வானத்தில் இருந்து உலகை பார்க்கும் ‘விமானத்தில்’ சமுத்திரக்கனி

வானத்தில் இருந்து உலகை பார்க்கும் ‘விமானத்தில்’ சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘விமானம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இதனுடன் படத்தின் வெளியீட்டு தேதியும், இதற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

திரைப்படங்களில் பல்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று, அதில் தன் தனித்துவமான திறமையைக் காண்பித்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நடிகர் சமுத்திரக்கனி.

அற்புதமான குணச்சித்திர வேடங்களில் மட்டுமல்லாமல்… கொடிய வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து தன் முத்திரையை பதித்தவர். இதயத்திற்கு நெருக்கமான கதாநாயகனும் கூட. இவர் தற்போது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் தயாராகி இருக்கும் ‘விமானம்’ எனும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும், கதையின் நாயகனாகவும், உணர்வுபூர்வமான மற்றும் ஊக்கமளிக்கும் வகையிலும் நடித்து, பார்வையாளர்களுக்கு விமான பயண அனுபவத்தை அளிக்கத் தயாராகி விட்டார்.

இந்த ‘விமானம்’ திரைப்படம் எதிர் வரும் ஜூன் மாதம் 9ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இதனை ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, அதனுடன் பிரத்யேக காணொளி மூலம் தெரிவித்திருக்கிறது.

இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் காணொளி… ”நல்லதொரு இனிமையான அனுபவக் குறிப்புடன் தொடங்குகிறது. தந்தையும், அவரது ஏழு வயது மகனான ராஜூவும் பேசத் தொடங்குகிறார்கள். அவர்களுக்குள் ஆசை என்றால் என்ன? என்பதை பரிமாறிக் கொள்வதையும் காண்கிறோம்.

குழந்தை விமானத்தில் உயரமாக பறக்க விரும்புகிறது. இதனால் அவர் வானத்திற்கு மேலே இருந்து உலகை பார்க்கிறார். மோசமான பொருளாதார நிலை காரணமாக அவரால் நிறைவேற்ற முடியாத கனவாக இருந்தாலும், அவனது ஆசையை தந்தை பாராட்டுகிறார்” என அந்த பிரத்யேக காணொளியில் காண்பித்திருப்பது… பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘விமானம்’ தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே தருணத்தில் தயாரிக்கப்பட்ட இரு மொழி திரைப்படமாகும்.

இதனை சிவ பிரசாத் யானலா எழுதி இயக்கியிருக்கிறார். இதில் சமுத்திரக்கனியுடன் மாஸ்டர் துருவன்,அனுசுயா பரத்வாஜ், மீரா ஜாஸ்மின், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ராகுல், ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள்.

விவேக் கலேபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சரண் அர்ஜுன் இசையமைத்திருக்கிறார். மார்தன் கே. வெங்கடேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஜே. கே. மூர்த்தி கவனித்திருக்கிறார். வசனத்தை பிரபாகர் எழுத, பாடலாசிரியர் சினேகன் பாடல்களை எழுதியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் சார்பில் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் கிரண் கோர்ராபாரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தென்னிந்திய திரைப்படங்களுக்கான தலைவர் அக்ஷய் கெஜ்ரிவால் பேசுகையில்…

” கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து ‘விமானம்’ படத்திற்காக பணியாற்றுவதில் நாங்கள் மிகவும் பெருமிதம் அடைகிறோம். வலுவான கதைக்களம்… திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் விமானத்தை வழங்குவது எங்கள் பாக்கியம். இப்படத்தின் மூலம் பார்வையாளர்கள் உணர்வுபூர்வமான பயணத்திற்கு தயாராவார்கள்.

ஜீ ஸ்டுடியோஸ் மக்களை மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் உள்ளடக்கத்தை தொடர்ந்து உருவாக்கி வழங்குவதே எங்களது நோக்கம். இந்த ‘விமானம்’ திரைப்படம், அந்த திசையில் ஒரு நேர்நிலையான முன்னேற்றத்தின் ஒரு படியாகும்.” என்றார்.

Actor Samuthirakani starrer Vimanam release date announced

சூர்யா 42 படத்தின் டைட்டில் இதுவா? ட்ரெண்டாகும் டேக்ஸ்

சூர்யா 42 படத்தின் டைட்டில் இதுவா? ட்ரெண்டாகும் டேக்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா 42 படத்தில் சூர்யா பல தோற்றங்களில் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நாளை (ஏப்ரல் 16) காலை 09.05 மணிக்கு அனிமேஷன் டைட்டில் டீசரை வெளியிட குழு திட்டமிட்டுள்ளது.

