைத்திருங்கள், உங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது அது உங்களுடன் நிற்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆஞ்சியோபிளாஸ்டி எனக்கு செய்யப்பட்டு இப்போது நான் நலமாக உள்ளேன் என பதிவிட்டுள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்களையும் திரை உலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Actress Sushmitha Sen suffers a sudden heart attack – Fans shocked

சென்னை – கொச்சியில் இசையமைப்பாளர் வித்யாசாகர் இசை நிகழ்ச்சி

சென்னை – கொச்சியில் இசையமைப்பாளர் வித்யாசாகர் இசை நிகழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இசை அமைப்பாளர் வித்யாசாகர் நடத்தும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி சென்னை மற்றும் கொச்சியில் நடைபெற உள்ளது.

பிரபல இசை அமைப்பாளர்கள் இளையராஜா, இசைப்புயல் AR ரஹ்மான் , ராக்ஸ்டார் அனிருத் , S.P.பாலசுப்ரமணியம், யேசுதாஸ் உட்பட பல இசையமைப்பாளர்கள் மற்றும் பிரபல பாடகர்களை வைத்து இசை நிகழ்ச்சி நடத்திய பிரபல நிறுவனம் இதையும் நடத்த உள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், அஜித்குமார், விஜய் மற்றும் முக்கியமான நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசை அமைப்பாளராக பணியாற்றிய வித்யாசாகருடன் முதல்முறையாக இணைத்து பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.

அடுத்த கட்டமாக 25 வருடங்களாக மலையாள திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் வித்யாசாகர் கொச்சியில் இசைநிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும் அதற்கான தேதி மற்றும் இடங்களை விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Music composer Vidyasagar music concert in Chennai and Kochi

நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல படத்தில் நடித்த உணர்வு.. – சந்தோஷத்தில் சந்தோஷ்

நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல படத்தில் நடித்த உணர்வு.. – சந்தோஷத்தில் சந்தோஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், வரலக்‌ஷ்மி, சார்லி, சென்றாயன் உள்ளிட்டோர் நடித்த படம் ‘கொன்றால் பாவம்’.

இப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நாயகன் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது…

” சில படங்களில் நடித்தால் மட்டுமே நமக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். அது போல இந்த படத்தின் கதை என்ன என்று தெரிந்த பிறகும் கூட அதிலிருந்து வெளியே வர எனக்கு கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. அதுவே இந்த படத்தின் வெற்றி என்று சொல்வேன்.

நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல படத்தில் நடித்த உணர்வு இருக்கிறது இந்த படம் மக்களிடத்தில் போய் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்”. என்றார்.

கொன்றால் பாவம்

Santhosh Prathap speech at kondraal paavam audio launch

கன்னடத்தில் விருது.. தெலுங்கை தொடர்ந்து தமிழில்..; தயாரிப்பாளருக்காக காத்திருந்த தயாள்

கன்னடத்தில் விருது.. தெலுங்கை தொடர்ந்து தமிழில்..; தயாரிப்பாளருக்காக காத்திருந்த தயாள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், வரலக்‌ஷ்மி, சார்லி, சென்றாயன் உள்ளிட்டோர் நடித்த படம் ‘கொன்றால் பாவம்’.

இப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் தயாள் பத்மநாபன் பேசியதாவது…

“நான் நீண்ட நாட்கள் ஏங்கிக் கொண்டிருந்த மேடை இது. சரியான படத்தோடு வரவேண்டும் என்றுதான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன். பல வார பத்திரிகைகள் இலக்கியங்களை அறிமுகப்படுத்தி எனக்குள் நடிப்பு ஆர்வத்தை ஏற்படுத்திய என்னுடைய அம்மாவுக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

ஆங்கில இலக்கிய நாடகமாக வந்து பின்பு நம் தென்னிந்தியாவில் கன்னடத்திலும் மலையாளத்திலும் ‘கொன்றால் பாவம்’ கதை புத்தகமாக வெளியாகி பின்பு கன்னடத்தில் படமாக இயக்கினேன்.

அங்கு மாநில விருது உட்பட பல விருதுகள் கிடைத்து தெலுங்கிலும் இந்தப் படத்தை இயக்கினேன். இப்போது தமிழிலும் இயக்கியுள்ளேன். இந்த படத்திற்கு நிறைய தயாரிப்பாளர்கள் பெரிய நிறுவனங்களில் இருந்து வந்தார்கள்.

ஆனால் இந்த படத்திற்கு என்று ஒரு கதை அம்சம் இருக்கிறது. அது கெடாமல் இருக்க வேண்டும் என்று அதற்கான சரியான தயாரிப்பாளர் வரும் வரை காத்திருந்தேன். இப்போது வரை இந்த படத்திற்கு பிசினஸ் என்று எதுவும் செய்யாமல் படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்தே வெளியிட இருக்கிறோம். அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.

