கோர்ட்டில் விவாகரத்து வரிசை.; திருமண சர்ச்சையில் சிக்கிய அபிசரவணன் அடுத்தவர்களுக்கு அட்வைஸ்

கோர்ட்டில் விவாகரத்து வரிசை.; திருமண சர்ச்சையில் சிக்கிய அபிசரவணன் அடுத்தவர்களுக்கு அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016-ல் வெளியான பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகன் நாயகியாக இணைந்து நடித்தவர்கள் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன். தற்போது சரவணன் விஜய் விஷ்வா என தனது பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல அதிதி மேனன் தற்போது மிர்னா மேனன் என தனது பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார்.

பட்டதாரி படத்தில் நடித்த போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்கிற தகவலும் வெளியானது. திருமணம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் அபி சரவணனுக்கும் தனக்கும் திருமணம் நடக்கவில்லை என்றும் ஆனால் போலியான சான்றிதழ்களை வைத்து தன்னை அவர் மிரட்டுகிறார் என்றும் காவல்துறையில் புகார் அளித்தார் மிர்னா மேனன்.
அபி சரவணனுக்கு முன்பே பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் அந்த புகாரில் கூறியிருந்தார் மிர்னா மேனன்.

இதுகுறித்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மிர்னா மேனன் மீது குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் அபி சரவணன் கொடுத்த அந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உயர்நீதிமன்றத்திற்கு மனு செய்தார் மிர்னா மேனன். தற்போது டிசம்பர் 22 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்துள்ளது

இதுகுறித்து நடிகர் அபிசரவணன் இன்று மீடியாக்களை அழைத்து தனது இருப்பு குறித்த விபரங்களை தெரிவித்தார்.

“எனக்கும் மிர்னா மேனனுக்கும் 2016ல் பட்டதாரி படத்தில் நடிக்கும்போது அறிமுகம் ஏற்பட்டது. அப்போது எனது வீட்டிற்கு அழைத்துச்சென்று என் பெற்றோரிடம் அறிமுகப்படுத்தினேன் அப்போது நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று என் வீட்டிலும் கூறினார்கள்.

மிர்னா மேனனின் பெற்றோர் வெளிநாட்டில் இருந்ததால் அவர்களிடம் வீடியோ சேட்டிங்கில் அனுமதியும் வாழ்த்தும் பெற்று 2016 ஜூன் 9ஆம் தேதி மதுரையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம்.. அதன்பின் மதுரையிலும் அதைத் தொடர்ந்து சென்னை வந்த பின்பு தனியாக வீடு எடுத்து ஒரே வீட்டிலும் கடந்த மூன்று வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்தோம்.

கடந்த 2018 நவம்பர் மாதம் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக நான் சென்றிருந்த நிலையில், என்னை விட்டு மிர்னா மேனன் விலகி விட்டார். அதன் பின்னர் அது குறித்து விசாரிக்க சென்றபோதுதான், என் மீதும் நான் செய்துவரும் சமூக பணிகள் குறித்தும் அவதூறான குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தினார்

இரண்டு வருடத்திற்கு முன்பு பத்திரிகையாளர்களை நான் சந்தித்தபோது எனக்கும் எனது மனைவிக்குமான பிரச்சனையை சட்டபூர்வமாக அணுகி கொண்டிருக்கிறேன் என்றும் எங்கள் திருமணம் சட்டப்பூர்வமானதா இல்லையா என்பது பற்றி சட்டபூர்வமான விசாரணை போய்க்கொண்டிருக்கிறது என்பதால் .அதைப்பற்றி இப்போது பேச விரும்பவில்லை என்றும் கூறினேன் இப்போது அந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்துள்ள நிலையில் அது குறித்த விபரங்களை உங்களுக்கு தெரியப்படுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்..

அபி சரவணனுக்கும் எனக்கும் திருமணம் நடக்கவில்லை நாங்கள் இருவரும் நண்பர்களாகவே பழகி வந்தோம் ஆனால் அவர் போலியான திருமண சான்றிதழை காட்டி என்னை மிரட்டுகிறார் என்று என்னையும் சமூகம் சம்பந்தமான எனது பணிகளையும் கொச்சைப்படுத்தி, என்னை அளவுக்கதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார் மிர்னா மேனன்.

இந்த சமூகத்தில் எனக்கு இருந்த நற்பெயரை கெடுத்து விட்டார். அந்த நிலையில் அவர் என் மனைவிதான் என்பதற்கான ஆதாரங்களை குடும்பநல நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அவர் மீது வழக்கு தொடர்ந்தேன்.