தற்போது சூர்யா 42 படத்தின் டைட்டில் டீசர் சென்சார் செய்யப்பட்டுள்ளது. தணிக்கை சான்றிதழில் படத்திற்கு ‘கங்குவா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

டைட்டில் டீசர் 1 நிமிடம் 16 வினாடிகள் கொண்டதாக இருக்கும். இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

Is this the Pan-Indian title of ‘Suriya 42’?

இந்த டைம் மிஸ் ஆகாது… லோகேஷ் கனகராஜ் படத்தில் இணையும் ராகவா லாரன்ஸ்

இந்த டைம் மிஸ் ஆகாது… லோகேஷ் கனகராஜ் படத்தில் இணையும் ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் முதல்முறையாக இணைவதை நடிகர் ராகவா லாரன்ஸ் உறுதி படுத்தியுள்ளார் .

‘மேயாத மான்’, ‘குலு குலு’ படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கும் புதிய திகில் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் நயன்தாரா முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனது தயாரிப்பு பேனரின் கீழ் தயாரிக்கிறார்.

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நான்தான் கால் ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போய் விட்டது எனவும் வருத்தம் தெரிவித்தார்.

Raghava Lawrence opens up about his project with director Lokesh

ஒரே இரவில் ‘சைத்ரா’..; பேயாகி மிரட்டும் நடிகை யாஷிகா ஆனந்த்

ஒரே இரவில் ‘சைத்ரா’..; பேயாகி மிரட்டும் நடிகை யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் ( MARS PRODUCTIONS) என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் K. மனோகரன் மற்றும் T. கண்ணன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படம் ‘சைத்ரா’.

இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது வரிகளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார்.

பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் பணியாற்றியுள்ளார்.

தயாரிப்பு மேற்பார்வை – தேக்கமலை பாலாஜி.
தயாரிப்பு – K. மனோகரன்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி M. ஜெனித்குமார் இயக்கியுள்ளார். இவர் பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

24 மணிநேரத்தில் நடக்கும் கதை இது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

⏯️ https://youtu.be/-JXTj4BcXhM

Yaashika Anand’s new horror film is titled Chaitra

‘அங்காரகன்’ அப்டேட்.. மீண்டும் வில்லன்.; கமல் – ரஜினி – விஜயை நக்கலடிக்கும் சத்யராஜ்

‘அங்காரகன்’ அப்டேட்.. மீண்டும் வில்லன்.; கமல் – ரஜினி – விஜயை நக்கலடிக்கும் சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’.

இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி.

மலையாள நடிகை நியா கதாநாயகியாக நடிக்க, ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் புரட்சித்தமிழன் சத்யராஜ். இதில் ஹைலைட்டான அம்சம் என்னவென்றால் இந்தப்படத்தின் மூலம் சத்யராஜ் மீண்டும் தனது வில்லன் அவதாரத்திற்கு திரும்பியுள்ளார் என்பதுதான்.

மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மோகன் டச்சு என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் படத்தின் ஒளிப்பதிவையும் அவரே கவனித்துள்ளார்.

தற்போது இந்தப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதனை நடிகர்கள் ஆக்சன் கிங் அர்ஜுன், சிபிராஜ், சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

இரண்டு நிமிடம் ஓடக்கூடிய வகையில் வெளியாகியுள்ள இந்த டீசரில் முதல் ஒரு நிமிடம் முழுவதும் அமைதிப்படை சத்யராஜின் பாணியிலான நையாண்டி வசனங்களாலும் அடுத்த ஒரு நிமிடம் அவரது வில்லத்தனமான கதாபாத்திர அறிமுக காட்சியாவும் அமைந்துள்ளது.

குறிப்பாக 1980களில் நாம் பார்த்து ரசித்த சத்யராஜின் வில்லத்தனமான (100வது நாள்) நடிப்பையும் அவரது நக்கலான வசனங்களையும் இந்தப்படம் மீட்டெடுத்து கொண்டு வந்துள்ளது என்பதை இந்த உணர்த்தும் விதமாக இந்த டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.

