ரசிகர்களுக்கு பாடமெடுக்க மீண்டும் டீச்சரான அமலாபால்

ரசிகர்களுக்கு பாடமெடுக்க மீண்டும் டீச்சரான அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகை அமலாபால்.

தற்போது மலையாளத்தில் ‘தி டீச்சர்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் அமலாபால்.

இந்த படத்தை பஹத் பாசில் நடித்த அதிரன் என்ற படத்தை இயக்கிய விவேக் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு நேற்று பிப்ரவரி 16ல் தொடங்கியது.

நட் மக் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் வருண் திரிபுரனேனி மற்றும் அபிஷேக் ராமிஷெட்டி இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் செம்பன் வினோத் ஜோஸ், ஹக்கீம் ஷாஜகான், பிரசாந்த் முரளி, நந்து, ஹரிஷ் பென்கன், மஞ்சு பிள்ளை, அனுமோல், மாலா பார்வதி, வினிதா கோஷி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் அனு மூத்தேடத்.

திரைக்கதை மற்றும் வசனம் பிவி ஷாஜி குமார் மற்றும் விவேக்.

அன்வர் அலி மற்றும் யுகபாரதியின் வரிகளுக்கு டான் வின்சென்ட் இசையமைக்கிறார்.

படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு டீச்சராக நடிக்கிறார் அமலாபால். இவர் ஏற்கெனவே பசங்க-2, ராட்சசன் ஆகிய படங்களிலும் டீச்சராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress AmalaPaul next malayalam movie called TEACHER

விக்ரமின் ‘கோப்ரா’ பட்ஜெட்டால் அஜய்ஞானமுத்து – சிவா மோதல்

விக்ரமின் ‘கோப்ரா’ பட்ஜெட்டால் அஜய்ஞானமுத்து – சிவா மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கோப்ரா.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை லலித்குமார் தயாரித்துள்ளார்.

2019ல் தொடங்கப்பட்ட இப்பட சூட்டிங் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இடைவெளிகள் விட்டு விட்டு நடைபெற்றதால் இதன் பட்ஜெட் பல மடங்கு உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது பற்றி சமூகவலைதளத்தில் குறிப்பிட்டு இருந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து என்ற செய்தியை நம் தளத்தில் செய்தியாக பார்த்தோம்.

இயக்குனரின் பதிவில் எல்லோருக்கும் நன்றி தெரிவித்து இருந்தாலும் அதில் தயாரிப்பாளர் லலித்குமார் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து “போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை இழுத்து விட்டு, அதைத் தாங்கிக்கொண்டு படத்தை முடித்துக்கொடுத்த தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஒரு நன்றி கூட சொல்லாத இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று பிரபல தயாரிப்பாளர் டி. சிவா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அஜய் ஞானமுத்து அளித்து பதிலில்… “கோப்ராவின் பட்ஜெட் அதிகமானதற்குக் காரணம் நான் இல்லை. அதை எங்கு வேண்டுமானாலும் என்னால் நிரூபிக்க முடியும்.

வதந்திகளை விட ஆதாரங்கள் சத்தமாகப் பேசும். குழு என்றால் அது தயாரிப்பாளரும் சேர்ந்துதான். நான் என்றும் அவரை கைவிடவில்லை” என தெரிவித்துள்ளார் அஜய் ஞானமுத்து.

Chiyaan Vikram’s Cobra director responds to film’s budget controversy

அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் சாங் சர்ச்சை; கோர்ட் கேஸ் அப்டேட்

அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் சாங் சர்ச்சை; கோர்ட் கேஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏழு வருடங்களுக்கு முன்… 2015ல் அனிருத் இசையில் சிம்பு பாடியதாக லீக்கான ‘பீப் சாங்’ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதில் பெண்களை மிகவும் கேவலமாக ஆபாசமாகவும் சித்தரிக்கும் வகையில் பாடல் வரிகள் இருந்தன.

இதனையடுத்து மகளிர் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி சிம்பு அனிருத் மீது வழக்குகள் தொடுத்தனர். இந்த புகாரின் பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து தனக்கு எதிரான இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் சிம்பு.