ஆனால் அதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை எனக்கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் மிர்னா மேனன். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அதிதி மேனன் மீது நான் தாக்கல் செய்திருந்த வழக்கிற்கு முகாந்திரங்கள் இருக்கிறது என்றும் இந்த வழக்கை குடும்பநல நீதிமன்றம் 3 மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் கூறி உத்தரவிட்டு மிர்னா மேனன் மனுவையும் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று கடந்த டிசம்பர் 22ஆம் தேதி தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அந்த தீர்ப்பில் மிர்னா மேனனும் நானும் திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என்றும் இரண்டு மாதத்திற்குள் மிர்னா மேனன் அபி சரவணனுடன் இணைந்து வாழ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களையும் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்..

அபி சரவணனும் நானும் திருமணம் செய்யவில்லை என்று கூறியுள்ள மிர்னா மேனன் எதற்காக தன்னுடைய கடன் விண்ணப்ப பத்திரங்களில் தன்னுடைய கணவர் பெயர் அபி சரவணன் என்று குறிப்பிட்டுள்ளார்..

எனக்கு தமிழ் தெரியாததால் அபி சரவணன் பல டாக்குமெண்ட் களிலும் வெற்று பேப்பர்களிலும் கையெழுத்து பெற்றுக்கொண்டார் என்று மிர்னா மேனன் கூறியுள்ளது ஏற்புடையது அல்ல.. ஒரு பொறியியல் பட்டதாரியான அவர் இப்படி எந்த ஒரு டாக்குமெண்டையும் படித்துப் பார்க்காமல் கையெழுத்திட்டுள்ளார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

நாங்கள் ஒன்றாக கணவன் மனைவியாக வாழ்ந்ததை நேரடி சாட்சியாக கண்ட எனது பெற்றோர் மற்றும் தனது வீட்டில் வேலை பார்த்த நபர்கள் அனைவரும் அளித்த வாக்குமூலங்கள் உண்மைதான் என்று கூறி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் மிர்னா மேனனோ இந்த திருமணம் நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களையும் தன் தரப்பு சாட்சிகள் எதையுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை

இப்படி சில காரணங்களை கூறி மிர்னா மேனன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன் எனக்கு கிடைக்கவேண்டிய நியாயமான தீர்ப்பும் தற்போது கிடைத்துள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மிர்னா மேனன் என்னுடன் தான் வாழவேண்டும் என ஒருபோதும் நான் கட்டாயப்படுத்த மாட்டேன்.. ஆனால் அவருக்காக எப்போதும் நான் காத்திருப்பேன்.. ஏனென்றால் என் காதல் உண்மையானது.. உண்மையான என் காதலை புரிந்துகொண்டு அவர் மீண்டும் என்னிடம் திரும்பி வந்தால் என்னைவிட சந்தோஷப்படும் நபர் வேறு யாருமில்லை என்று கூறினார் அபி சரவணன்.

மேலும் அவர் கூறும்போது,…

இந்த வழக்கு தொடர்பாக கிட்டத்தட்ட முப்பது முறை வாய்தாவுக்காக நீதிமன்றம் சென்று வந்துள்ளேன். அந்த சமயங்களில் எல்லாம் பல இளைஞர்கள், இளம் தம்பதியினர் கணவன்-மனைவியாக விவாகரத்திற்கு விண்ணப்பித்து அந்த வழக்கை சந்திப்பதற்காக வரிசையில் நிற்பதையும் பார்க்கும்போது மிகுந்த வருத்தத்திற்கு ஆளானேன்.. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் திருமணத்திற்கு பிறகும் அதே காதலை தொடர வேண்டும் என்பதுதான் நான் இப்போது சொல்ல விரும்பும் விஷயம்..

அதேபோல கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான பிரச்சனைகளை அவர்களை பேசி தீர்த்துக்கொண்டால் இது போன்ற வழக்குகளுக்கு வேலையே இருக்காது. சமூகத்தில் அவர்களது பெயருக்கும் களங்கம் ஏற்படாது. எனவே விவாகரத்து செய்ய நினைப்பதற்கு முன் கணவன் மனைவியர் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ளாமல் பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்வது தான் நல்லது என்றும் கூறியுள்ளார் அபி சரவணன்.

Abi saravanan marriage controversy continues

இளமை மாறாத ராஜா..; இளையராஜா பதிவிட்ட வீடியோ பாடலுக்கு கமல் கருத்து

இளமை மாறாத ராஜா..; இளையராஜா பதிவிட்ட வீடியோ பாடலுக்கு கமல் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய இசை உலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் இளையராஜா.

