தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முன்கதை…
இந்தியப் புராண இதிகாசமான அஸ்வினி குமாரர்களுக்கும் இக்கதைக்கும் தொடர்புப்படுத்தி இந்த பேய் கதை சொல்லியுள்ளனர். ( இப்போ தெரிஞ்சிருக்குமே ஏன் இந்த டைட்டில்..?!!)
கதைக்களம்..
லண்டனின் இந்தியத் தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் விநோத சடங்குகள் மூலம் பலரைக் கொன்றுவிடுகிறார்.
ஒரு கட்டத்தில் அவரும் இறந்திருக்கிறார்.
இதை அறியாத ஒரு டியூயுப் சேனல் குழுவை அந்த இடத்திற்கு போக சொல்கிறார் ஒருவர்.
அதன்படி பணத்துக்காக ‘Found Footage’ வீடியோ எடுக்க அர்ஜுனும் (வசந்த் ரவி) அவரது தோழிகளும் நண்பர்களும் செல்கின்றனர்.
இதற்கு பிளாக் டூரிசம் (Black Tourism) என்கின்றனர். அதாவது பேய் பிசாசுகள் இருக்கும் இடங்களைத் தேடி சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகளைக் குறிப்பிடுகிறது.
அங்கு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
நல்ல குணம் தீய குணம் கொண்ட இரு கேரக்டர்களை வசந்த ரவியும் அருமையாக வெளிப்படுத்தி தன்னுடைய நடிப்பாற்றலை கொடுத்துள்ளார். மேக்கப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
வசந்த் ரவியின் மனைவியாக சாராஸ் மேனன் & நண்பர்களாக சிம்ரன் பரீக், முரளிதரன், உதயதீப் ஆகியோர் அச்ச உணர்வை ஏதோ கொடுத்துள்ளனர்.
சிறப்புத் தோற்றத்தில் விமலா ராமன்.. இந்த பேயை (கதையை) நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறார்.
டெக்னீஷியன்கள்…
பேய் பட வரிசையில் இந்த படம் நிச்சயமாக பேசப்படும். அதற்கு முக்கிய காரணம் இசையமைப்பாளர் விஜய் சித்தார்த் தான். மேலும் இந்த படத்தின் இயக்குனர் அருண் தேஜா சவுண்ட் எஃபெக்ட்ஸ் படித்தவர் என்பதால் இருவரும் கூடுதல் கவனம் செலுத்தி தங்களது பங்களிப்பை நேர்த்தியாக செய்துள்ளனர்.
பேய் படங்கள் என்றாலே மிரள வைக்கும் இசை அவசியம். அப்படி ஒன்று இருந்தால் தான் ரசிகர்கள் பயந்து கொண்டே சீட்டு நுனியில் உட்கார்ந்திருப்பார்கள்.
அதை சரியாக செய்திருந்தாலும் வெறும் இசை மட்டுமே பேய் படத்திற்கு உதவாது திரைக்கதையும் கொஞ்சமாவது திருப்புமுனை காட்சிகளும் இருந்தால்தான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை இயக்குனர் கவனிக்கவில்லையா?
இடைவேளை சமயத்தில் வரும் “ராட்சஷ்ஷா” என்ற கரகரக்குரல் பாடல் அதிர வைக்கிறது.
படத்தொகுப்பாளர் வெங்கட்ராஜன் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் படம் ஆரம்பத்தில் காட்டப்படும் காட்சிகளை மீண்டும் வருவது எரிச்சலை உண்டாக்குகிறது.
லண்டன் செல்லும்போது காட்டப்படும் மிகப்பெரிய ஆறும் அது நடுவே ரோடும் திகில்.. ஒளிப்பதிவாளர் ஏ.எம்.சாக்கே அப்படி ஒரு அமானுஷ்ய உணர்வினை நமக்குள் கடத்தியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தருண் தேஜா. வசந்த ரவிக்கு வேறுபட்ட கதாபாத்திரங்களை கொடுத்து அவரிடம் நன்றாகவே வேலை வாங்கி இருக்கிறார்.
திடீரென கத்துவது.. ஓடுவது.. விளக்குகள் அணைவது, கதவுகள் திறப்பது மூடுவது, சவுண்ட் எஃபெக்ட்ஸ் அலறவைப்பது.. என பேய் பட டெம்ப்ளேட்டிலும் இதுவும் தப்பவில்லை.
ஆக அஸ்வின்ஸ்’ வீக் ஸ்டோரி.. மிரட்டல் மியூசிக்
Asvins movie review and rating in tamil