தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கல்கி 2898 AD விமர்சனம்.. மகாபாரத முடிச்சு
ஸ்டோரி…
மகாபாரத போர் முடிவுக்கு வரும் தருவாயில் துரோணாச்சார்யா மகன் அஸ்வத்தாமன் (அமிதாப்பச்சன்) பாண்டவர் குடும்பத்தில் கருவில் உள்ள குழந்தையை அழிக்கிறார் . அந்த குழந்தையை கொல்ல பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறான்.
இதனை கண்ட கிருஷ்ணர், அஸ்வத்தாமனுக்கு சாகா வரம் அளிக்கிறார்.. நீ பல ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ வேண்டும் கலியுகம் வரும் வரை வேதனையுடன் வாழ வேண்டும் என வரம் அளிக்கிறார்..
அந்த குழந்தையாக தானே பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மண்ணில் அவதரிப்பேன். அப்போது என்னை நீ காப்பாற்ற வேண்டும். அது வரை, நீ வாழனும் என்று சாபம் கொடுத்து சென்று விடுகிறார்.
பின்னர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் கதை நகர்கிறது.. அங்கு சுப்ரீம் யாஸ்கின் பெரிய காம்ப்ளக்சை நிறுவி பிரம்மாண்ட தனி உலகம் நடத்தி, அதில் பல கர்ப்பிணி பெண்களை உருவாக்கி, அவர்களிடம் இருந்து சீரத்தை எடுத்து கொண்டு இருக்கிறார். (அவரே கமல்ஹாசன்)
இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் விடுதலைக்காக காம்ப்ளக்சிற்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கிறது ஷம்பாலா மக்கள் கூட்டம்.
ஒரு சூழ்நிலையில் இந்த ஷம்பாலா கும்பலிடம் வந்து தஞ்சம் அடைகிறார் கர்ப்பிணி பெண் தீபிகா படுகோனே.. வயிற்றில் இருக்கும் அந்த குழந்தை ஒரு கடவுள்..
அதன் பின்னர் என்ன ஆனது.. என்பதே கல்கி படத்தின் மீதிக்கதை.. இதில் பிரபாஸ் யார்? இந்த கதைக்கும் என்ன தொடர்பு என்பது படத்தின் கிளைமாக்ஸ்..
கேரக்டர்ஸ்…
கல்கி படத்தின் கதையின் நாயகனாக பிரபாஸ்.. பைரவா கேரக்டரில் நடித்திருக்கிறார்.. இடைவேளைக்கு முன்பு வரை ஜாலியாக சுற்றும் இவரது கேரக்டர் அதற்கு பின்னர் தான் ஆக்ஷனில் இறங்குகிறது.. கிளைமாக்ஸ் காட்சிகள் இவரது பிளாஷ்பேக் கேரக்டர் நிற்கும்.
பிரபாசும் அமிதாப்பும் மோதும் காட்சிகள் அனல் பறக்கிறது.. சண்டை பயிற்சியை இயக்குனரை பூங்கொத்து கொடுத்து பாராட்டலாம்..
பிரபாஸ்.. காம்ப்ளக்ஸ் செல்ல வேண்டும் அங்கு கிலோ கணக்கில் காற்றை சுவாசிக்க வேண்டும் என்று பேசும் வசனத்தை கவனித்திருக்கலாம்.. எப்படி இருந்தாலும் காற்றை அதிகமாக சுவாசிக்க முடியாது என்பது வசனகர்த்தாவுக்கு தெரியாதா.???!!
இதில் அதிகமாகவே ஸ்கோர் செய்பவர் அமிதாப்பச்சன் தான்.. 100% பொருந்தி போகிறார் இந்த அசுவத்தாமன்..
பிறக்காத ஒரு குழந்தைக்காக.. எப்போது பிறக்கும் என்று தெரியாத ஒரு குழந்தைக்காக அவர் பல வருடங்கள் காத்திருந்து வாழ்ந்து அந்த குழந்தையை காக்க போராடும் போராட்டம் ஹைலைட்..
கர்ப்பிணி பெண்ணாக தீபிகா படுகோன். இவரது வயிற்றில் இருந்து பிறக்கப் போக்கும் அந்த கடவுளுக்காக தான் இந்த யுத்தமே நடக்கிறது.. அதனால் இவரது கேரக்டர் படத்திற்கு கூடுதல் பிளஸ்.
