தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஷால் நடித்த சிவப்பதிகாரம் மற்றும் அருண் விஜய் நடித்த தடையறத் தாக்க ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை மம்தா மோகன்தாஸ்.
இவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு இவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த மணவாழ்க்கை கசந்துவிடவே விவாகரத்து பெற்று பிரிந்தார்.
புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளராக மாறவுள்ளார் மம்தா மோகன்தாஸ்.
மம்தா மோகன்தாஸ் புரடக்சன் என்ற பெயரில் படங்களை தயாரிக்கவுள்ளார்.
தனது நண்பரான நோயல் பென் என்பவருடன் இணைந்து இந்த தயாரிப்பில் இறங்கியுள்ளார் இந்த சிவப்பதிகார நடிகை.
Actress Mamta Mohandas turns producer