தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹீரோ வில்லன் காமெடியன் குணச்சித்திர கேரக்டர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் நாசர்.
இவர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் நாசர்.
தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
இந்த படத்தில் மெஹ்ரின், சுகாசினி, நடிகர் சாயாஜி ஷிண்டே ஆகியோருடன் நடித்து வருகிறார்.
தெலங்கானா போலீஸ் அகாடமியில் நேற்று சூட்டிங் நடைபெற்றது.
மாடிப்படி கட்டுகளில் நாசர் இறங்கி வந்த போது கால் வழுக்கி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
“நாசருக்கு லேசான காயம்தான். பயப்படும்படி ஏதுமில்லை. அவர் நலமாக இருக்கிறார்’’ என நாசரின் மனைவி கமீலா தெரிவித்துள்ளார்.
Actor Nasser health updates