அறிவார்ந்த படமெடுக்க அன்பான அட்வைஸ்..; அன்பறிவு விமர்சனம் 2/5

அறிவார்ந்த படமெடுக்க அன்பான அட்வைஸ்..; அன்பறிவு விமர்சனம் 2/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்.. இரட்டை குழந்தைகள் பிரிகிறார்கள். பின்னர் உண்மை தெரிகிறது.. இருவரும் இடம் மாறுகிறார்கள்.. பின்னர் இணைகிறார்கள்.. எண்ணிடலங்கா படங்களில் பார்த்த அதே இரட்டை வேட கதைதான்.

கதைக்களம்..

ஊர் பெரியவர் நெப்போலியனின் மகள் ஆஷாசரத் (லட்சுமி) சாய்குமாரை காதலிக்கிறார்.

முதலில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நெப்போலியன் பின்னர் சாய்குமார் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தால் சம்மதிக்கிறேன் என்கிறார்.

அதன்படி திருமணம் நடக்க இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் (அன்பு & அறிவு) பிறக்கிறது.

நெப்போலியன் வீட்டில் வேலை பார்க்கும் விதார்த் ஒரு கட்டத்தில் மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கும் கலகம் மூட்டி கணவன் மனைவியை பிரிக்கிறார்.

அன்றைய தினம் நள்ளிரவில் தனக்கு பிறந்த இரடைக் குழந்தைகளில் ஒரு குழந்தையை (அறிவு) சாய்குமார் எடுத்து செல்கிறார்.

மற்றொரு குழந்தை (அன்பு), தனது அம்மா ஆஷா மற்றும் தாத்தா நெப்போலியுடன் வளர்கிறார். மதுரைக்கே உரிய வீரத்துடன் வளர்கிறார். அடி தடி வெட்டு குத்து என எதையும் யோசிக்காமல் வளர்க்கப்படுகிறார்.

உன் அம்மா இறந்துவிட்டார் என அறிவை வளர்கிறார் சாய்குமார். இவர்களின் குடும்பம் கனடாவில் பெரும் பணக்காரர்களில் ஒன்று.

25 வருடங்களுஙக்கு பிறகு தாய் உயிரோடு இருப்பதை அறியும் அறிவு மதுரைக்கு வருகிறார்.

மதுரையில் காலடி வைத்த அன்றே ஒரு பிரச்சினையில் அன்பு அறிவு இருவரும் இடம் மாறுகின்றனர். அதாவது அன்பு இடத்தில் அறிவு வருகிறார். கனடாவிற்கு அன்பு கடத்தப்படுகிறார்.

இறுதியில் பிரிந்த குடும்பம் ஒன்றானதா.? வில்லன் விதார்த்தை பழி வாங்கினாரா? தாத்தா பேரன்களை ஏற்றுக் கொண்டாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

ரஜினி படங்களுக்கே உரிய செம பில்டப்போடு அறிமுகம் ஆகிறார் ஹிப்ஹாப் ஆதி. ஆனால் பார்க்கத்தான் நம்மால் முடீயல. ஒரு ஆதி வந்தாலே தாங்காது இதுல ரெண்டு ஆதி வேற.. மனுசன் வச்சி செஞ்சிட்டார்.

நிறைய காட்சிகளில் ஓவர் ஆக்டிங். நல்லவேளை இந்த படத்தில் அவரது வழக்கமான ப்ரெண்ட் கேரக்டர்களை பயன்படுத்தவில்லை. இரண்டு கேரக்டர்களை வேறுபடுத்த (பாடி லாங்குவேஜ்) கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாமே ப்ரோ.. அடுத்த படத்திலாவது உங்க ஹேர் ஸ்டைலை மாத்துங்க ஆதி.

தீனாவின் டைமிங் காமெடிகள் சில இடங்களில் கை கொடுத்துள்ளன.

2 ஹீரோ இருந்தா 2 ஹீரோயின்கள் இல்லாமலா.? காஷ்மிரா மற்றும் ஷிவானி ராஜசேகர் நடித்துள்ளனர்.

இதில் காஷ்மீராவை கனடாவில் வசிக்கும் பெண்ணாக காட்டியிருக்கலாம். அவரின் கலருக்கு கால் சட்டை போட்டு வந்தால் கூட ஓகே. அதுபோல ஷிவானியை மதுரை பெண்ணாக காட்டியிருக்கலாம். இரண்டு பேர் இருந்தும் நம்மை யாருமே கவரவில்லை. காஷ்மிரா கொஞ்சம் ஓகே.

3 கேரக்டர்களை நிச்சயம் பாராட்டலாம். நெப்போலியன் தன் கேரக்டரில் செம கெத்து காட்டியிருக்கிறார். பைட் சீனிலும் வருகிறார்.

