ஹிந்தி சிங்கிளில் நடித்த முதல் தென்னிந்திய நடிகர் அல்லு சிரீஷ்

ஹிந்தி சிங்கிளில் நடித்த முதல் தென்னிந்திய நடிகர் அல்லு சிரீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அல்லு சிரீஷ் ஒரு டிரெண்ட் செட்டர் என்பதில் சந்தேகமில்லை.

அல்லு சிரீஷ் தென்னிந்திய விருது விழாக்களான ஐஃபா, பிலிம்பேர் மற்றும் சைமா உள்ளிட்ட பல விருது விழாக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.

இவரின் நகைச்சுவை உணர்வின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார்.

டிக்டாக்கில் இணைந்த முதல் நடிகர் இவர், மேலும் அதில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டிருந்தார்.

இந்தி பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமான தர்ஷன் ராவல் மற்றும் நீதி மோகன் ஆகியோர் பாடிய இந்தி – விலாயதி ஷரப் என்ற மியூசிக் வீடியோவில் நடித்து, இந்தி சிங்கிளில் நடித்த முதல் இளம் தென்னிந்திய நடிகர் என்ற அங்கிகாரம் பெற்றுள்ளார்.

சிரீஷுக்கு மொழி ஒருபோதும் தடையாக இருந்ததில்லை.

மேலும் மலையாள திரைப்படத்தில் நடித்த முதல் தெலுங்கு நடிகர் இவர், 1971: பியோண்ட் பார்டர்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் இணைந்து நடித்தார்.

நடிகர் அல்லு சிரீஷ் அவர்களின் வரவிருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஒரு காதல்-நகைச்சுவை, அதன் விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று தெரியப்பட்டுள்ளது.

திரைப்படங்களைத் தவிர, சிரிஷ் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர்.

மேலும் இனையத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர்களின் ஆதரவை பெற்று ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார்.

Actor Allu Sirish talks about his Hindi single ‘Vilayati Sharab’

JUST IN ‘நடிச்சா ஹீரோதான் சார்..’ நடிகர் விருச்சககாந்த் பரிதாப மரணம்.. படிச்சா அழுதுடுவீங்க

JUST IN ‘நடிச்சா ஹீரோதான் சார்..’ நடிகர் விருச்சககாந்த் பரிதாப மரணம்.. படிச்சா அழுதுடுவீங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் & சந்தியா ஜோடியாக நடித்த படம் ‘காதல்’.

சுகுமார், சூரி, தண்டபாணி உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்

இந்த படத்தில் சினிமா சான்ஸ் தேடி அலையும் ஒரு கேரக்டரில் விருச்சககாந்த் என்பவர் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் ‘நடிச்சா ஹீரோதான் சார்..’ என்ற ஒரே வசனத்தை பேசி பாபு என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானார்.

அதனை தொடந்து சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் போதிய வருமானம் இன்றி சூளை அங்காளம்மன் கோயில் அருகில் உள்ள நடைபாதையில் வசித்து வந்துள்ளார்.

இவரின் தாய், தந்தையரின் இறப்புக்கு பின் மனநலம் சற்று பாதிக்கப்பட்ட நிலையில் தெருவோரம் உள்ள ஆட்டோ நிறுத்துமிடங்களில் உறங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் ஆட்டோவில் உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

எதனால் உயிரிழந்தார் என்பது பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

Kadhal fame Viruchagakanth aka Babu died due to cardiac arrest

Kadhal Viruchagakanth (1)

Kadhal Viruchagakanth (3)

மூவி புரோமோசனில் கலந்துக் கொள்ளாத கீர்த்திக்கு வித்தியாசமான அழைப்பு விடுத்த நடிகர்

மூவி புரோமோசனில் கலந்துக் கொள்ளாத கீர்த்திக்கு வித்தியாசமான அழைப்பு விடுத்த நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RangDeமலையாளம் மற்றும் தமிழில் கலக்கிக் கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கு & ஹிந்தி மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார்.

இவர் பிசியாக நடித்து வருவதால் தெலுங்கில் அவர் நடித்து ரிலீசாக உள்ள ‘ரங்தே’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துக் கொள்ள மாட்டார் என தகவல்கள் பரவியது.

எனவே அந்த பட ஹீரோ நிதின், புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என வித்தியாசமான பாணியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால போட்டோ ஒன்றை தனது கையில் வைத்தபடி சோஷியல் மீடியாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நிதின்.

