நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் : நாசர் விஷால் கார்த்தி அணியினர் வெற்றி.. பாக்யராஜ் தோல்வி

நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் : நாசர் விஷால் கார்த்தி அணியினர் வெற்றி.. பாக்யராஜ் தோல்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கத் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால் பொருளாளராக கார்த்தி பதவி வகித்தனர்.

அதன்பின்னர் கடந்த 2019ல் ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது.

கடந்த 30 மாதங்களாக நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் காத்து கிடந்தன.

கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.
ஆனால் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால் தேர்தலை செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது. இதனால் பதிவான வாக்குகள் அப்படியே எண்ணப்படாமல் இருந்தன.

தேர்தல் வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேர்தல் செல்லும் என்று அறிவித்து வாக்குகளை எண்ணவும் உத்தரவிட்டது.

அதன்பின்னர் ஏழுமலை என்ற துணை நடிகர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு இன்று மார்ச் 20 சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் காலை ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பாண்டவர் அணி தரப்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். சங்கரதாஸ் அணி தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
மொத்தம் 29 பதவிகளுக்கு நடந்த தேர்தலில் ஆரம்பம் முதலே பெரும்பாலும் பாண்டவர் அணியே முன்னிலை வகித்தது.

தலைவர் பதவிக்காக போட்டியிட்ட நாசர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் ஆகியோர் வெற்றி பெற்றனர். துணைத் தலைவர் (2) பதவிகளுக்கு பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தி கூறியதாவது ;

நடிகர் சங்க தேர்தலில் 2 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு வெற்றி கிடைத்துள்ளது . பதவியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் பதவி வகிப்போம். இந்த 3 ஆண்டுகளில் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும்” இவ்வாறு கார்த்தி கூறினார்

எதிர் தரப்பில் பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையில் போட்டியிட்ட சுவாமி சங்கரதாஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது.

தேர்தல் நாளன்று பதிவானதாக கூறிய வாக்குகளை விட வாக்குப்பெட்டியில் 138 வாக்குச்சீட்டுகள் அதிகமாக இருந்ததாக குற்றம் சாட்டியது இந்த அணி. எனவே பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் வாக்கு எண்ணிக்கையின் போதே மையத்தை விட்டு வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரஷாந்த் கூறியதாவது… “வாக்கு பெட்டியில் வாக்கு சீட்டுக்கள் அதிகமானது எப்படி.? இதைப்பற்றி பேச ஏன் எதிர் அணியினர் தயங்குகிறார்கள்.” என கூறினார்.

சங்கரதாஸ் அணியை சார்ந்த ஐசரி கணேசனும் ஓய்வு பெற்ற நீதிபதி பத்பநாபனிடம் இதுபற்றி புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2022 Nadigar Sangam Election Result Nassar Vishal Karthi won

யுவன் இசையில் ஹீரோவாகும் ‘குக் வித் கோமாளி’ நடிகர் புகழ்

யுவன் இசையில் ஹீரோவாகும் ‘குக் வித் கோமாளி’ நடிகர் புகழ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் பிரபலமான பலர் இன்று சினிமாவில் சாதித்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் ஹீரோக்களாக உயர்ந்துள்ளனர்.

சந்தானம், சிவகார்த்திகேயன், யோகிபாபு ஆகியோர் நாயகர்களாக உயர்ந்துள்ளனர்.

ரோபோ சங்கர், ஜெகன், லொள்ளு சபா மனோகர், சுவாமிநாதன் உள்ளிட்டோர் காமெடியில் கலக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ‘மிஸ்டர் ஜு கீப்பர்’ படத்தின் மூலம் நாயகனாக நடிக்கப் போகிறார் புகழ்.

இவர் குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர். ஒரு சில படங்களில் காமெடியனாகவும் நடித்தார். ஆனால் அந்த படங்களில் இவருக்கு பெயர் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘மிஸ்டர் ஜு கீப்பர்’ படத்தின் முதல் பார்வை இன்றைய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் வெளியாகிறது.
இந்த படத்தை சுரேஷ் என்பவர் இயக்குகிறார். இவர் மாதவன், சினேகா நடித்த ‘என்னவளே’ படத்தை இயக்கியவர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

Pugazh starring Mr Zoo Keeper First Look J Suresh Yuvan

‘வாடிவாசல்’ செட் போட்டு சூட்டிங்கை தொடங்கிய சூர்யா – வெற்றிமாறன்

‘வாடிவாசல்’ செட் போட்டு சூட்டிங்கை தொடங்கிய சூர்யா – வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாணு தயாரிப்பில் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘வாடிவாசல்’.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் டெஸ்ட் சூட்டிங்கை நடத்தியுள்ளனர்.

சென்னை, ஈசிஆரில் வாடிவாசல் செட் போடப்பட்டு 400க்கும் மேற்பட்ட காளை மாடுகளை காங்கேயம், சிவகங்கை போன்ற பகுதிகளிலிருந்து படப்பிடிப்பிற்காக கொண்டு வந்துள்ளனர்.