இந்த மனு நேற்று பிப்ரவரி 16ல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நடிகர் சிலம்பரசனுக்கு எதிரான புகாருக்கு ஆதாரமில்லை என (கோவை) வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த மற்றொரு வழக்கில் காவல்துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது உயர்நீதி மன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

Court’s final decision on Simbu’s ‘Beep Song’ controversy

ரஜினி படத்தை பகிர்ந்த இசைஞானி…; இளையராஜா படத்தை பகிர்ந்த கங்கை அமரன்

ரஜினி படத்தை பகிர்ந்த இசைஞானி…; இளையராஜா படத்தை பகிர்ந்த கங்கை அமரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் இளையராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்தடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து என்றும் என்றென்றும் ரஜினிகாந்த் என பதிவிட்டு இருந்தார்.

இதனால் ரஜினியின் அடுத்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி கேட்டனர். ஆனால் இளையராஜா தரப்பில் எந்த பதிலும் இல்லை.

இந்த நிலையில் இளையராஜாவின் தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தன் சமூக வலைத்தளப்பக்கத்தில் இளையராஜாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில்… “இன்று நடந்த சந்திப்பு.. இறை அருளுக்கு நன்றி.. உறவுகள் தொடர்கதை..!!!” என பதிவிட்டு அதில் இளையராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, யுவன் ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.

அண்ணன் தம்பி ஆகிய இவர்கள் இருவரும் சில காலங்கள் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தனர். பெரும்பாலும் எந்த நிகழ்விலும் இவர்கள் சந்தித்து கொண்டது இல்லை.

மேலும் இளையராஜா குறித்து பல இடங்களில் கடுமையாக விமர்சித்தும் பேசி இருக்கிறார் கங்கை அமரன். இதனாலேயே இவர்கள் இணையாமல் இருந்து வந்தனர்.

ஆனால் இளையராஜாவின் மகன்கள் யுவன் மற்றும் கார்த்திக் ராஜா மற்றும் கங்கை அமரனின் மகன்கள் வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோர் நல்ல நட்புடனே இருந்தனர். சகோதரர்களாகிய இவர்கள் பல படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.

இளையராஜாவும் கங்கை அமரனும் இணைந்து ‘கரகாட்டக்காரன்’ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களையும் பாடல்களையும் தர வேண்டும் என ரசிகர்கள் தங்கள் கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர்.

Ilaiyaraaja and gangai amaren shared pics in twitter goes viral

காதலி-தோழி இடையே சிக்கிய யாழன் யார்.? பிருந்தா மாஸ்டர் சொல்லும் ‘ஹே சினாமிகா’

காதலி-தோழி இடையே சிக்கிய யாழன் யார்.? பிருந்தா மாஸ்டர் சொல்லும் ‘ஹே சினாமிகா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனைத்து தென்னிந்திய மொழிகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்லாயிரக்கணக்கான திரைப்பாடல்களுக்கு நடனம் அமைத்து நாடு முழுவதும் இருக்கும் பிரபல கலைஞர்கள் மாஸ்டர் என்று பாசம் கலந்த மரியாதையுடன் அழைக்கும் பிருந்தா, ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார்.

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் முதன்மை வேடங்களை ஏற்றுள்ளனர்.

குளோபல் ஒன் ஸ்டூடியோஸ் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ மார்ச் 3, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) வெளியிடப்பட்டுள்ளது.

உற்சாகமிக்க தனித்துவ இளைஞரான யாழன் (துல்கர்), அவரை காதலிக்கும் வானிலை விஞ்ஞானி மௌனா (அதிதி) ஆகியோரின் வாழ்க்கைக்குள் டிரைலர் நம்மை அழைத்துச் செல்கிறது.

ஓரிரு வருடங்களுக்குப் பிறகு அவர்களது உறவில் என்ன நடக்கிறது, மலர்விழி (காஜல்) வருகைக்குப் பின்னர் எப்படி எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது என்பதுதான் கதையின் மையக்கரு.

காதல், நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் இசையின் கலலையாக உருவாகியுள்ள ஹே சினாமிகா, காதல் மற்றும் நட்பைக் கொண்டாடும் இளைமை ததும்பும் படமாக இருக்கும் என்பதை டிரைலர் வெளிப்படுத்துவோடு படம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது.

படம் குறித்து பேசிய பிருந்தா,….

“இது ஒரு ஃபீல் குட் திரைப்படம். இளைஞர்கள் மிகவும் ரசிப்பார்கள். அதே சமயம், அனைத்து வயதினரும் இப்படத்தைப் பார்த்து மகிழலாம். கொண்டாட்டம், குதூகலம் என உணர்ச்சிகளின் உற்சாகக் குவியலாக ‘ஹே சினாமிகா’ இருக்கும்,” என்று கூறினார்.

‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ மார்ச் 3, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படக்குழுவினர்:

நடிகர்கள்: துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ், உள்ளிட்ட பலர்

ஒளிப்பதிவு: பிரீத்தா ஜெயராமன் ஐ எஸ் சி

இசை: கோவிந்த் வசந்தா

படத்தொகுப்பு: ராதா ஸ்ரீதர்

எழுத்து & பாடல்கள்: மதன் கார்க்கி

கலை இயக்கம்: எஸ் எஸ் மூர்த்தி / செந்தில் ராகவன்

சண்டை பயிற்சி: அஷோக்

நிர்வாக தயாரிப்பு: ஃபிராங்க் மைக்கேல்/ரஞ்சனி ரமேஷ்/எஸ் பிரேம்

இணை தயாரிப்பு: குளோபல் ஒன் ஸ்டூடியோஸ்

தயாரிப்பு: ஜியோ ஸ்டூடியோஸ்

இயக்கம்: பிருந்தா

Youthful trailer of Brinda Master’s directorial debut ‘Hey Sinamika’ produced by Jio Studios launched

விஜய் அஜித் பெயரை இணைத்து புது ஹீரோ.; தன் மகனுக்காக கிராமத்து பாணியை தவிர்க்கும் தங்கர்பச்சான்

விஜய் அஜித் பெயரை இணைத்து புது ஹீரோ.; தன் மகனுக்காக கிராமத்து பாணியை தவிர்க்கும் தங்கர்பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் விஜித் பச்சான் நாயகனாக நடிக்கும் “தக்கு முக்கு திக்கு தாளம்” படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாடல்களை கேட்டதும் வாங்கி கொண்டு பரபரப்பாக வெளியிட்டுள்ளது சோனி ஆடியோ நிறுவனம்.

தமிழ் சினிமாவில் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பின் அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு களவாடியப் பொழுதுகள் போன்ற காலத்தால் அழியாத தரமான திரைப்படங்களை இயக்கியவர் தங்கர் பச்சான்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் அவரது மகன் விஜித் பச்சானை நாயகனாக அறிமுகம் செய்துள்ளார்.

முதல் முறையாக தனது பாணியில் இருந்து மாறுபட்டு இப்படத்தை உருவாக்கி வருகிறார்.

இதுவரையில் கிராமத்து பின்னணியில் அழுத்தமான படைப்புக்களை தந்தவர் இம்முறை சென்னை நகரத்தை மையமாக கொண்ட, முற்றிலும் மாறுபட்ட முழு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நகைச்சுவைப் படமாக இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க சென்னையை சுற்றி நடைபெற்றுள்ளது.

படம் இறுதிகட்ட பணிகளை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று வெளியானது.

இளைஞர்கள் கொண்டாடும் இளமை ததும்பும் பாடல் வரிகளால் முதன் முறையாக வித்தியாசமாக எழுதி அனைவரையும் கவர்ந்துள்ளார் தங்கர் பச்சான்.

“தக்கு முக்கு திக்கு தாளம்
போடப்போறன்டா!
நம்ம பொண்ணுங்கள ஜிகுஜிகுன்னு
​​​​மாத்தப்போறன்டா!
சில்லாக்கி பில்லாக்கி சீனாக்குட்டியே
​இந்த மாமாவ வாட்டாதடி சிலோன் ரொட்டியே!

புரோட்டாக்கு சால்னாவ போட்டா சூப்பரு
​என்னக் கட்டிப்புடிச்சி கடிச்சிடேன்டி என் ஜிகுஜிகுச்சான்!.. என்று தங்கர் பச்சான் எழுதிய
இப்பாடல் வெளியானவுடனேயே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தங்கர் பச்சானா இப்படி ஒரு பாட்டை எழுதினார் என்று வியந்து கேட்கிறார்கள். இப்பாடலை , பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்ற இசை அமைப்பாளர் தேவா, தனது காந்தர்வ குரலால் பாடி அசத்தியுள்ளார். செம குத்து பாடலாக தரண்குமார் இசை அமைத்துள்ளார்.

தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் நாயகனாக அறிமுகமாகும் இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அவர்களுடன் மிலனா நாகராஜ், அஸ்வினி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா மற்றும் யோகிராம் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள் .

ஒளிப்பதிவு பிரபு தயாளன் – சிவபாஸ்கரன். படத்தொகுப்பு சாபு ஜோசப். கலை சக்தி செல்வராஜ்,நடனம் தினேஷ், சண்டைப்பயிற்சி ஸ்டன்ட் சில்வா கையாள்கின்றனர்.
Pro:ஜான்சன்.
பிஎஸ்என் என்டர்டெயின்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கிறது.

