தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘ககனாச்சாரி’ (மலையாளம்) பட விமர்சனம்
ஸ்டோரி…
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பல டைம் டிராவல் படங்களை பார்த்திருக்கிறோம்.. அல்லது ரெட்ரோ டைப் பட பாணியில் பல படங்கள் வருவதை பார்த்திருக்கிறோம்.. சுப்ரமணியபுரம் தொடங்கி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வரை பல படங்கள் அந்த வரிசையில் சேரும்..
ஆனால் தமிழ் சினிமாவிற்கு நேர் எதிராக ஒரு வித்தியாசமான கற்பனையை இந்த படத்தின் இயக்குனர் அருண் சந்து கொடுத்திருக்கிறார்.. அதாவது 2040 ஆண்டுகளுக்கு இந்த படத்தின் கதை பயணிக்கிறது..
இன்று பிளாஸ்டிக் கழிவுகளால் பல ஆபத்துகளை நம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.. இப்படியே காலம் சென்று கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் பெட்ரோல் உள்ளிட்ட எந்த அத்தியாவசிய பொருள்களும் நமக்கு கிட்டாது.. அப்படியான ஒரு சூழ்நிலையில்
அந்த காலக்கட்டத்தில் பூமியில் உள்ள எரிபொருள் எல்லாம் தீர்ந்துவிட்ட நிலையில் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு அரசால் தடை செய்யப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் மக்களை அரசாங்கம் ஒவ்வொருவராக கண்காணிக்கிறது.
ஒரு குடியிருப்பில் முன்னாள் ராணுவ வீரர் விக்டர் வாசுதேவன் (கே.பி.கணேஷ்குமார்) & ஆலனும் (கோகுல் சுரேஷ்), அஜுவும் (வைபவ் வர்கீஸ்) வசிக்கிறார்கள்.. இவர்கள் மூவருமே திருமணம் ஆகாதவர்கள்.
இந்த சூழ்நிலையில் ஏலியன்கள் பற்றி ஆவணப் படம் தயாரிக்க வரும் நபர்கள் இவர்களிடம் பேட்டி எடுக்க வருகின்றனர்.
அப்போது நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை வைத்து படத்தை இயக்கி கதை சொல்லி இருக்கிறார் அருண் சந்து.
கேரக்டர்ஸ்…
Aju Varghese, Anarkali Marikar, Gokul Suresh, Ganesh Kumar
கோகுல் சுரேஷ், அஜு வர்கீஸ், கணேஷ் குமார்.. இவர்கள் மூவரை சுற்றி படத்தின் கதை நகர்கிறது.. தாங்கள் சந்தித்த சுவாரசியமான சம்பவங்களை இவர்கள் நகைச்சுவையோடு பகிர்ந்து இருக்கின்றனர்.. ஆனால் இந்த படத்தை மலையாளத்தில் கொண்டாடினாலும் தமிழுக்கு ஏற்றவாறு டப்பிங் செய்து டயலாக்குகளை மாற்றி இருக்கலாம்.. ஆனால் முழுக்க முழுக்க மலையாளத்தில் ஆங்கில சப்டைட்டலுடன் படம் பயணிக்கிறது.. எனவே தமிழர்களுக்கு இந்த படம் புரிய தாமதமாகலாம்..
ஏலியனாக நடித்திருக்கும் அனார்கலி மரிகார் மௌன மொழி பேசி பார்வையிலேயே உணர்வுகளை கொண்டு நடிப்புக்கு பலம் சேர்த்திருக்கிறார்.. இறுதியாக அவரது குரல் திடீரென வரும்போது நிச்சயம் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது..
250 வயதாகும் அந்த ஏலியன் எப்படி 25 வயது இளமையாக இருக்கிறார்..?
ஏலியன் மீது கோகுல் சுரேஷுக்கு காதல் மலர்கிறது.. இவருக்காக எழுதப்பட்ட வசனங்கள் காமெடி கலந்து ரசிக்க வைக்கிறது.. ( இந்த கோகுல் சுரேஷ் மலையாள நடிகர் கேரளாவின் முதல் பிஜேபி எம்பி சுரேஷ் கோபியின் மகன் ஆவார் என்பது கூடுதல் தகவல்.)
டெக்னீசியன்ஸ்….
Directed By : Arun Chandu
Music By : Sankar Sharma
Produced By : Ajith Vinayaka Films
ஒளிப்பதிவாளர் சுர்ஜித் எஸ்.பய் கதைக்கான புதிய களத்தை ஒரே அறையில் படமாக்கி இருப்பது அயற்சியை தருகிறது… ஆவணப்படம் பார்க்கும் ஓர் உணர்வை மட்டுமே கொடுக்கிறது..
சங்கர் சர்மாவின் இசையும் படத்தொகுப்பாளர் சீஜே அச்சு மற்றும் கலை இயக்குநர் எம்.பாவா ஆகியோரது பணிகள் பாராட்டுக்குரியது.
‘சாஜன் பேக்கரி’, ‘சாயன்ன வார்த் தைகள்’ ஆகிய பட புகழ் அருண் சந்துவின் மூன்றாவது படம் இது..
ககனாச்சாரி… விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் ஒருவன் என்பதுதான் இந்த பொருள்.. அப்படியான ஒரு சர்வதேச கதையை கமர்சியல் கலந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் கொடுத்திருக்கலாம்.
ஏலியன் உலகத்திற்கும் மனித இனத்திற்கும் உள்ள தொடர்பு என பல்வேறு விசயங்கள் பற்றி பேசி இருக்கிறார்..
எத்தனையோ மலையாள படங்களை தமிழ் ரசிகர்கள் ரசித்திருக்கிறார்கள்.. அந்த வரிசையில் இந்த படம் இடம் பெறுவது கொஞ்சம் சந்தேகமே.. மலையாள பட பாணியில் அவர்களுக்கான ஸ்டைலில் படமாக்கி இருப்பது வருத்தமே..
இன்றைய நவீன உலகத்தில் எந்த ஜீவராசிகளையும் பொருட்படுத்தாமல் மனித இனத்தை கூட மதிக்காமல் சுயநலயவாதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த படம் சமர்ப்பிக்கலாம்.
இன்றைய சூழ்நிலையில் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் தண்ணீர் முதல் எரிபொருள் வரை எந்த ஒன்றையும் தேவை அறிந்து பயன்படுத்தி மிச்சப்படுத்தினால் மட்டுமே நாளைய தலைமுறை எந்த அச்சமும் இன்றி வாழ முடியும் என்ற எச்சரிக்கையும் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் அருண் சந்து.
Gaganachari Malayalam movie review





