காமெடி நடிகரின் ‘ஜல்கோ’ சேனல்..; ச்சலோ… ச்சலோ… தாடி பாலாஜி

Actor Thaadi Balaji launches new Youtube Channel Jalkoபிரபல நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான தாடி பாலாஜி நடிப்பது மட்டும் இல்லாது, அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனை தொடங்கி சாத்தான்குளம் போலீஸ் தாக்குதல் வரை மக்களுக்கான குரலாக தாடி பாலாஜி ஒலித்துக் கொண்டிருக்கிறார்.

காவல்துறையின் அராஜக போக்கை எதிர்த்து முதலில் தைரியமாக தன் கருத்தினை பதிவிட்டு இருந்தார்.

காவல் துறையால் மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை நேர்ந்தால் முதல் ஆளாக அங்கு வந்து நிற்பேன் எனவும் கூறியிருந்தார்.

தன் மனைவியை பிரிந்து தனித்து வாழ்ந்து வந்தாலும், தன் வாழ்வில் பல இன்னல்கள் வந்தாலும் மக்களுக்கான சமூக பிரச்சனையில் முதல் குரல் தாடி பாலாஜியின் குரலாக தான் இருக்கிறது.

தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் விரைவில் ஒன்றாக சேர்ந்து வாழப்போவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமூக பிரச்சனைகளை பற்றி குரல் கொடுப்பதற்காகவே தனியாக ’ஜல்கோ தாடி பாலாஜி’ என்ற யூ-டியூப் பக்கத்தை துவக்கியுள்ளார்.

இனி தொடர்ந்து சமூகத்தில் நடக்கும் அவலங்களையும், பிரச்சனைகளையும் இதன் மூலமாக மக்களிடையே பேசப்போவதாகவும் தாடி பாலாஜி கூறியிருக்கிறார்.

Actor Thaadi Balaji launches new Youtube Channel Jalko

https://www.youtube.com/channel/UCKmtmQ4NUBQZncOtr80ZpPg

Overall Rating : Not available

Latest Post