அதுபோல பல படங்களில் மிரட்டலாக வரும் ஆஷா இதில் அம்மாவாக அசத்தல். அதிலும் சின்ன கம்பீரம் காட்டியிருப்பது சிறப்பு. இவரது டப்பிங் இவருக்கு பொருந்தவில்லை. (ரோகினி வாய்ஸ்..??)

மைனா, குரங்கு பொம்மை என பல படங்களில் ஹீரோவாக நடித்த விதார்த் இதில் வில்லனாக வித்தியாசமாக தோன்றியிருக்கிறார். பாராட்டுக்கள்.

விதார்த் பேருக்குதான் அமைச்சர். எப்போதுமே நெப்போலியன் வீட்டில்தான் அடிமையாக வருகிறார். இதான் அமைச்சரின் முழுநேரப் பணியா.?

போலீஸ் அதிகாரியாக சீரியல் நடிகர் சஞ்ஜீவ் வருகிறார் அவ்வளவுதான்.

காஷ்மிராவின் தந்தையாக மாரிமுத்து மாமாவாக அர்ஜெய். இருவரும் தங்கள் பங்கெளிப்பில் கச்சிதம். ஆரவாரமில்லாத நடிப்பில் சாய்குமார்.

ரேனுகா, ஆடுகளம் நரேன், சரத் ரவி ஆகியோருக்கு பெரிதாக வேலையில்லை.

டெக்னீஷியன்கள்..

பாவம் சத்யஜோதி பிலிம்ஸ். ஹிப் ஹாப் ஆதியுடம் மாட்டிக் கொண்டதா? தெரியல. இதுல கதை வேற ஆதியே எழுதி இசையமைத்துள்ளார்.

பொதுவாக இவரது படங்களில் பாடல்கள் நன்றாக இருக்கும். ஆனால் கேட்ட பாட்டு மெட்டுக்களை போட்டு தள்ளிவிட்டார். கிராமத்துக்கு இசையை கிராமத்து காட்சிகளுக்கு கொடுத்திருக்கலாம். அதிலும் இவரது ஹிப் ஹாப் இசையை திணறுகிறது.

பொன் பார்த்திபன் வசனம் எழுதியிருக்கிறார். க்ளைமாக்சில் மட்டும் ஸ்கோர் செய்கிறார். மற்றபடி வசனங்கள் மனதில் நிற்கும்படி இல்லை.

என்னடா என்னை ரெண்டுபேரும் சேர்ந்து அசிங்கப்படுத்துறீங்களா? என அர்ஜெய் கேட்கும் போது.. இல்லையே.. தனி தனியாதானே அசிங்கப்படுத்துனாங்க என வக்கீலாக வரும் முல்லை கேட்கும் போது ரசிக்க வைக்கிறார்.

மதுரை முதல் கனடா காட்சிகளில் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு ஆறுதல் தந்துள்ளது. ஆனால் மதுரையை காட்டிய அளவுக்கு கனடாவை காட்டவில்லையே..

ஒரு சண்டை காட்சியில் அறிவை அடிக்க ஓடி வருகிறார் அடியாள். ஆனால் அது அன்பு என்று அவருக்கு தெரிகிறது. எனவே அடிக்கவில்லை. அடுத்த காட்சியில் அன்பு யார் என தெரியாமல் பேசுகிறார் நெப்போலியன். அடியாளுக்கு தெரிந்த ஒன்று கூட 25 வருடமாக வளர்த்த தாத்தாவுக்கு தெரியல. இப்படி சிரிப்பாய் சிரிக்கும் சிறப்பான காட்சிகள் படத்தில் உள்ளது.

இப்படத்தை இயக்கியிருக்கிறார் அஸ்வின் ராம். இவர் அட்லியின் உதவியாளராம். இவரின் குரு சுட்ட கதையாக இருந்தாலும் சுவையாக தருவார். ஆனால் பல இரட்டை வேட படங்களில் அரைத்த மாவை இப்படி புளிக்க வைத்துவிட்டாரே அஸ்வின் ராம்.?

அறிவை நன்றாக பயன்படுத்தி அடுத்த படத்தையாவது கிரியேட்டிவ்வாக எடுங்கள் என அன்பான வேண்டுகோள் வைக்கிறோம்.
அன்பு தான் எல்லாம்… அதுவே அறிவார்ந்த செயல் என அட்வைஸ் செய்து படத்தை முடிக்கிறார்கள். இதை முதலில் சொல்லியிருந்தால் அப்போதே முடிச்சிட்டு கிளம்பியிருக்கலாம் போல…

Hip Hop Aadhis Anbarivu review rating

பெண்களுக்கு எச்சரிக்கை..; பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே விமர்சனம்

பெண்களுக்கு எச்சரிக்கை..; பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..
நவீன செல்போன் உலகத்தில் HIDDEN CAMERA வைத்து இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்களை குறி வைத்து பணம் பறிக்கும் சில நேரம் உயிரை பறிக்கும் கும்பலின் கதை இது.