இந்த படப்பிடிப்பில் சூர்யா, வெற்றிமாறன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தாணு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Suriya Vetrimaarans Vaadivasal Test shoot started

அம்மு அபிராமியின் ‘பேட்டரி’க்கு வாய்ஸ் சார்ஜ் ஏற்றிய ஜிவி. பிரகாஷ்

அம்மு அபிராமியின் ‘பேட்டரி’க்கு வாய்ஸ் சார்ஜ் ஏற்றிய ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் பேட்டரி. கதாநாயகனாக செங்குட்டுவனும், கதாநாயகியாக அம்மு அபிராமியும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதை, மருத்துவ உபகரணங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.

போலிஸ் இன்ஸ்பெக்டரான செங்குட்டுவனை அம்மு அபிராமி காதலிக்கிறார். ஒரு சந்தர்பத்தில், தன்னுடைய காதலை அவரிடம் தெரிவிக்கிறார்.

ஆனால், ஒரு கொலை கேஸில், கொலைக்காரனை தேடிக்கொண்டிருக்கும் செங்குட்டுவன், அதன் தீவிரத்தால், அவளது காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார்.

அம்மு அபிராமி தனது காதல் உணர்வுகளை பாடலாக பாடுகிறார்.

கவிஞர் நெல்லை ஜெயந்தா எழுதிய…

“நொடிக்குள் மனம் எங்கோ போகிறதே
என்னில் ஏதோ ஆனது நீதானே..
காதலே நீதானே..
பூகோளம் சொல்லும் பொல்லாத பொய்தானா..“ –
என்கிற பாடலை, சித்தார்த் விபின் இசையமைக்க, ஜி. வி. பிரகாஷ்குமார், சக்திஸ்ரீ கோபாலன் இருவரும் பாடியிருக்கிறார்கள்.

மணிபாரதியின் இயக்கத்தில், கே.ஜி. வெங்கடேஷின் ஒளிப்பதிவில், தினேஷ் மாஸ்டரின் நடனப் பயிற்சியில், இந்தப் பாடல் காட்சி, குலுமணாலியில் படமாக்கப்பட்டது.

பேட்டரி மே மாதம் திரைக்கு வருகிறது.

GV Prakash croons for Ammu Abirami in battery

ஆமா.. ஹீரோ கெட்டவனா நடிச்சா ஃபேமிலி படம்..; ஆர்ஜே. பாலாஜியை டென்சனாக்கிய ரசிகர்

ஆமா.. ஹீரோ கெட்டவனா நடிச்சா ஃபேமிலி படம்..; ஆர்ஜே. பாலாஜியை டென்சனாக்கிய ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூக்குத்தி அம்மன் படத்திற்கு பிறகு ஆர்ஜே. பாலாஜி நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ’வீட்ல விசேஷம்’.,

இந்த படம் ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம்.

இந்த படம்’பதாய் ஹோ’ என்ற ஹிந்தி பட தமிழ் ரீமேக்காகும்.

ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். அவர்கள் திருமணம் செய்யவுள்ள நிலையில் நாயகனின் அம்மா கர்ப்பம் ஆகிறார்.

தனது அம்மா கர்ப்பமாக இருக்கிறார் என காதலியிடம் சொல்ல முடியாத நிலை நாயகனுக்கு ஏற்படுகிறது. அதன்பின்னர் நடக்கும் விஷயங்களை அந்த ஹிந்தி படத்தில் சொல்லியுள்ளனர்.

இந்த படத்தை தான் ஆர்ஜே. பாலாஜி தன் பாணியில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சொல்லியிருக்கிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் அந்த ஹிந்தி படத்தை பார்த்துள்ள ரசிகர் ஒருவர் ‘சர்ச்சைக்குரிய கதை. தமிழகத்தில் இந்த கதையை எப்படி எடுத்துக் கொள்வார்கள்? என பதிவு செய்திருந்தார்.

அதற்கு ஆர்ஜே பாலாஜி தன்னுடைய பாணியில்… “ஆமா !!! Familyல ஒருத்தங்க preganant ஆனா மாறி படம் எடுத்தா controversial story, But hero rowdy, don, கொலைகாரன், திருடன், smugglerஆ நடிச்சா family subject படம் !!! என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Director RJ Balaji reply to his fan

ஒரே படத்திற்காக மீண்டும் சூர்யாவுடன் இணையும் பாலா & சுதாகொங்கரா

ஒரே படத்திற்காக மீண்டும் சூர்யாவுடன் இணையும் பாலா & சுதாகொங்கரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலா இயக்கவுள்ள புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்ற தகவல்களை ஏற்கெனவே நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

மீனவர்களின் கடல் சார்ந்த பிரச்சனைகளை இந்த படம் பேசவுள்ளது.

எனவே கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், புதுச்சேரி, கோவா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இப்பட படப்பிடிப்பை நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இதில் ஜோதிகா மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்பட நிர்வாக தயாரிப்பாளராக சுதா கொங்கரா பணிபுரிய உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இப்பட பணிகளை முடித்துவிட்டு ’சூரரைப்போற்று’ பட ஹிந்தி ரீமேக் பணிகளை சுதா கொங்கரா மேற்கொள்வாராம்.

சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.

அதுபோலு சூர்யா நடித்த ‘நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களை பாலா இயக்கியிருந்தார்.

தற்போது இவர்கள் மூவரும் ஒரே படத்தில் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகும் எனத் தெரிகிறது.

Director Bala and Sudha Kongara joins for a new film

More Articles
Follows