தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சபரி விமர்சனம்… அம்மாவின் ஆசை
ஸ்டோரி…
வரலட்சுமி & கணேஷ் வெங்கட்ராம் இருவரும் தம்பதிகள்.. இவர்களுக்கு ஒரு மகள் ரியா. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விடுகின்றனர். இதனால் வரலட்சுமி தன் மகளை அழைத்துக் கொண்டு யாரும் தொடர்பு இல்லாத ஒரு காட்டுப் பகுதியில் உள்ள பங்களாவில் குடியேறி வசித்து வருகிறார்.
ஆனாலும் தன் மகள் தன்னுடன் இருக்க வேண்டும் என பிரச்சனை செய்து வருகிறார் கணேஷ்.. இந்த சூழ்நிலையில் ரியா தன் குழந்தை என உரிமை கோருகிறார் மைம் கோபி.
இதனால் வக்கீல் ராகுல் உதவியை நாடுகிறார் வரலக்ஷ்மி.. மைம் கோபி இறந்து பல மாதங்கள் ஆகிவிட்டது இறந்தவர் உன்னிடம் எப்படி பிரச்சினை செய்ய முடியும் என வக்கீல் கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள்.
ஆனால் தன் கண்ணுக்கு மட்டும் அவர் தெரிகிறார் என குழப்பம் அடைகிறார் வரலட்சுமி.
அடுத்தடுத்து என்ன நடந்தது? மகளை மைம் கோபி பறித்துக்கொண்டாரா?இறந்தவர் எப்படி உயிருடன் வந்தார்? இவர்களின் பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
நடிகர்கள்: வரலக்ஷ்மி, கணேஷ் வெங்கட்ராம், மைம் கோபி, மதுநந்தன், ஜபர்தஸ்த் பானி, ஷஷாங்க் சித்தம்செட்டி, ரிஷிகா பாலி, கேசவ் தீபக் மற்றும் பலர்.
ஒரு குழந்தையின் தாய் என்ற மெச்சூரிட்டி கேரக்டருக்கு ஏற்ப மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார் வரலட்சுமி.. பரிதவிப்பு பாசம் எமோஷன் ஆக்சன் என அனைத்தையும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
ஸ்மார்ட் ஆக வரும் கணேஷ்க்கு பெரிதாக வேலை இல்லை.. குழந்தை வேண்டும் என பிரச்சனை செய்கிறார் அதன் பின்னர் திரைக்கதில் காணவில்லை ஆனால் கிளைமாக்ஸ் கட்சியில் வந்து ஒரு திருப்புமுனையை கொடுத்திருக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.
குழந்தை தனக்கு வேண்டும் என பிரச்சனை செய்துகொண்டு முறைத்துக் கொண்டும் துரத்திக் கொண்டுமே படத்தை முழுவதும் ஓட்டியிருக்கிறார் மைம் கோபி. சில காட்சிகளில் மிரட்டவும் செய்து இருக்கிறார்.
டெக்னீசியன்ஸ்…
இயக்குனர்: அனில் காட்ஸ்
தயாரிப்பாளர்: மகேந்திரநாத் கோண்ட்லா, மகரிஷி கோண்ட்லா
கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மே மாதம் 3 ஆம் தேதி இப்படம் வெளியானது..
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு கை கொடுத்துள்ளது.. இந்தக் காட்டு பங்களாவை வெறுமனே காட்டினால் எந்த பயமும் இருக்காது.. ஆனால் அதற்குப் பின்னணி இசை கொடுத்து அந்த வீட்டைக் கூட கொஞ்சம் மிரட்டலாக காட்டியிருக்கிறார்கள்..
தெலுங்கு இயக்குனர் அணில் இயக்கியிருக்கிறார்.. தெலுங்கில் உருவாக்கப்பட்ட தமிழுக்காக டப்பிங் செய்யப்பட்டு இருக்கிறது.
வரலட்சுமி, கணேஷ் மற்றும் மைம் கோபி உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள் இருப்பதால் தெலுங்கு வாசத்தை மீறி தமிழ் மனமும் ஆங்காங்கே வீசுகிறது..
குழந்தைக்காக வாழும் அம்மா என்ற தாய் பாசத்தை கொண்டு கதையை நகர்த்தி இருந்தாலும் திடீரென மைம் கோபி வருகிறார் என்பதாகட்டும் மற்றவர்கள் மறுப்பதாகட்டும் வரலக்ஷ்மி மட்டும் நம்புவது ஆகட்டும் குழப்பமான மனநிலையிலே ரசிகர்கள் இருக்கின்றனர்.
ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் இதற்கான தீர்வை எல்லாம் சொல்லி படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர் அணில்.
ஆக சபரி.. அம்மாவின்ஆசை
Sabari movie review
—-