வரதாஜ் இயக்கத்தில் ராஜ்கமல், மது, ஷ்வேதா பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்களம்..

ஆண் நண்பர்களுடன் பெண்கள் சுற்றும்போது.. காதலனுடன் தனிமையில் பூங்காக்களில் தடவும்போது.. பெண்கள் குளிக்கும் போது… இதுபோன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அவர்களுக்கு தெரியாமல் “ஹிட்டன் கேமரா” பொருத்தி அந்தரங்கங்களை வீடியோ எடுக்கிறது ஒரு கும்பல்.

பிளம்பர் வேலைக்கு வரும் நபர்கள் முதல்நாள் வந்து பைப் சரி செய்வதுபோல் கேமராவை பொருத்தி செல்கின்றனர். நாளை மீண்டும் வந்து செக் செய்கிறேன் என கூறி அடுத்த நாள் ரெக்கார்ட்டிங் கேமராவை எடுத்து செல்கின்றனர்.

வழி வராத பெண்களிடம் காதல் வலை வீசி அவளுடன் செக்ஸ் வைக்கும்போது கேமராவை வைத்து படம் எடுக்கின்றனர்.

பிறகு அந்த பெண்களுக்கே அனுப்பி, மிரட்டி பணம் பறிக்கிறது அந்த கும்பல். சிலர் மானத்திற்கு பயந்து தற்கொலை செய்கின்றனர்.
இந்த தற்கொலைகள் தமிழகத்தில் தொடர்கதையாகிறது. எனவே இதை விசாரிக்க போலீஸ் விரைகிறது. சில இடங்களில் HIDDEN CAMERA மர்ம நபர்களால் பொருத்தி வைக்கப்பட்டதை அறிந்தபின்னர் விசாரணை சூடு பிடிக்கிறது.

இதுபோன்ற கும்பலிடம் நாயகி எப்படி சிக்கினார்? நாயகன் ராஜ்கமல் யார்.? போலீஸ் எப்படி அவர்களை கண்டு பிடித்த்து? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

சீரியல்களில் கலக்கும் நடிகர் ராஜ்கமல் அடிக்கடி இதுபோல சினிமாவில் எட்டிப் பார்ப்பதுண்டு. இதில் எவரும் யூகிக்க முடியாத கேரக்டரை செய்துள்ளார். காதலியிடம் கெஞ்சும்போதும் மிரட்டும் போதும் ரசிக்க வைக்கிறார். ஒருசில இடங்களில் ஓவர் ஆக்டிங் ஓவர் லோட் ஆகிறது.

காதலியுடன் ரொமான்ஸ் போதவில்லை. ஒருவேளை நாயகியை பார்த்தால் ஒன்றும் தோனவில்லையோ… நாயகி தேர்வில் இயக்குனர் கவனம் செலுத்தியிருக்கலாம். ராஜ்கமலின் மனைவி நடிகை லதாவே நாயகியாக நடித்திருக்கலாம். அவர்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.

நாயகி ஸ்வேதா பாண்டி உடல் அழகில் நம்மை சூடேற்றுகிறார். இவரை பேபி மா.. பேபி மா.. என முதலில் அழைப்பது முதலில் ரசிக்க வைத்தாலும் க்ளைமாக்ஸ் காட்சியில் போரடிக்கிறது.. பேபி மா சொல்லு.. பேபி மா எப்படி என அடிக்கடி கேட்டு நமக்கே போராச்சு.

ஆப்பிரிக்க வில்லன் நடிகர் அசத்தல். அப்பாவியாக வந்து அசத்தியிருக்கிறார். போலீஸ் கேரக்டரில் வருபவர் நம் கவனம் ஈர்க்கிறார்.

நாம் லாட்ஜில் தங்கும்போது ஒய்ஃபை WIFI பாஸ்வேர்ட் போட்டு நம் செல்போனில் நுழைந்தால் அதன் மூலம் செல்போன் தகவல்கள் திருடப்படுவது எதிர்பாராத ஒன்று. இடைவேளை ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்றுதான்.

கொடைக்கானல் காட்சிகள் அழகு. சதீஷ்குமார் மற்றும் கார்வ மோகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. டூயட் பாடலில் அந்த இயற்கை அழகு மனதை கொள்கிறது.

விவேக் சக்ரவர்த்தியின் இசை ஓகே ரகம். பாடல் வரிகளில் இருந்த உணர்வு இசையில் இல்லாதது வருத்தமே.

செல்போன்கள் பெண்கள் வாழ்க்கையை எப்படி சீரழிக்கிறது என்பதை சின்ன பட்ஜெட்டில் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் வரதராஜ். காட்சிகளின் தரத்தை உயர்த்தி இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

பெண்களுக்கு எச்சரிக்கை உணர்வை இந்த படம் தரும் என நம்பலாம்.

