தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சமுதாய முன்னேற்றத்திற்கு திரைப்படங்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.. இருக்கிறது என்பதை வரலாற்று ஏடுகள் நம்மை ஞாபகப்படுத்துகின்றன.
இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்டத்தின்போது அக்கால திரைப்படங்கள் அவ்வுணர்வை மக்களிடையே பரவ செய்ததற்க்கான சாட்சிகள் கருப்பு, வெள்ளை படங்களாக இன்றும் காண கிடைக்கின்றன.
குறிப்பாக தமிழகத்தில் சமுதாய சீர்வை கொண்டுவந்ததில் திரைப்படங்கள் பெரும் பங்கு ஆற்றியிருக்கின்றன.
இன்றைய சூழலில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா பல கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பி இருக்கிறது.
ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தணிக்கை முறையே போதுமானதாக இருந்தும், இப்புதிய சட்டம் படைப்பாளிகளின் கருத்துக்களை முடக்கும் வண்ணமாய் இருக்கிறது.
அரசுகள் மக்களின் பிரதிநிதி மக்கள் உணர்வுகளை என்றும் அவர்கள் செவி சாய்க்க வேண்டும், கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழக மக்களின் பிரதிநிதியாய் இருக்கும் மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இவ்விஷயம் குறித்து துறை சார்ந்தவர்களின் கவலையை ஆழமாக கேட்டறிந்து அதற்கான முன்னெடுப்பும் எடுத்திருக்கிறார் என்பது எங்களை நிம்மதி அடைய செய்வதாக இருக்கிறது.
அவருக்கு நடிகர் சமூகத்தின் சார்பாக நன்றி சொல்வது நம் கடமை. முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
– நடிகர் எம்.நாசர்
7.7.2021
Actor Nassar voice against cinematograph act 2021





