தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாளம் மற்றும் தமிழில் கலக்கிக் கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கு & ஹிந்தி மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார்.
இவர் பிசியாக நடித்து வருவதால் தெலுங்கில் அவர் நடித்து ரிலீசாக உள்ள ‘ரங்தே’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துக் கொள்ள மாட்டார் என தகவல்கள் பரவியது.
எனவே அந்த பட ஹீரோ நிதின், புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என வித்தியாசமான பாணியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால போட்டோ ஒன்றை தனது கையில் வைத்தபடி சோஷியல் மீடியாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நிதின்.
அதில்… “மிஸ்ஸிங்.. காணவில்லை. டியர் அனு.. ரங்தே புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டே ஆக வேண்டும் .. இப்படிக்கு உன்னுடைய அர்ஜுன்” என குறிப்பிட்டிருந்தார். .
அவரின் அழைப்பை ஏற்று கீர்த்தி சுரேஷும் தவறாமல் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்தப் படத்தில் அனுவாக கீர்த்தி சுரேஷும், அர்ஜுனாக நிதினும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Nithin requests Keerthy Suresh to join film promotions