Pen Vilai Verum 999 Rupaai Mattume review rating

திருட ஏங்கும் ஆம்பள புத்தி…; ஓணான் விமர்சனம்

திருட ஏங்கும் ஆம்பள புத்தி…; ஓணான் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

எவருக்கு தீங்கு விளைவிக்காத உயிரினம் ஓணான். ஆனால் அதை கண்டாலே சிலர் அடிப்பார்கள். அப்படி தீங்கு நினைக்காத ஒரு குடும்பத்தை ஒருவன் வஞ்சிக்கும் கதையே இந்த படம்.

களவாணி படத்தில் ஓவியாவின் அண்ணனாக மற்றும் ஈட்டி படத்தில் ஸ்ரீதிவ்யாவின் அண்ணனாக நடித்தவர் திருமுருகன். இந்த படத்தின் கதையின் நாயகன். இவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத்.

கதைக்களம்…

பைத்தியகாரன் போல இருக்கும் திருமுருகன் ஒரு ஊருக்கு பிழைப்பு தேடி செல்கிறார். யார் என்ன பேசினாலும் எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.

ஒரு பிரச்சினையில் சரவணன் சக்தியை அடித்து துவைத்து பூ ராம் குடும்பத்தை காப்பாற்றுகிறார். இதனால் ராம் குடும்பத்தினர் இவருக்கு அடைக்கலம் கொடுக்கின்றன்ர.

அந்த குடும்பத்தினருக்கு திருமுருகனை பிடித்துவிட்டதால் தனது மகள் ஷில்பாவுக்கு திருமுருகனை 2வதாக மணமுடித்து வைக்கிறார்.

வெளிநாட்டில் இருக்கும் ஷில்பாவின் அண்ணன் காளி வெங்கட் தங்கை திருமணத்திற்கு வருகிறார். தங்கை முதலிரவின் போதுதான் திருமுருகனைப் பற்றி தெரிந்து கொள்கிறார்.

உன் குடும்பத்தையே வெட்டி சாய்க்க வந்திருக்கிறேன் நான் என்கிறார் திருமுருகன்.

காளி வெங்கட் என்ன செய்தார்.? திருமுருகன் ஏன் மனைவி குடும்பத்தை அழிக்க நினைக்கிறார்? குடும்பத்தினர் என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

கதையின் நாயகனாக திருமுருகன் சதாசிவின்… படம் முழுக்க சைக்கோவாக காட்டியிருக்கிறார். ப்ளாஷ்பேக் காட்சியில் பொறுப்பான கணவனாக மாறியிருக்கிறார்.

ஹீரோ கேரக்டர் செய்கிறோம். உடல் இளைத்திருக்கலாம். இன்னும் வில்லன் லுக்கிலேயே இருக்கிறார் திருமுருகன். படத்தில் கொஞ்சமே பேசி நடித்துள்ளார்.

சேலையில் அழகு காட்டி நடித்திருக்கிறார் நாயகி ஷில்பா மஞ்சுநாத். திருமணம் ஆன பின்பும் தன்னுள் காதல் வருவதை தன் கண்களில் உணர்த்தி நடித்திருக்கிறார்.

மற்றொரு நாயகியாக சனுஜா சோமந்த். அழகும் திறமையும் உள்ள நடிகை.

பல படங்களில் காமெடியில் கலக்கி ஒரு படத்தில் நாயகனாக நடித்தவர் , காளி வெங்கட். இதில் வில்லனாக அவதாரம் எடுக்க முயற்சித்துள்ளார். வீட்டில் நல்லவனாக வெளியில் கெட்டவனாக திரியும் சில ஆண்களை போல் நடித்திருக்கிறார். சில இடங்களில் ஓவர் ஆக்ட்டிங்.

சிங்கம் புலி காமெடி ஓரிரு இடங்களில் சிரிக்க வைக்கிறது. திரிபு.. திரிபு.. என இவர் பேசி கடலை போடும் காட்சிகளில் இவரது பாஷை ரசிக்க வைக்கிறது.

சரவணன் சக்தி அறிமுகமாகும்போது நல்லவனா? கெட்டவனா? வில்லனா? என வாய்ஸ் ஓவர் வருகிறது. அதுபோல் நமக்கும் கடைசி வரை தெரியவில்லை. தந்தையாக பூ ராம், தனது கேரக்டரில் கச்சிதம். இவரது மனைவி கேரக்டரும் நல்ல தேர்வு.

காளி வெங்கட்டின் குழந்தைகளும் சிறப்பான தேர்வு.

டெக்னிஷீயன்கள்..

