பிரகாசிக்கும் பிரசாந்த்… ஜானி விமர்சனம்

பிரகாசிக்கும் பிரசாந்த்… ஜானி விமர்சனம்

நடிகர்கள்: பிரசாந்த், சஞ்சிதா செட்டி, பிரபு, ஆனந்த்ராஜ், சாயாஜி ஷின்டே, தேவதர்ஷினி, சோனா மற்றும் பலர்
இயக்கம் – வெற்றிச் செல்வன்
ஒளிப்பதிவு – எம். வி. பன்னீர்செல்வம்
இசை – ஜெய்கணேஷ்
கலை – மிலன்
படத்தொகுப்பு – சிவசரவணன்
தயாரிப்பு – தியகராஜன்
தயாரிப்பு நிறுவனம் – ஸ்டார் மூவிஸ்
பிஆர்ஓ – டைமண்ட் பாபு

கதைக்களம்…

பிரசாந்த், பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் இவர்கள் 5 பேரும் பிஸினர் பார்ட்னர்ஸ். இது இல்லாமலும் மற்ற தொழில்களிலும் முதலீடு செய்துள்ளனர்.

இவர்கள் 5 பேரும் ஒரு சூதாட்ட கிளப் வைத்துக் கொண்டு அதன் வருமானத்தில் சட்ட விரோதமாக குறுக்கு வழியிலும் பணம் சம்பாதிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், இவர்களின் நண்பர் கொச்சி போலீஸ் (சாயாஜி ஷிண்டே) மூலம் ஒரு கடத்தல் பொருள் பாதி விலைக்கு வந்திருப்பதாக தகவல் கிடைக்கிறது.

இவர்கள் அந்த பொருளை வாங்க ஆளுக்கு ரூ. 50 லட்சம் போட்டு ஒரு பார்ட்னரிடம் பணத்தை கேரளாவுக்கு கொடுத்து அனுப்புகின்றனர்.

ஆனால் இந்த பணத்தை மொத்தமாக கொள்ளையடித்துவிட்டு தன் காதலி சஞ்சிதாவுடன் கனடாவில் செட்டில் ஆக திட்டமிடுகிறார் பிரசாந்த்.

அதன்படி பணத்தையும் கொள்ளையடிக்கிறார். ஆனால் அந்த பார்ட்னர் விபத்தில் கொல்லப்படுகிறார்.

இந்த விவகாரம் ஒவ்வொருவருக்கும் தெரிய வருகிறது.

அதன்பின்னர் என்ன ஆனது? மற்றவர்கள் பிரசாந்தை என்ன செய்தார்கள்? போலீஸ் என்ன செய்தது.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நீண்ட இடைவெளிக்கு பிரசாந்த் படம். கதைக்கு தேவையில்லாத அலட்டல், பன்ச் டயலாக், என எதற்கும் இடம் கொடுக்காமல் பிரசாந்த் பின்னியிருக்கிறார். காதலி இருந்தாலும் ரொமான்ஸ்க்கு இடம் கொடுக்காமல் மெச்சூரிட்டியான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

இவரின் பார்ட்னருக்கு இவரை பற்றி தெரிய வர, பிரசாந்த் எடுக்கும் முடிவுகள் கச்சிதம். வெல்கம் பேக் பிரசாந்த். (ஆனால் உடம்பை குறைத்துக் கொள்வது பிரசாந்த்துக்கு நல்லது)

ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் பழமாய் சஞ்சிதா. கவர்ச்சியிலும் நடிப்பிலும் கவர்கிறார்.

பிரபு, ஆனந்த் ராஜ் தங்களின் அனுபவமிக்க அருமையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

இவர்களுடன் பார்ட்னர்கள், சாயாஜி ஷிண்டே, ஆனந்த்ராஜ் மனைவி தேவ தர்ஷினி, சோனா என அனைவரும் ரசிகர்களை கவர்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் இசையமைப்பாளர் ஜெய்கணேஷ். படத்தில் பாடல்கள் இல்லை என்பதால் அனைத்தையும் பின்னணி இசையில் காட்டியிருக்கிறார்.

மேலும் படத்தின் மற்றொரு பலமாக ஒளிப்பதிவாளர் எம்.வி. பன்னீர் செல்வம் உள்ளார். படமும் 2 மணி நேரத்தில் முடிந்துவிடுவதால் படத்தொகுப்பாளரையும் பாராட்டியே ஆக வேண்டும்.

பத்து வருடங்களுக்கு முன் ஹிந்தியில் வெளியான ‘ஜானி கட்டார்’ படத்தை தழுவி இப்படத்தை இயக்கியுள்ளார் பி.வெற்றிசெல்வன். தமிழ் ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ? என்பதை அறிந்து தரமாக கொடுத்துள்ளார்.

வெற்றிச்செல்வனுக்கு இதுவொரு வெற்றி படமே.

மொத்தத்தில் ஜானி… மீண்டும் பிரகாசிப்பார் பிரசாந்த்

Comments are closed.

Related News

நடிகர் பிரசாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான…
...Read More
தமிழ் சினிமா படங்களின் ரிலீஸ் தேதியை…
...Read More
நடிகர் தியாகராஜனின் மகன் பிரசாந்த் நடித்துள்ள…
...Read More
டாப் ஸ்டார் பிரசாந்த் மற்றும் சஞ்சிதா…
...Read More