சவாலான கேரக்டர்களுக்காக காத்திருக்கும் ரஜினியின் உறவினர்

சவாலான கேரக்டர்களுக்காக காத்திருக்கும் ரஜினியின் உறவினர்

YG Madhuvandhi says she is waiting for challenging characters சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் உறவினர் நடிகர் ஒய்ஜி. மகேந்திரன் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

நடிகர் Y.G.மகேந்திரா இன்றளவும் நாடக மேடைகள் அமைவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

அவரை தொடர்ந்து அவரது மகளுமான Y.G.மதுவந்தி மேடை நாடகம் எனும் விருந்தை மக்களுக்கு அளித்து வருகின்றார்.

Y.G.மதுவந்தி தனது தந்தை Y.G.மகேந்திராவுடன் மேடை நாடகங்களில் நடிக்க துவங்கி கடந்த 7 வருடமாக அவரே மேடை நாடகங்கள் தயாரித்து வெளியிட்டு பெரும் வெற்றியையும் பெற்றுள்ளார்.

Theatre of Maham எனும் இவரது மேடை நாடகங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலமாக சிவசம்போ, பெருமாளே, தில்லாலங்கடி மோகனாம்பாள் உள்ளிட்ட நாடகங்களை தயாரித்துள்ளார்.

இவை அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி 50க்கும் மேற்ப்பட்ட இடங்களிலும், வெளிநாடுகளிலும் இந்த நாடகங்கள் மேடையெற்றப்பட்டது.

பரதநாட்டிய கலைஞர், மேடை பாடகி, நடிகை என இயல் இசை நாடகம் என்று மூன்று துறையிலும் தனது தனித்துவத்தை நிரூபித்திருக்கிறார்.

தற்போது நாடகங்கள் மட்டுமன்றி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை Y.G.மதுவந்தி, பல படங்களில் நடித்தும் வருகிறார்.

குடும்ப பாங்கான, சவாலான கதாபாத்திரங்கள் உள்ள நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்குமென்றும், அப்படி பட்ட கதாபாத்திற்காக தான் நடிப்பதற்கு எப்பவும் ரெடி என்றும் கூறுகிறார் Y.G.மதுவந்தி.

YG Madhuvandhi says she is waiting for challenging characters

சென்சார் கெடுபிடியில் சிக்கி தவிக்கும் ‘பாரீஸ் பாரீஸ்’ தமிழ் வெர்சன்

சென்சார் கெடுபிடியில் சிக்கி தவிக்கும் ‘பாரீஸ் பாரீஸ்’ தமிழ் வெர்சன்

Paris Paris movie going to Censor revising committee ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குயின்’ திரைப்படத்தை, மீடியண்ட் பிலிம் சார்பாக தயாரிப்பாளர் மனுகுமரன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தயாரித்து இருக்கிறார்.

தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரீஸ் பாரீஸ்’ எனவும், தெலுங்கில் தமன்னா நடிப்பில் ‘தட்ஸ் மகாலட்சுமி’ எனவும், கன்னடத்தில் பருல் யாதவ் நடிப்பில் ‘பட்டர்ஃபிளை’ எனவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘ஜாம் ஜாம்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

கன்னடத்திலும், மலையாளத்திலும் சென்சார் கிடைத்த நிலையில் தமிழ் ரீமேக்கான ‘பாரீஸ் பாரீஸ்’ திரைப்படத்திற்கு சென்சார் போர்டு பல ஆடியோ, வீடியோ வெட்டுகள் மற்றும் காட்சி இருட்டடிப்புகளுக்கு பரிந்துரைத்து இருக்கிறது.

இதனை மறுபரிசீலனை செய்வதற்கு ஏதுவாக ரிவைசிங் கமிட்டியின் பார்வைக்கு எடுத்து செல்வது என தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருக்கிறது.

Paris Paris movie going to Censor revising committee

ரஜினி ரசிகர்களை காயப்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்த ஜெயம்ரவி

ரஜினி ரசிகர்களை காயப்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்த ஜெயம்ரவி

Rajini sir portion will be deleted in Comali says Jayam Raviநான் நடிக்க ஆரம்பித்தபோதிலிருந்தே என்னைப் பற்றிய நேர்மையான, தூய்மையான பிம்பம் இருப்பதற்கான தீவிர முயற்சிகளை எடுத்துவருகிறேன். அதனால்தான் இதுவரை நான் எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்கவில்லை.

என்னுடைய எண்ணங்களும் நிலைப்பாடுகளும் நான் ஏற்றிருக்கும் கற்பனைப் பாத்திரங்கள் மூலம் வெளிப்பட்டிருக்குமேயன்றி, எல்லைகளைத் தாண்டியவையாக ஒருபோதும் இருந்ததில்லை. எல்லோரிடத்திலும் இனிமையாகவும், புரிதலோடும் பழகும் நண்பனாகவே இருந்துவருகிறேன்.