மற்றொரு நாயகி மிருனாள் தாக்கூர் ஜஸ்ட் வந்து செல்கிறார். இவர்களுடன் ஷோபனாவும் நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்..
தீபிகாவை காப்பாற்றும் அண்ணாபென், பசுபதி என அனைவரும் நிறைவான நடிப்பு…
இயக்குனர் ராஜமவுலி ஒரு சிறிய வேடத்தில் வந்து செல்கிறார். அர்ஜுனனாக விஜய் தேவரகொண்டா சிறப்பு தோற்றத்தில்… கர்ணன் வேடத்தில் வந்தவர் யார் என்பதுதான் படத்தின் ஸ்பெஷல் ஹைலைட்..
கிருஷ்ணராக யார்? எப்போது திரையில் தோன்றுவார்.. என்பதெல்லாம் கல்கி படத்தில் இரண்டாம் பாகத்தில் தெரியும்..
இடைவேளைக்கு முன்பு கண் இமைக்கும் நேரத்தில் வந்து செல்கிறார் கமல்.. அதன் பின்னர் கிளைமாக்ஸ் எண்டு கார்டு போட்ட பிறகு வருகிறார்.. அவரது கேரக்டர் இரண்டாம் பாகத்தில் மட்டுமே முழுமை பெறும்..
டெக்னீசியன்ஸ்…
மூன்று மணி நேரம் ஓடக்கூடிய படமாக இருப்பது தான் படத்தின் பெரிய பலவீனம் இந்த ஃபாஸ்ட் ஃபுட் காலத்தில் யாரும் ஒரு படத்திற்கு மூன்று மணி நேரம் செலவிட தயாராக இல்லை.. அப்படி இருக்கையில் படத்தின் நீளத்தை எடிட்டர் குறைத்திருக்கலாம்.
அது மட்டுமல்லாமல் இடைவேளை முன்பு வரை படத்தின் கதை எதை நோக்கி செல்கிறது என்பது புரியாமல் இருக்கிறது.. இடைவேளை தொடங்கும் சமயத்தில் தான் படத்தின் வேகமும் சூடு பிடிக்கிறது.. அது தொடங்கி கிளைமாக்ஸ் வரை படத்தின் வேகம் அதிகரிக்கிறது..
பிரபாஸ் பயன்படுத்தும் புஜ்ஜி வாகனத்துக்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.. சில நேரங்களில் கேட்பதற்கு ஜாலியாக இருந்தாலும் பிரபாஸின் சீரியஸான செயல்கள் சிரிப்பை வர வைக்கிறது..
முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளை நம்பி இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின்.. நிச்சயம் இது குழந்தைகளை கவரும் விதமாக இருப்பது படத்திற்கு ஹைலைட்.
படத்தின் ஒளிப்பதிவில் எந்த குறையும் இல்லை.. கண்களுக்கு விருந்தளித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.. அதுபோல கலை இயக்குனரும் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கியிருக்கிறார்..
காஸ்ட்யூம் டிசைனரை பாராட்டலாம்.. கலைஞர்களின் ஆடை வடிவமைப்பை அருமையாக அமைத்திருக்கிறார்.
வில்லன் கமல் வாழ்ந்து வரும் காம்ப்ளக்ஸ் உலகம் செம பிரமாண்டம்…
தமிழில் பிரபலமான இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையில் பாடல்கள் ஓகே ரகம்…. பின்னணி இசை மிரட்டல்.
மகாபாரத இதிகாச கதையுடன் இன்றைய தொழில்நுட்பத்தையும் கலந்து அதிரடியான பிரம்மாண்ட விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின்.
கர்ணன் அர்ஜுனன் அஸ்வத்தாமன் கிருஷ்ணர் உள்ளிட்டோரின் கேரக்டர்களையும் படத்தில் கொண்டு வந்து இதிகாச இலக்கிய விருந்தையும் படைத்திருக்கிறார்.. இத்துடன் சுப்ரீம் யஸகின் என்ற பிரம்மாண்ட வில்லன் வேடத்தில் கமலையும் கொண்டு வந்திருக்கிறார்.. ஆனால் இந்த முதல் பாகத்தில் கேரக்டர் வீணடிக்கப்பட்டிருக்கிறது.. ஆனால் அடுத்து வரும் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு பெரிய கேரக்டர் இருக்கும் என நம்பலாம்.
Kalki 2898 Ad movie review





