தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராயன் விமர்சனம் 4/5… தனுஷின் டபுள் சம்பவம்
ஸ்டோரி…
சிறுவயதிலேயே தன் பெற்றோரை தொலைத்து விட்ட தனுஷ் அவரது இரண்டு தம்பிகளையும் ஒரு தங்கையையும் வளர்த்து வருகிறார்.. இவர்களது நிலை அறிந்த செல்வராகவன் இவர்களுக்கு உதவியாக ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து பாதுகாவலராக இருந்து வருகிறார்..
இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு இரவு நேர ஃபர்ஸ்ட் ஃபுட் உணவகம் நடத்தி வாழ்ந்து வருகின்றனர்.
அதே ஊரில் இருக்கும் இரண்டு தாதாக்கள் சரவணன் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் இடையே 25 ஆண்டு கால பகை இருந்து வருகிறது.. இந்த சூழ்நிலையில் தனுஷின் தம்பி சந்தீப் கிஷன் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் தன்னை அறியாமல் மது போதையில் சரவணனின் மகனை ambiyaiகொன்று விடுகிறார்.. இதனையடுத்து ராயா உன் தம்பியை என்னிடம் ஒப்படைத்து விடு இனிமேல் உனக்கு ஒரு தங்கை ஒரு தம்பி என்று மட்டும் நினைத்துக் கொள். என்று எச்சரிக்கிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது.? தம்பியை விட்டுக் கொடுத்தாரா? என்ன செய்தார் தனுஷ் என்பது மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
காத்தவராயன் – தனுஷ்
முத்துவேல் ராயன் – சந்தீப் கிஷன்
மாணிக்கராயன் – காளிதாஸ்
துர்கா – துஷாரா விஜயன்
ஆண் பிள்ளைகள் அனைவருக்கும் ராயன் என்ற பெயரே இருப்பதால் தன் தங்கைக்கு துர்கா என மாற்றி பெயர் வைக்கிறார் தனுஷ்.. தன் தங்கைக்கு பெயர் வைக்கும் அந்த காட்சியே அசத்தல் ரகம்தான்..
நடிகர் இயக்குனராக தனுஷ்.. தன் மீது முழு நம்பிக்கை வைத்து தனது 50வது படத்தை தானே இயக்கி அதில் மாஸ் காட்டி இருக்கிறார் தனுஷ்..
தலையை மொட்டை அடிக்க யோசிக்கும் ஹீரோக்கள் மத்தியில் மொட்டை தலை முறுக்கு மீசை என கெத்தாக அசத்தி இருக்கிறார்..
தம்பி பாசம் தங்கை பாசம் என குடும்ப செண்டிமெண்ட் படமாக இருந்தாலும் பெண்களை அலறவிடும் ரத்தத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் இயக்குனர் தனுஷ்.. ஆனால் ஆக்ஷன் பிரியர்களுக்கு இந்த படம் ஸ்வீட் அல்வா தான்..
தனுஷ் நினைத்திருந்தால் அவரே மூன்று கதாபாத்திரத்தில் கூட நடித்திருக்கலாம்.. ஆனால் சந்திப் காளிதாஸ் உள்ளிட்ட நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கும் ஸ்பேஸ் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
சந்திப் கிஷனும் கொஞ்சம் வில்லத்தனம் கலந்து நடிப்பில் கவருகிறார்.. அவருக்கும் அபர்ணாவுக்கும் கெமிஸ்ட்ரி சூப்பர்.. கொலு கொலு குண்டு பெண்ணாக அபர்ணா போடும் ஆட்டம் வேற லெவல்..
கல்லூரி மாணவனாக காளிதாஸ் கலக்கல்.. பெரிய அண்ணனுக்கு பயம்.. சின்ன அண்ணனுக்கு நட்பு என வெரைட்டி காட்டி இருக்கிறார்.. அதே சமயம் இடைவேளைக்குப் பிறகு இவரது கேரக்டரில் வரும் திருப்புமுனை நம்பும்படியாக இல்லை.. அதை இயக்குனர் தனுஷ் வலுப்படுத்தி இருக்கலாம்.