விரைவில் அடுத்தடுத்த பாடல்கள், டீசர், டிரைலர் வெளியாகும்.
சம்மர் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறார்கள்.

பாடல்:
PSN ENTERTAINMENT PVT. LTD
தங்கர் பச்சானின்
டக்கு முக்கு டிக்கு தாளம்

பாடல் 1
பாடல் ஆசிரியர்: தங்கர் பச்சான்
பல்லவி :
டக்கு, முக்கு, டிக்கு-டிக்கு
டக்கு, முக்கு, டிக்குத்தாளம்

ஏய் டக்கு, முக்கு, டிக்கு தாளம்
போடப்போறன்டா!
நம்ம பொண்ணுங்கள ஜிகுஜிகுன்னு
​​​​மாத்தப்போறன்டா!

கொஞ்சம் பவுடரத்தான் போட்டு
​​பளபளப்ப சேத்து!
எம்புஜ்ஜிப்பொண்ணு வந்துப்புட்டா
​​சுருசுருப்ப ஏத்து!

– டக்கு, முக்கு, டிக்கு தாளம்
போடப்போறேன்டா!
நம்ம பொண்ணுங்கள ஜிகுஜிகுன்னு
​​​​மாத்தப்போறேன்டா!

அனுபல்லவி :
சில்லாக்கி பில்லாக்கி சீனாக்குட்டியே
​இந்த மாமாவ வாட்டாதடி சிலோன் ரொட்டியே!
புரோட்டாக்கு சால்னாவ போட்டா சூப்பரு
​என்னக் கட்டிப்புடிச்சி கடிச்சிடேன்டி என் ஜிகுஜிகுச்சான்!

சரணம் :
ஏ வெள்ள வவ்வா இடுப்பு துடுப்புப்போடுது
​கவ்வச்சொல்லி வெறிய ஏத்திப்பாக்குது
வெள்ள வவ்வா இடுப்பு துடுப்புப்போடுது
​கவ்வச்சொல்லி வெறிய ஏத்திப்பாக்குது

இப்போ கிஸ்சொன்னு தள்ளு,
​வடியுது ஜொள்ளு
என்னக் காயவச்சிப் பாக்காதடி
​எகிறிடும் பில்லு

இப்போ கிஸ்சொன்னு தள்ளு,
​வடியுது ஜொள்ளு
என்னக் காயவச்சிப் பாக்காதடி
​எகிறிடும் பில்லு
இப்போ கிஸ்சொன்னு தள்ளு,
​வடியுது ஜொள்ளு
என்னக் காயவச்சிப் பாக்காதடி
​எகிறிடும் பில்லு

ஏய் நண்பனுங்க ஒண்ணா இருந்தா போதுண்டா
சொத்து சொகம் வேற எதுக்கு வேணுண்டா
நீ போவ சொல்ல என்னாத்த எடுத்து போவடா
நாட்ட ஆண்டாலுமே பிரண்ட்ஷிப் இல்லாட்டி வேஸ்ட்டுடா
இதப்புரிஞ்சிட்டா மவுசு திருப்பி வராது வயசு
துட்டு கெடச்சுதுன்னா ஏதுன்னு மட்டும் கேக்காத பெருசு
இதப்புரிஞ்சிட்டா மவுசு திருப்பி வராது வயசு
துட்டு கெடச்சுதுன்னா ஏதுன்னு மட்டும் கேக்காத பெருசு

டக்கு டக்கு
டக்கு, முக்கு, டிக்குத்தாளம் போடப்போறேன்டா!
நம்ம நம்ம பொண்ணுங்கள ஜிகுஜிகுன்னு மாத்தப்போறேன்டா!

கொஞ்சம் பவுடரத்தான் போட்டு
​​பளபளப்ப சேத்து!
எம்புஜ்ஜிப்பொண்ணு வந்துப்புட்டா
​​சுருசுருப்ப ஏத்து!

சில்லாக்கி பில்லாக்கி சீனாக்குட்டியே
​இந்த மாமாவ வாட்டாதடி சிலோன் ரொட்டியே!
புரோட்டாக்கு சால்னாவ போட்டா சூப்பரு
​என்னக் கட்டிப்புடிச்சி கடிச்சிடேன்டி என் ஜிகுஜிகுச்சான்!

Director Thangar Bachan’s next directorial is with his son

More Articles
Follows