எல்லோராலும் விரும்பப்படும் பரஸ்பரத் தோழனாகவே திரையுலகில் வலம்வருகிறேன். நான் நடித்து ஆகஸ்ட் 15 வெளியாகவிருக்கும், *‘கோமாளி’* திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் அளித்த பேராதரவினால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.

வெளியாவதற்கு முன்னரே இந்தப் படம் ஒரு முழு நீள, மகிழ்ச்சி ததும்பும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த குடும்பப் படம் என்ற பெயரைத் தட்டிச் சென்றிருக்கிறது.

இந்த முன்னோட்டத்துக்கு மாபெரும் வரவேற்பைத் தந்த எனது ரசிகர்களுக்கும், என்னுடன் நடித்த நடிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருந்தாலும் அந்த முன்னோட்டத்தில் மரியாதைக்குரிய ரஜினி சார் தொடர்பான குறிப்பிட்ட ஓர் அம்சம், தலைவரின் ஒரு சில ரசிகர்களின் உணர்வுகளை துரதிர்ஷ்டவசமாகக் காயப்படுத்திவிட்டது.

அந்த விஷயம் நேர்மறையாகச் சித்தரிப்பதற்காகவே சேர்க்கப்பட்டிருந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவரது ரசிகர்களைப் போலவே, அவரது அரசியல் பிரவேசப் பயணத்தை மிக ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும், ரஜினி சாரின் அதி தீவிர ரசிகன் என்ற முறையில் காணக் காத்திருக்கிறேன்.

நாங்கள் அனைவரும் அவரது திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள். அவரது நடிப்பும் ஸ்டைலும் எங்கள் இயல்பிலேயே ஊறிப்போயிருக்கும் தவிர்க்க இயலாத விஷயங்கள் ஆகும். அப்படி இருக்கும்போது அவரையோ அவரது ரசிகர்களையோ எந்த விதத்திலும் அவமதிக்கும் எண்ணம் துளியும் எங்களுக்குக் கிடையாது.

முன்னெப்போதைக் காட்டிலும் அவர் மேல் கூடுதல் பாசம் செலுத்திய தருணம், அவர் ‘கோமாளி’ படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டு எங்கள் குழுவை மனமாரப் பாராட்டியபோது ஏற்பட்டது.

எங்களது குழுவின் படைப்பாற்றல் திறனையும், அலாதியான கருத்தாக்கலையும் மனமாரப் பாராட்டினார்.

இருந்தபோதும், எந்த விதமான உள் நோக்கமும் இன்றி அமைக்கப்பட்டிருக்கும் ஒரு காட்சியால் அவரது ரசிகர்களில் ஒரு சிலர் கசப்புக்கு ஆளாகி, எதிர்மறைப் பின்னூட்டங்கள் இட நேர்ந்த காரணத்தால், அந்தப் பகுதியைப் படத்தில் இருந்து நீக்க முடிவுசெய்திருக்கிறோம்.

15.8.2019 அன்று திரையரங்குகளில் கோமாளியாக உங்களைச் சந்திக்கும் தருணத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நன்றி. வணக்கம்.

Rajini sir portion will be deleted in Comali says Jayam Ravi

ஆபரேஷன் அரபைமா-வை ஆரம்பித்த ரகுமான்.; அபிநயாவும் இணைந்தார்

ஆபரேஷன் அரபைமா-வை ஆரம்பித்த ரகுமான்.; அபிநயாவும் இணைந்தார்

Rahmans Next Suspense Thriller Titled Operation Arapaima‘துருவங்கள் 16’ படத்தின் மிக பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேகமாக வளர்ந்து வரும் திரைப்படம், “ஆபரேஷன் அரபைமா”.

பிரபல இயக்குநர்கள் டி.கே.ராஜிவ்குமார் மற்றும் அரண் படத்தின் இயக்குநர் மேஜர் ரவி ஆகியோரிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய ப்ராஷ் இப்படத்தை இயக்குகிறார்.

தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழி படங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் இப்படத்தின் இயக்குநர், ப்ராஷ், இந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும், இப்படத்தைப் பற்றி இயக்குநர் ப்ராஷ் கூறுகையில், நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையை கருவாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இது.

சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்திற்கு கதையின் நாயகனாக ரகுமான் கிடைத்தது பெரிய பலம். நான் கற்பனை செய்து வைத்திருந்த கதாபாத்திரத்தை அச்சு அசலாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ரகுமான்.