பல இந்திய மொழிகளில் 1200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

நேற்று இரவு முதல் இளையராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக தகவல் பரவியது.

அவர் ஆன்மிக பயணம் சென்றுள்ளார் என அவரது உதவியாளர் அறிவித்தார்.

இந்த நிலையில் புத்தாண்டு வாழ்த்து கூறுவது போல இளையராஜா பாட்டு பாடி வீடியோ பதிவிட்டுள்ளார்.

இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‛சகலகலா வல்லவன்’ படத்தில் இடம் பெற்ற

‛‛HAPPY NEW YEAR இளமை இதோ இதோ….” என்ற புத்தாண்டு வாழ்த்து பாடலை பாடியுள்ளார். இளமை இதோ, இனிமை என்று பாடி கடைசியில் ‛இதெப்படி இருக்கு’ என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வதந்திகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் இளையராஜா.

இந்த நிலையில் இளையராஜாவின் வீடியோவை டேக் செய்து கமல்ஹாசன் தன் ட்விட்டரில்….

இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன். இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார்.

அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன்.

மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year..

எனப் பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

Kamal Haasan responds Ilayaraaja’s tweet

மொரீஷியஸில் ‘கோல்மால்’ செய்த ஜீவா சிவா பாயல்ராஜ்புத் தான்யாஹோப்

மொரீஷியஸில் ‘கோல்மால்’ செய்த ஜீவா சிவா பாயல்ராஜ்புத் தான்யாஹோப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜாகுவார் ஸ்டுடியோஸின் பி வினோத் ஜெயின் தயாரிப்பில் பொன்குமரன் இயக்கத்தில் ஜீவா-மிர்ச்சி சிவா நடிக்கும் கோல்மால் படத்தின் முக்கிய காட்சிகள் மொரீஷியஸில் வெற்றிகரமாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விடுமுறைக்காக படக்குழு சென்னை திரும்பியுள்ளது. சென்னையில் சில முக்கிய காட்சிகளை படமாக்கிய பின்னர் ஜனவரி மாதம் மொரிஷியஸுக்கு கோல்மால் குழுவினர் மீண்டும் செல்லவுள்ளனர்.

“கடந்த மாதம் மொரீஷியஸில் படப்பிடிப்பை ஆரம்பித்து சுமார் 25 நாட்கள் முக்கியப் பகுதிகளை படமாக்கியுள்ளோம்.

அனைத்துக் காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளன. முழுநீள நகைச்சுவைப் படமாக அனைத்துப் பிரிவினரும் ரசிக்கக் கூடிய வகையில் கோல்மால் இருக்கும்,” என்று இயக்குநர் பொன்குமரன் கூறினார்.

ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா ஆகியோருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து இயக்குநர் கூறுகையில்…

“ஜீவா சிவா இருவரும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். கோல்மால் படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரியும் பேசப்படும்.

பாயல் ராஜ்புத், தான்யா ஹோப், யோகி பாபு, ஆடுகளம் நரேன், மனோபாலா, சுப்பு பஞ்சு,வையாபுரி, யூகி சேது, சஞ்சனா சிங், சாது கோகிலா, விபின் சித்தார்த், ரமேஷ் கண்ணா, கேஎஸ்ஜி வெங்கடேஷ், மாளவிகா, ஜார்ஜ் மரியன் மற்றும் மது சினேகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்,” என்றார்.

கே.பாக்யராஜ் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரின் உதவியாளராக இருந்த பொன்குமரன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படத்தின் கதையை எழுதியர் ஆவார்.

விஷ்ணுவர்தனா, ஏஜமானா ஆகிய வெற்றிகரமான கன்னட படங்களையும், தமிழ்-கன்னட இருமொழி திரைப்படமான சாருலதாவையும் இயக்கியுள்ள பொன்குமரனின் நேரடித் தமிழ்ப் படமாக கோல்மால் அமைந்துள்ளது.

கோல்மாலின் ஒளிப்பதிவை எஸ் சரவணன் கையாள, அருள் தேவ் இசையமைக்கிறார். படத்தொகுப்புக்கு டான் போஸ்கோவும், கலை இயக்கத்திற்கு சிவாவும், பாடல் வரிகளுக்கு மதன் கார்க்கி, விவேகா ஆகியோரும் பொறுப்பேற்றுள்ளனர். பாடல்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன என்று இயக்குநர் தெரிவித்தார்.

ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள கோல்மால் படத்தை பொன்குமரன் இயக்கி ஜாகுவார் ஸ்டுடியோஸ் பி வினோத் ஜெயின் தயாரித்துள்ளார்.

2022-ஆம் ஆண்டின் முதல் பாதியில் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Jiiva – Tanya Hope starrer Golmaal movie updates

‘ரைட்டர்’ படக்குழுவினருக்கு ‘மிஸ்டர் ரைட்’ ரஜினி பாராட்டு..; ரஞ்சித் மகிழ்ச்சி

‘ரைட்டர்’ படக்குழுவினருக்கு ‘மிஸ்டர் ரைட்’ ரஜினி பாராட்டு..; ரஞ்சித் மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ரைட்டர் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் ரைட்டர் படம் பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குனர் பிராங்ளின் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோருக்கு போன் செய்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

பிரமாதமான படம் ரைட்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ரொம்ப சூப்பரா எல்லோரும் நடிச்சிருக்காங்க , சமுத்திரக்கனி சிறப்பா நடிச்சிருக்கிறார்.

சிறந்த எதிர்காலம் பிராங்ளினுக்கு இருக்கு .. படம் விருவிருப்பாக இருந்தது சீக்கிரம் படம் முடிகிறதே என்கிற உணர்வு வந்தது.

சிறந்த படத்தை தயாரிச்சிருக்கீங்க ரஞ்சித் என்று தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

சூப்பர்ஸ்டார் போன் செய்து பாராட்டியதில் ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

எஸ்பி. முத்துராமன் இயக்கிய ‘பாண்டியன்’ படத்தில் மிஸ்டர் ரைட் என்ற கேரக்டரில் ரஜினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth praises Writer movie and team members

Happy New Year.. இளமை இதோ இதோ.. இது எப்டி இருக்கு.?; வதந்திகளுக்கு இளையராஜா பதிலடி (வீடியோ)

Happy New Year.. இளமை இதோ இதோ.. இது எப்டி இருக்கு.?; வதந்திகளுக்கு இளையராஜா பதிலடி (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய இசை உலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் இளையராஜா.

பல இந்திய மொழிகளில் 1200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

நேற்று இரவு முதல் இளையராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக தகவல் பரவியது.

அவர் ஆன்மிக பயணம் சென்றுள்ளார் என அவரது உதவியாளர் அறிவித்தார்.

இந்த நிலையில் புத்தாண்டு வாழ்த்து கூறுவது போல இளையராஜா பாட்டு பாடி வீடியோ பதிவிட்டுள்ளார்.

இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‛சகலகலா வல்லவன்’ படத்தில் இடம் பெற்ற

‛‛HAPPY NEW YEAR இளமை இதோ இதோ….” என்ற புத்தாண்டு வாழ்த்து பாடலை பாடியுள்ளார். இளமை இதோ, இனிமை என்று பாடி கடைசியில் ‛இதெப்படி இருக்கு’ என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வதந்திகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் இளையராஜா.

Music mastero Ilaiyaraja has been active on his Twitter page in recent times and has exciting fans with his regular updates

‘வலிமை’ அடுத்தவன அழிக்க இல்ல.. அடுத்தவன காப்பாத்த..; மாஸ் காட்டும் அஜித்.. தெறிக்கும் ட்ரைலர்

‘வலிமை’ அடுத்தவன அழிக்க இல்ல.. அடுத்தவன காப்பாத்த..; மாஸ் காட்டும் அஜித்.. தெறிக்கும் ட்ரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் 2022 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.

போனிகபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

இப்படத்திலுள்ள நாங்க வேற மாரி & அம்மா பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் செங்கல்பட்டு ஏரியா ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் வாங்கியுள்ளார்.

இவர் பிக்பாஸ் முகேன்ராவ் நடித்த ‘வேலன்’ என்ற திரைப்படத்தை தயாரித்தவர் ஆவார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ’இடிமுழக்கம்’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார் கலைமகன் முபாரக்.

ஓரிரு தினங்களாக வலிமை பட ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வலிமை ட்ரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியானது.

தெறிக்க விட்டு. மாஸ் காட்டியுள்ளார் அஜித்.

‘வலிமை’ அடுத்தவன அழிக்க இல்ல.. அடுத்தவன காப்பாத்த..; உள்ளிட்ட பன்ச் டயலாக்குகள் இடம்பெற்றுள்ளன.

Exclusive : Here’s Ajith Kumar’s Valimai Official Trailer

Valimai Official Trailer

More Articles
Follows