சார்பட்டா பரம்பரை & அநீதி படங்களில் கலக்கிய துஷாரா விஜயன் இந்த படத்தில் ஆக்ஷனிலும் மிரட்டி சென்டிமென்டிலும் அசத்தியிருக்கிறார்.. தன் அண்ணனுக்காக ஆஸ்பத்திரியில் வில்லன்களை அடித்து துவசம் செய்திருக்கிறார் துஷாரா.
எஸ்.ஜே. சூர்யா.. வழக்கம்போல வில்லத்தனத்தில் அலற விட்டிருக்கிறார்.. சைலன்ட் வில்லனாக கலக்கியிருக்கிறார் சரவணன்.
தன் தந்தையை கொன்றவர்களை பழி தீர்க்க பிரகாஷ்ராஜ் போடும் போலீஸ் ஸ்கெட்ச் வேற லெவல் ரகம்… அதிலும் ராயன் பாகம் 2காக வைத்த ட்விஸ்ட் சூப்பர்.
கொஞ்ச நேரமே நட்புக்காக வந்தாலும் வரலட்சுமி செம.. தன் கணவன் எஸ்.ஜே சூர்யாவுக்கு 2வது பொண்டாட்டி இருப்பது தெரிந்தும் அவருக்கு பிரச்சனை ஏற்படும் காட்சியில் சிரிப்பலையில் அதிரும்
பிளாஷ்பேக் காட்சியில் செல்வராகவன் கெட்டப் சிறப்பு.. ஒரு பாதுகாவலராக குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் இவரது ஆலோசனை அருமை..
திலீபன் கேரக்டரும் ரசிக்க வைக்கிறது.. இப்படியாக ஒவ்வொரு நடிகர்களையும் அந்த கேரக்டருக்காக தேர்ந்தெடுத்து அருமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் தனுஷ்..
தன் 50வது படத்தில் ஹீரோயின் வேண்டாம் டூயட் வேண்டாம் என தனுஷின் தைரிய முடிவுக்கே அவரை வெகுவாக பாராட்டலாம்..
டெக்னீசியன்ஸ்…
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அருமை.. பல காட்சிகள் இருட்டில் படமாக்கப்பட்டு இருந்தாலும் அதற்கு ஏற்ற லைட்டிங் கொடுத்து தனுஷை ஆக்சன் காட்சிகளில் ஜொலிக்க விட்டுள்ளார்..
பிளாஷ்பேக் காட்சிகளில் குடிசைப் பகுதிகளை அமைத்த கலை இயக்குனரை பாராட்ட வேண்டும்..
வெஸ்டர்ன் கிளாசிக் என இது நாள் வரை இசையில் மிரட்டி கொண்டிருந்த ஏ ஆர் ரகுமான் இந்த படத்தில் தர லோக்கல் பாணியில் இறங்கி இசையை தெறிக்க விட்டுள்ளார். அடங்காத அசுரன்… வாட்டர் பாக்கெட் பாடல்கள் பட்டையை கிளப்பும். உசுரே நீதானே நீதானே பாடலும் சிறப்பு..
பைட் மாஸ்டரை நிச்சயம் பாராட்ட வேண்டும். முக்கியமாக இடைவேளையில் வரும் அந்த ஆக்ஷன் காட்சி.. மழை நீரும் ரத்தமும் கலந்த காட்சிகளை படமாக்கி இருப்பது வேற லெவல் ரகம்..
தனுஷுக்கு ஏற்ற வகையில் பிரம்மாண்டத்தை கொடுத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்..
மொத்தத்தில் ராயன் படத்தில் நடிகராகவும் இயக்குனராகவும் டபுள் சம்பவம் செய்திருக்கிறார் தனுஷ்..
Dhanush 50th movie Raayan review