கொன்றால் பாவம்

Dayal Padmanabhan speech at kondraal paavam audio launch

எனக்கு பின்னால் அப்பா இருந்தார்.. அவருக்கு பின்னால் யாருமில்லை – வரலட்சுமி சரத்குமார்

எனக்கு பின்னால் அப்பா இருந்தார்.. அவருக்கு பின்னால் யாருமில்லை – வரலட்சுமி சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், வரலக்‌ஷ்மி, சார்லி, சென்றாயன் உள்ளிட்டோர் நடித்த படம் ‘கொன்றால் பாவம்’.

இப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கதாநாயகி வரலக்‌ஷ்மி பேசியதாவது…

“‘கொன்றால் பாவம்’ உண்மையிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் நீண்ட நாட்கள் கழித்து ஒரு கதாநாயகிக்கு முழு நீளமாக நடிக்க வாய்ப்புள்ள ஒரு படம் என்று சொல்வேன். நாம் நிறைய படங்களில் நடிப்போம். ஆனால் திருப்தி என்பது சில படங்களில் தான் கிடைக்கும். அப்படியான ஒரு நிறைவு இந்த படத்தில் எனக்கு கிடைத்தது.

‘விக்ரம் வேதா’ படத்திற்கு பிறகு ஒரு மிரட்டலான இசையை இந்த படத்தில் சாம் கொடுத்துள்ளார். படத்தின் கதாநாயகன் சந்தோஷ் மிகவும் அமைதியானவர் இந்த 14 நாட்களும் நாங்கள் எல்லாருமே ஒன்றாகவே இருந்து குடும்பம் போலவே ஆனோம். இயக்குநர் தயாள் சாரும் என்னைப் போலவே மிகவும் துறுதுறுப்பாக இருப்பார்.

மூன்று நான்கு டேக் என்று போகாமல் அந்த காட்சிக்கு என்ன தேவையோ அதை மட்டும் மிகச் சரியாக எடுப்பார். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குநர் கிடைத்துள்ளார். சின்ன படம் பெரிய படம் என்பதை எல்லாம் தாண்டி கதைக்காக இந்த படம் வெற்றியடைய வேண்டும் என விரும்புகிறேன்.

அப்பாவுக்கும் நன்றி. நான் சினிமாவில் வந்த போது அவர் எனக்கு பின்புலமாக இருந்தார். ஆனால் உண்மையிலேயே எந்த பின்புலமும் இல்லாமல் அவர் இந்த உயரத்தை அடைந்திருப்பது என்பது எனக்கு பெருமையான விஷயம்”. என்றார்.

கொன்றால் பாவம்

Varalaxmi Sarathkumar speech at kondraal paavam audio launch

ஒரு படம் நடிக்க வாய்ப்பு கேட்டு வரலட்சுமி இந்தளவு வளர்ந்து நிற்கிறார்.. – சரத்குமார்

ஒரு படம் நடிக்க வாய்ப்பு கேட்டு வரலட்சுமி இந்தளவு வளர்ந்து நிற்கிறார்.. – சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், வரலக்‌ஷ்மி, சார்லி, சென்றாயன் உள்ளிட்டோர் நடித்த படம் ‘கொன்றால் பாவம்’.

இப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகர் சரத்குமார் பேசியதாவது…

“‘கொன்றால் பாவம்’ படத்தலைப்பே வித்தியாசமானது. மனதை ஈர்க்கக்கூடிய படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த படத்திற்கு நான் வரவேண்டும் என வரலட்சுமி கூர். 14 நாட்களில் இந்த படத்தை இயக்குநர் அற்புதமாக முடித்துள்ளார். எடிட்டர் ப்ரீத்தி இந்த படம் அற்புதமாக வந்துள்ளது என்று கூறியுள்ளார். ஒரு எடிட்டர் சொல்லிவிட்டால் அதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

வரலட்சுமி படித்து முடித்துவிட்டு நடிக்க வேண்டுமா என்று யோசித்தேன். ஒரு படம் நடிக்கிறேன் என்று கேட்டார். அதற்குப் பிறகு அவர் இந்த அளவுக்கு வளர்ந்து நிற்பது எல்லாமே அவருடைய சொந்த முயற்சியில் தான்.

நிறைய மொழிகள் கற்று வைத்துள்ளார். விரைவிலே ஆங்கிலம் பிரெஞ்சு படங்களில் நடித்தால் கூட ஆச்சரியம் இல்லை. இந்த படத்தில் சார்லியின் நடிப்பை பார்க்கும் பொழுது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்”. என்றார்.

கொன்றால் பாவம்

Sarathkumar speech at kondraal paavam audio launch

More Articles
Follows