ராஜேஷ் ராமனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பசுமையாக காட்டியிருக்கிறார்.. அந்தோணி ஆபிரகாம் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

முதல் பாதி கதை என்னவென்றே தெரியவில்லை. யாருனே தெரியாதவரை ஒருவரை குடும்பமே தம்பி.. தம்பி.. என கொண்டாடுவது நெருடல். ஆனால் அவர் (திருமுருகன்) செய்த உதவி அப்படி என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.

2ஆம் பாதியில் தான் கதையின் ஆழத்தை காட்டியிருக்கிறார் இயக்குனர் சென்னன். இதுபோன்ற கதை பல இடங்களில் உண்மையாகவே நடக்கிறது. எனவே அதை அப்பட்டமாக காட்சிகளாக காட்டிய இயக்குனரை பாராட்டலாம்.

ஆக… இந்த ஓணான்.. திருட ஏங்கும் ஆம்பள புத்தி…

Onaan movie review and rating in Tamil

முதல் படத்திலேயே மூவேந்தர் முத்திரை..; வேலன் விமர்சனம்

முதல் படத்திலேயே மூவேந்தர் முத்திரை..; வேலன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மினி தகவல்..

தயாரிப்பாளர் கலைமகன் முபாரக்… இயக்குனர் கவின்… பிக்பாஸ் முகேன் ஆகியோருக்கு இதான் முதல்படம். தங்கள் முதல் படத்திலேயே முத்திரை பதித்த மூவேந்தர்கள் இவர்கள்.

சிறுத்தை சிவாவின் உதவி இயக்குனராக பணிபுரிந்த கவினின் இயக்கத்தில் உருவான “வேலன்”

கதைக்களம்..

ஊரில் மரியாதைமிக்க குடும்பம் பிரபு பரம்பரை. இவரின் மனைவி ஸ்ரீரஞ்சனி. இவர்களின் மகன் முகேன். அப்பாவிடம் நல்ல பெயர் வாங்கி வெளியில் அட்டகாசம் செய்கிறவர் முகேன்.

ஒரு கட்டத்தில் +2வில் பெயில் ஆனதால் அப்பாவின் கோபத்தை சம்பாதிக்கிறார். இதனால் இவர்கள் சரியாக பேசிக் கொள்வதில்லை.

ஒருவழியாக +2 தேர்வை 3 முறை எழுதி காலேஜ்ஜில் சேர்கிறார். அங்கு நாயகி மீனாட்சியை கண்டதும் காதல் கொள்கிறார்.

மீனாட்சியை இம்ப்ரஸ் செய்ய ஒரு ஆளை வைத்து மலையாளத்தில் காதல் கடிதம் எழுதுகிறார்.

இந்த மலையாள காதல் பிரச்சினையால் ஆள் மாறி தம்பி ராமையா தன் மகளுக்காக பிரபுவிடம் வந்து மாப்பிள்ளை கேட்கிறார். மகனுக்காக வாக்கு கொடுக்கிறார் பிரபு.

ஆனால் அது மீனாட்சியின் தந்தையல்ல என்பது பின்னர் தெரிய வருகிறது. தன் தவறால் அப்பாவிற்கு கௌரவ பிரச்சினை வந்துவிடுமோ என முகேன் நினைக்கிறார்.

இறுதியில் என்ன ஆனது..? காதலியா..? அப்பாவா..? யார் பேச்சை கேட்டார் முகேன்.? மலையாள கடிதம் என்னாச்சு.-? இரு கடிதங்கள் எப்படி.? என்பதை மீதிக்கதை.

கேரக்டர்கள்…

முதலில் ஸ்கூல் பையன் முகேன்.. பிறகு முறுக்கு மீசை முகேன்.. இரண்டிலும் செம ஸ்மார்ட்டாக இருக்கிறார் முகேன். ஆட்டம் பாட்டம்.. பைஃட், கொஞ்சம் ரொமான்ஸ் என நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார்.

வழக்கம் போல தந்தையாக பிரபு. இதில் க்ளைமாக்ஸில் பிரபுவும் பைட் போட்டு தெறிக்கவிட்டுள்ளார். இந்த படத்தில் பிரபு சிகை அலங்காரம் சிறப்பு.

நாயகியாக மீனாட்சி.. மலையாள லுக்கில் அசத்துகிறார். ஆனால் மலையாள பேசுகிறோம் என நினைத்து ஏதோ பேசுகிறார்.

முகேனை சித்தப்பு என அழைக்கிறார் பிரிகிடா. இவர் முகேனிடம் குட்டு வாங்கும்போது திட்டு வாங்கும்போது துறுதுறு நடிப்பில் கவர்கிறார். சில நேரங்களில் கண்களாலே கவர்ந்துவிடுகிறார்.

இடைவேளையில்தான் வருகிறார் சூரி. இவர் வந்தபிறகு சிரிப்பு மழைதான். நீண்ட நாட்களாக சூரி காமெடி மிஸ்ஸிங். இதில் தனி ஆளாக அசத்திவிட்டார்.