அதில்… “மிஸ்ஸிங்.. காணவில்லை. டியர் அனு.. ரங்தே புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டே ஆக வேண்டும் .. இப்படிக்கு உன்னுடைய அர்ஜுன்” என குறிப்பிட்டிருந்தார். .

அவரின் அழைப்பை ஏற்று கீர்த்தி சுரேஷும் தவறாமல் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்தப் படத்தில் அனுவாக கீர்த்தி சுரேஷும், அர்ஜுனாக நிதினும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Nithin requests Keerthy Suresh to join film promotions

கமல் முதல் மயில்சாமி வரை.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நட்சத்திரங்கள்..; அதிமுக-வில் யாருமில்லை..!!

கமல் முதல் மயில்சாமி வரை.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நட்சத்திரங்கள்..; அதிமுக-வில் யாருமில்லை..!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.

சில அரசியல் கட்சி சார்பாக சில திரையுலகினர் போட்டியிடுகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் (கோவை தெற்கு) போட்டி.

இவரது கட்சியில் நடிகை ஸ்ரீப்ரியா (மைலாப்பூர்), பாடலாசிரியர் சினேகன் (விருகம்பாக்கம்), தயாரிப்பாளர், பிஆர்ஓ பி.டி.செல்வக்குமார் (கன்னியாகுமரி) போட்டியிடுகிறார்கள்.

திமுக சார்பில் நடிகர் உதயநிதி (ஆயிரம் விளக்கு தொகுதி), தயாரிப்பாளர் அம்பேத்குமார் (வந்தவாசி), ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நடிகரும், இயக்குனருமான சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் நடிகர் விஜய் வசந்த் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

முதன்முறையாக அதிமுக சார்பில் திரையுலகினர் யாரும் போட்டியிடவில்லை.

பாஜக சார்பில் நடிகை குஷ்பு (ஆயிரம் விளக்கு) போட்டியிடுகிறார்.

தேமுதிக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் நடிகர் மீசை ராஜேந்திரநாத் போட்டியிடுகிறார்.

விருகம்பாக்கம் தொகுதியில் நடிகர் மயில்சாமி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

கோவையில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாக போட்டியிடவிருந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிடாமல் விலகிவிட்டார்.

Cinema celebrities list in this assembly election 2021

தேசிய விருது வென்ற தனுஷ் விஜய்சேதுபதி பார்த்திபன் இமான் ஆகியோருக்கு கமல் & ஸ்டாலின் வாழ்த்து

தேசிய விருது வென்ற தனுஷ் விஜய்சேதுபதி பார்த்திபன் இமான் ஆகியோருக்கு கமல் & ஸ்டாலின் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது.

இதில் மொத்தம் 7 விருதுகளை தமிழ் சினிமா வென்று வந்துள்ளது.

சிறந்த நடிகராக தனுஷும், சிறந்த துணை நடிகராக விஜய் சேதுபதியும், சிறந்த இசையமைப்பாளராக டி இமானும் (விஸ்வாசம்), ஒத்த செருப்பு படத்துக்கு 2 தேசிய விருதுகளும் அறிவிக்கப்பட்டன.

இவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டரில்…

7 தேசிய விருதுகள் தமிழ்த் திரைப்படங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாதனையாளர்களுக்கும், அவர்தம் அணியினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு இதனை இரட்டிப்பாக்குவோம். வெல்க தமிழ் சினிமா!

என பதிவிட்டுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டரில்…

தேசிய விருது பெறும் @dhanushkraja @VijaySethuOffl @rparthiepan @immancomposer ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

அசுரன் @VetriMaaran-க்கு அன்புநிறை வாழ்த்துகள்!

அர்ப்பணிப்புடன் – முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன்!

மென்மேலும் சிறப்புகளைப் பெறுக! https://t.co/1tFK3RPkRC

இவ்வாறு மு.க.ஸ்டாலின் நடிகர்களின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

Kamal and stalin wishes to National award winners

ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்

ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா உருவெடுத்துள்ளது.

ஓராண்டை முடித்து விட்ட கொரோனா தற்போது 2வது அலையாக உருவெடுத்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.

எனவே இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற அச்ச உணர்வு மேலோங்கி நிற்கிறது.

2021 ஜனவரி மாதம் முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்துப்பட்டு வருகிறது. (Covishield & Covaxin)

தற்போது வரை சுமார் 2.9 கோடி பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

60 வயதிற்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வந்த நிலையில் அடுத்த மாதம் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

எனவே தகுதியான அனைவரும் உடனடியாக பதிவு செய்து, தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுகிறேன்”

இவ்வாறு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

All those above 45 can get vaccinated against Covid from April 1 says Prakash Jawadekar

More Articles
Follows