மீண்டும் வில்லன் ரூட்டுக்கே யூ-டர்ன் போடும் சௌந்தரராஜா

Actor Soundararaja again going to act as Villainசுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில் வில்லனாக அறிமுகமாகி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் மற்றும் சமீபத்தில் வெளியான வெற்றி படம் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து கவனம் பெற்றவர் சௌந்தரராஜா.

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, ஒரு கனவு போல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள அவர், தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வரும் இளம் நடிகர்.

இவர் அடுத்ததாக ‘விசாரம்’ என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது.

மேலும் நடிகர் சௌந்தரராஜா ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிகில் படத்திலும், விஜய்யுடன் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Soundararaja again going to act as Villain

Overall Rating : Not available

Latest Post