அதிலும் தன் அக்கா கணவர் தம்பி ராமையா பத்தி பேசும்போது நிச்சயம் சிரிக்காமல் இருக்க மாட்டீர்கள்.. ஐயோ.. இவன் பிட் படம் எடுத்தா கூட நல்ல கிளாரிட்டி இல்லன்னு சொல்வானே என சொல்லும்போது செம சிரிப்பு.

வில்லனாக ஹரீஷ் பெராடி. எப்போதும் போல முறைத்த முகத்துடனே வருகிறார். இவரை மலையாளம் பேச வைத்திருக்கலாம். கேட்கும்படியாக இருந்திருக்கும்.

ஆனால் தம்பி ராமையாவை மலையாளியாக காட்டி நம்மை கொலையாளியாக மாற்றிவிடுவார் போல இயக்குனர். கத்தி கத்தி பேசி ஓவர் ஆக்டிங் தம்பி ராமையா.

காலேஜில் கூட்டாளியாக ப்ராங்க் ஸ்டார் ராகுல். ஓரிரு காமெடிகள் ரசிக்கும்படி உள்ளது. ஆனால் முகபாவனைகளை என்ன சொல்வது..? முடியல.

டெக்னீஷியன்கள்..

கோபி ஜெகதீஸ்வரன் தன் ஒளிப்பதிவில் வேலனை கலர்ஃபுல்லாக காட்டியிருக்கிறார். நேர்த்தியான பணியை செய்துள்ளது சிறப்பு.

ப்ளாஷ்பேக் காட்சிகள் ஓகே. ஆனால் முதல் பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாமே எடிட்டர் சரத்குமார் சாரே.

கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே ஹிட் அடித்த முகேனின் பாடலை படத்தில் பயன்படுத்தியது இசையமைப்பாளரின் சாமர்த்தியம். பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு. குறிப்பாக முகேன் பாடிய ‘சத்தியமா சொல்றேண்டி’ என்ற பாடல் சிறப்பு.

வழக்கமான காதல் கலாட்டா கதைதான் என்றாலும் அதை ஜனரஞ்சமாக ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் கவின். ஆனால் அடிக்கடி வரும் பாடல் தேவையில்லாத ஒன்று. மேலும் தயவுசெய்து மலையாளத்தை அடுத்த படங்களில் கொல்லாதீர்கள் என வேண்டுகிறோம்.

தயாரிப்பாளராக கலைமகன் முபாரக். இவரும் இரண்டு காட்சிகளில் வந்து கவனம் பெறுகிறார். விரைவில் நாயகனாக நடித்தாலும் ஆச்சரியமில்லை.

வேலன்.. ஆக இயக்குனர் தயாரிப்பாளர் ஹீரோவுக்கு இது முதல் வெற்றி.

Mugens Velan movie review rating

நிதானமா.? நீரோட்டமா..? தண்ணி வண்டி விமர்சனம்

நிதானமா.? நீரோட்டமா..? தண்ணி வண்டி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்.. தண்ணீர் வியாபாரம் செய்யும் நபர்களின் கதை. கூடவே தண்ணீர் அடிக்கும் நண்பர்களின் கதைக்களமும் கூட.

மனிதன் அவன் நினைப்பதை காட்டிலும் ஒழுக்கமுடையவன். ஆனால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு ஒழுக்கங் கெட்டவன்” என்ற ‘சிக்மண்ட் ப்ராய்ட்’-ன் வார்த்தையே ‘தண்ணி வண்டி’ படத்தின் ஒன்லைன்.

சிறு குறிப்பு

ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிப்பில் உருவாகியுள்ள படம் தண்ணி வண்டி. இதில் நாயகியாக வில் அம்பு புகழ் சம்ஸ்கிருதி நடித்துள்ளார்.

ஜி சரவணனின் ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் இந்த தண்ணி வண்டி திரைப்படத்தை தங்களின் 3வது தயாரிப்பாக உருவாக்கி வருகிறது.

கதைக்களம்..

மதுரையில் வண்டியில் தண்ணீர் கொண்டு சென்று ஊற்றும் வேலை செய்து வருகிறார் சுந்தர மகாலிங்கம் (உமாபதி). அதே பகுதியில் பவர் இஸ்திரி (லாண்டரி) கடை நடத்துபவர் தாமினி. (சம்ஸ்ருகிதி) இவர்களுக்குள் காதலர்கள்.

அதே ஊரில் புதிதாக ஆர் டி ஓ அதிகாரியாக பொறுப்பேற்கிறார் வினுதா லால். இவர் படு கண்டிப்பான பெண் அதிகாரி. வீடு வாடகைக்கு தேடும் பெண் போல வருவார். அந்த பகுதிக்கான வாடகையை தாண்டி அதிகம் சொன்னால் வெளுத்து கட்டிவிடுவார். இப்படிதான் இவரின் அறிமுகம் இருக்கும்.