கதையின் நாயகியாக “நாடோடிகள்” அபிநயா நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு இருமொழிகளில் மிகுந்த பொருட்செலவில் நவீன தொழில் நுட்பங்களுடன் வேகமாக உருவாகி வருகிறது, “ஆபரேஷன் அரபைமா”.

நடிகர்கள்:

ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், கௌரி லஷ்மி ஷிஹாத், அரவிந்த் கலாதர், சஜி சுரேந்திரன், நேகா சக்சேனா, சாம்சன் டி.வில்சன், அனூப் சந்திரன், பாலாஜி, ரமேஷ், டேனி, மோகிதா பட்டக், மணிஷா மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

இசை : ராகேஷ் பிரம்மானந்தம் ஒளிப்பதிவு : ஃபீனிக்ஸ் உதயன் படத்தொகுப்பு: விஜயகுமார், ஷைஜூ, பாடல்கள் : முருகன் மந்திரம் வசனம் : ப்ராஷ், அரவிந்த் கலாதர், முருகன் மந்திரம்,

இணை இயக்குநர் : சஜி சுரேந்திரன் சண்டைப் பயிற்சி : கேப்டன் அனில்குமார் (Rtd NSG Commando Trainer), & கமாண்டோ அஜித்குமார், (Thunderbolt Commando Chief, Kerala Police). நிர்வாகத் தயாரிப்பு: சுஜித் சுதர்சன், க்ரீன் லைன் கண்ணன், அப்பு, ஜெயின் ஜார்ஜ், ஷைஜூ யோஹனன் புரொடக்சன் கண்ட்ரோலர் : ஏழுமலை சரவணன், பாதுஷா புரொடக்சன் மேனேஜர் : கவி சேகர், ஷின்ஜோ, ஜிதேஷ், நிரேஷ் ஸ்டில்ஸ் : வித்யாசாகர், மேக் அப்: லிபின், டிசைன்ஸ்: ஸ்ரீஸ்டி பிரின்ஸ் VFX: கேமரூன் ஃப்ளிக்ஸ் ஆடியோ: ராஜீவம் மியூசிக்

Rahmans Next Suspense Thriller Titled Operation Arapaima

மீண்டும் சினிமாவில் பிஸியாகும் உலகநாயகன் கமல்ஹாசன்

மீண்டும் சினிமாவில் பிஸியாகும் உலகநாயகன் கமல்ஹாசன்

Kamalhassan will be busy in cinema shooting of Indian2கடந்த மே மாதம் வரை சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பணிகளில் பிசியாக இருந்தார் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்.

அதன்பின்னர் சினிமாவில் பிசியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியை பிஸியாக தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

கமல் இயக்கி நடித்த ‘சபாஷ் நாயுடு’ படம் என்ன ஆச்சு? என்பதே யாருக்கும் தெரியாத நிலையுள்ளது.

இந்த நிலையில் விரைவில் ‘இந்தியன் 2’ மற்றும் ‘தலைவன் இருக்கின்றான்’ ஆகிய படங்களில் தொடர்ந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதற்காகத்தான் இது நாள் வரை முறுக்கு மீசையுடன் வலம் வந்த கமல் முற்றிலும் ஷேவ் செய்த முகத்துடன் வந்துள்ளார்.

எனவே விரைவில் இந்தியன் 2 சூட்டிங் தொடங்கினாலும் இடையில் இடையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலும் கமல் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kamalhassan will be busy in cinema shooting of Indian2

தல-தளபதியை ஒரே படத்தில் இயக்க ஆசைப்படும் பாகுபலி கலைஞர்

தல-தளபதியை ஒரே படத்தில் இயக்க ஆசைப்படும் பாகுபலி கலைஞர்

Lee Whittaker likely to direct Vijay and Ajith in Single movie1990களில் விஜய் மற்றும் இஜித் இருவரும் ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் இணைந்து நடித்தனர்.

தற்போது இருவருக்கும் தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எனவே அவர்களை இணைத்து ஒரு படத்தை இயக்க பலரும் ஆசைப்பட்டு வருகின்றனர்.

ஆனால் கடந்த 25 வருடங்களாக எந்தப் படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.

இந்த நிலையில் பாகுபலி, விஸ்வரூபம், எக்ஸ்மென் உள்ளிட்ட படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றிய லீ விட்டேகர் என்பவர் இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் அஜித் விஜய் ரசிகர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருக்கின்றனர். ஒருவேளை அவர்கள் இணைந்து நடித்தால் இது ரசிகர்களின் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைய வாய்ப்பு வரலாம்.
தல தளபதி பரிசீலனை செய்வார்களா..?

Lee Whittaker likely to direct Vijay and Ajith in Single movie

More Articles
Follows