“வழக்கமா நரிக்கூட்டத்தை வேட்டையாட சிங்கம் தான் வரும்.. ஆனா இப்போது இன்னொரு நரியே வந்திருக்கிறது”, “எனக்கு கட்சி ஆரம்பித்து ஜனங்களை ஏமாத்தவும் தெரியாது.. கட்சி ஆரம்பிக்க போறேன்னு சொல்லி ஜனங்களை ஏமாத்தவும் தெரியாது” என்கிற வசனங்கள் வரும் நாட்களில் பரபரப்பை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை. (இவை விஜயகாந்த் கமல் ரஜினி ஆகிய நடிகர்களை மறைமுகமாக குறிப்பிடுவதாக உள்ளது எனலாம்)

சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் வசனங்களில் பங்களிப்பு செய்த கருந்தேள் ராஜேஷ் தான் இந்த படத்தின் வசனங்களை எழுதியுள்ளார்

125க்கும் மேற்பட்ட சூப்பர்ஹிட் பாடல்களை எழுதிய கு.கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

விரைவில் ரிலீஸாகும் விதமாக இந்தப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

*தொழில்நுட்ப குழுவினர் விபரம்*

ஒளிப்பதிவு & இயக்கம் ; மோகன் டச்சு

திரைக்கதை ; இயக்கம் (கிரியேடிவ்) ; ஸ்ரீபதி

ஒளிப்பதிவாளர் (2வது) ; மாநில அரசு விருது பெற்ற ஆர்.கலைவாணன்

வசனம் ; கருந்தேள் நாகராஜ்

படத்தொகுப்பு ; மதுரை வளர் பாண்டியன்

சண்டை காட்சிகள் ; ஜாக்கி ஜான்சன்

நடனம் ; வாசு நவநீதன்

கலை இயக்குனர் ; கே மாதவன்

நிர்வாக தயாரிப்பாளர் ; S.கிறிஸ்டி

தயாரிப்பு வடிவமைப்பு ; விவேக் (Primerose Entertainment)

மக்கள் தொடர்பு ; A.ஜான்

#Sathyaraj – #Sreepathy starrer #Angaaragan teaser s here..

‘Angarakan’ update.. Villain again.; Satyaraj teasing Kamal – Rajini – Vijay

PS2 CHOLA TOUR UPDATE ஏப்ரல் 15 – 27 வரை.. இந்தியா முழுவதும் சோழர் பயணம்

PS2 CHOLA TOUR UPDATE ஏப்ரல் 15 – 27 வரை.. இந்தியா முழுவதும் சோழர் பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிப்பில் மணிரத்னம் இணைந்து தயாரித்த ‘பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த படம் உலகளவில் ரூ 400 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இதில் விக்ரம், ஐஸ்வர்யாராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, கார்த்தி, ஜெயம் ரவி சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, ஆதேஷ் பாலா, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்த படம் இந்திய அளவில் பிரபலமாக பேசப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்த படக்குழுவினர் தமிழகம் கேரளா ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட இந்திய பகுதிகளுக்கு சென்று பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ PS2 படத்தின் 2ம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இதனையடுத்து மீண்டும் சோழர் பயணம் தொடங்கி விட்டதாக படக்குழுவினர் புதிய வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் அவர்கள் இன்று ஏப்ரல் 15 முதல் 27 ஆம் தேதி வரை எங்கெல்லாம் சுற்றுப்பயணம் செல்கிறார்கள் என்ற விவரத்தை அளித்துள்ளனர்/

இன்று ஏப்ரல் 15 – சென்னை

ஏப்ரல் 16 – கோயம்புத்தூர்

ஏப்ரல் 17 – சென்னை

ஏப்ரல் 18 – டெல்லி

ஏப்ரல் 20 – கொச்சின்

ஏப்ரல் 22 – பெங்களூரூ

ஏப்ரல் 23 – ஹைதராபாத்

ஏப்ரல் 24 & 25 – மும்பை

ஏப்ரல் 26 – திருச்சி

ஏப்ரல் 27 – சென்னை

*twitter*

#PS2CholaTour starts with the #PS2Anthem launch event today at 7 PM in the presence of @arrahman sir!

The #Cholas are coming to your city!
📍Chennai – Coimbatore – Delhi – Cochin – Bengaluru – Hyderabad – Mumbai – Trichy!

#CholasAreBack
#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN @SunTV #PenMarudhar @SVC_official @GokulamMovies @film_dn_

@chiyaan @actor_jayamravi @Karthi_Offl #AishwaryaRaiBachchan @realsarathkumar @trishtrashers #AishwaryaLekshmi #SobhitaDhulipala | Prabhu | Jayaram | @prakashraaj | Jayachitra | @actorrahman @iamvikramprabhu @LalDirector @rparthiepan | Riyaz Khan | @dop_ravivarman | Thota Tharrani | @sreekar_prasad @jeyamohanwriter @bagapath @ekalakhani | Vikram Gaikwad | @KishanDasandCo | Kumaravel | @gopiprasannaa @mdeii @johnsoncinepro | @proyuvraaj | Suresh Permal | Karthik Sekaran |@NakulAbhyankar | Aravind Crescendo | #RiyasdeenRiyan | The Glassbox | @gobeatroute

Ponniyin Selvan PS2 CHOLA TOUR UPDATE

More Articles
Follows