ஆனால் இவருக்கு செக்ஸ் ஆசை அதிகம். நிறைய ஆண்களிடம் தொடர்பில் இருக்கிறார். இதையறியாத அந்த ஊரின் பல பெண்கள் இவரை ரோல் மாடலாக நினைக்கின்றனர்.

ஒரு நாள் வினுதா லாலின் லீலைகளை பார்த்துவிடுகிறார் நாயகி தாமினி.

இதனால் தாமினிக்கும் வினுதா லாலுக்கு மோதல் வெடிக்கிறது.

தாமினியை என்ன செய்தார் வினுதா லால். நாயகன் எப்படி காப்பாற்றினார்.? ஆர்டிஓ அவமானப்பட்டாரா..? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

நடனம் மற்றும் ஆக்சனில் வழக்கம்போல் அசத்தியிருக்கிறார் நாயகன் உமாபதி ராமையா. ஆனால் நடிப்பில் அப்பாவிடம் கொஞ்சமாவது பயிற்சி பெறுதல் நலம். சில நேரங்களில் அப்பாவை போல ஓவர் ஆக்ட்டிங்கும் உண்டு.

இவரின் நண்பராக பால சரவணன். ஹீரோவை டாமினேட் செய்து பல காட்சிகளில் காமெடி செய்கிறார்.

தாமினியாக வரும் சம்ஸ்கிருதி. அழகான கண்களால் அடிக்கடி பேசுகிறார். நடிக்க பெரிதாக வாய்ப்பு இல்லை போலும்.. தோழியாக வித்யூலேகா.

இவர்களுடன் வழக்கம்போல தம்பி ராமையா, தேவதர்ஷினி ஆகியோரின் காமெடிகள் களை கட்டுகிறது.

பெண் அதிகாரி வினுதா லாலின் நடிப்பு வித்தியாசம். வீட்டிற்கு வெளியே திமிர் பிடித்த பெண்ணாகவும் நான்கு சுவருக்குள் காம தேவதையாக வருகிறார்.

மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி வருகிறார். இவரை பார்த்தால் அசல் ரவுடி போல உள்ளது. ஆபிசர் லுக்கே இல்லை. கேபிள் டிவியும் நடத்துகிறார்.

‘காதல்’ சுகுமார், முல்லை, விஜய் டிவி புகழ் கோதண்டம், ‘ஆடுகளம்’ நரேன், கிருஷ்ணமூர்த்தி, மதுரை முத்து, ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி மற்றும் பலர் உள்ளனர்.

டெக்னிஷியன்கள்…

வெங்கட் ஒளிப்பதிவை சிறப்பாக செய்துள்ளார். பாடல் காட்சிகளை அழகாக படம் பிடித்துள்ளார். ஏ.எல்.ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

மோசஸ் இசையமைத்துள்ளார். பாடல்கள் பெரிதாக கவரவில்லை. பின்னணி இசை எரிச்சலை தருகிறது. பல இடங்களில் ரீப்பீட் மோடிலேயே உள்ளது.

இயக்குநர் மாணிக்க வித்யா இயக்கியுள்ளார். கதையை கமர்ஷியலாக சொல்ல முயன்றும் திரைக்கதையை சொல்லும் விதத்தில் தடுமாறியிருக்கிறார் இயக்குனர் மாணிக்க வித்யா.

இப்படம் நாளை டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகிறது.

Thanni Vandi movie review and rating in Tamil

உயர்வடையாத உழைப்பாளி..; லேபர் விமர்சனம்

உயர்வடையாத உழைப்பாளி..; லேபர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்… சத்தியபதி இயக்கியுள்ள படம் லேபர். கட்டிட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையப்படுத்தியுள்ளது இந்த படம்.

ராயல் ஃபார்சூனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் முத்து, சரண்யா ரவிச்சந்திரன், ஜீவா சுப்ரமணியம், முருகன் ஆறுமுகம் ஆகியோர் நடித்துள்ளனர்.

நிஜில்தினகரன் இசையமைக்க, சி.கணேஷ்குமார் படத்தொகுப்பை மேற்கொள்ள ஒலி கலவையை கிருஷ்ணமூர்த்தி செய்துள்ளார்.

கதைக்களம்…

கட்டிட தொழிலாளர்கள் மற்றும் மேஸ்திரி ஆகியோர் பற்றி ஒரு சிறிய முன்னோட்டம்..

என்னதான் மேஸ்திரியாக இருந்தாலும் ஒரு இன்ஜினியர் கீழ் பணிபுரிய வேண்டும். எனவே தன் மகனை கடன் வாங்கியாவது கஷ்டப்பட்டு இன்ஜினீயர் படிக்க வைக்கிறார். காலேஜ் கட்டணம் கட்ட முடியாமல் அடிக்கடி படாதாபாடு படுகிறார் மேஸ்திரி.

படத்தின் நாயகன் முருகன். அவரது மனைவி சரண்யா ரவி. இருவரும் கட்டிட பணி செய்கின்றனர். இவர்களுக்கு ஒரு சின்ன குழந்தை.

முருகனோ குடிக்கு அடிமை. எனவே தினமும் வீட்டில் சண்டை,

இவர்களுடன் வேலை செய்யும் மற்றொரு கேரக்டர் திருநங்கை ஜீவா. இவர் டீச்சருக்கு படித்துக் கொண்டே வேலை செய்கிறார்.

இவர்கள் எல்லோருமே ஏலச்சீட்டு தம்பதிகளிடம் மாதாமாதம் பணம் கட்டி வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் ஏலச்சீட்டு தம்பதிகள் தொழிலாளர்களின் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுகின்றனர். இதனால் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.

அடுத்து என்ன நடந்தது.? மகனை இன்ஜினியரிங் படிக்க வைத்தாரா மேஸ்திரி.? முருகன் சரண்யா என்ன செய்தார்கள்,? முருகன் குடியை நிறுத்தினாரா? திருநங்கை ஜீவா டீச்சர் ஆனாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கணவன் மனைவியாக நடித்துள்ள முத்து, சரண்யா ரவிச்சந்திரன் இருவரையும் வெகுவாக பாராட்டலாம். குடிகாரனாக முத்து.. கொடுத்த கேரக்டரில் கச்சிதம்.

குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு கஷ்டப்படும் பெண்ணாக சரண்யா. இவரின் பலமே கொடுத்த கேரக்டராகவே மாறிவிடுவார். சபாஷ் சரண்யா. கணவனை கண்டிப்பதாகட்டும் குழந்தை அழும்போது பால் ஊட்டி வெளியே அழைத்து செல்வதாகட்டும் கட்டிட தொழிலாளி பெண்ணாக மாறிவிட்டார்.

திருநங்கை ஜீவாவும் தன் நடிப்பில் கவனம் பெற வைக்கிறார். தன்னை அசிங்கப்படுத்தியதற்காக ஆபிசரை அதட்டிக் கேட்கும் காட்சிகள் சூப்பர்.

எல்ஐசி ஏஜென்ட், போலீஸ் இன்ஸபெக்டர், ஏலச்சீட்டு தம்பதிகள் உள்ளிட்டோர் ஓகே. ஆனால் இவர்கள் மனப்பாடம் செய்து வசனங்கள் பேசியது போல உள்ளது.

நிஜில் தினகரன் இசை ஓகே ரகம்தான்.

சத்தியபதி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் லேபர் படம் 20க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது என்பது கூடுதல் தகவல்.

கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கை முறையை சொல்லிய விதம் ஓகே. ஆனால் ஒளிப்பதிவில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஒரு காட்சியில் பைக் வரும்போது முன்பே கேமராவை கொண்டு செல்கிறார். அதன்பின்னரும் பைக்கில் வருபவர் முகத்தை காண்பிக்க வேண்டாமா? அவர்களின் பேச்சின் போது முகபாவனைகள் தெரிய வேண்டாமா..? பைக்கில் பின்னால் வருபவர் யார் என்றே தெரியவில்லை.

இதுபோல் ஏலச்சீட்டு வீட்டிலும் கேமராவை ஒரே இடத்திலேயே வைத்துவிட்டார். இதுபோன்ற நிறைய காட்சிகள் ஒரே இடத்தில் கேமரா இருப்பதால் கொஞ்சம் சலிப்படைய வைக்கிறது.

ஒரு காட்சி முடியும் வரை கேமரா ஆங்கிளை அடிக்கடி மாற்றினால்தானே நம்மால் ரசிக்க முடியும். இது கல்யாண வீடு கேமராமேன்களை நினைவுப்படுத்துகிறது. அதை இயக்குனர் சத்தியபதி தவிர்த்திருக்கலாம்.

ஆயுள் காப்பீடு செய்யாத தொழிலாளர்கள்… குடியால் கெடும் உழைப்பாளிகள்…. என அவர்களின் வாழ்க்கையை இன்னும் அழுத்தமாக காட்சிப்படுத்தியிருந்தால் கூடுதல் கவனம் பெற்றிருப்பார் இந்த லேபர்.

க்ளைமாக்ஸ் காட்சி சோகத்தை தந்தாலும் அதில் எதிர்பாராத ஆச்சர்யத்தை கொடுத்துவிட்டார் இயக்குனர் சத்தியபதி.

ஆக இந்த லேபர்… உயர்வடையாத உழைப்பாளி.

Labour movie review and rating in Tamil

More Articles
Follows