ஈரம் 2 படத்தை இயக்க அறிவழகன் ஆர்வம்.; ஷங்கர் ஓகே சொல்வாரா?

ஈரம் 2 படத்தை இயக்க அறிவழகன் ஆர்வம்.; ஷங்கர் ஓகே சொல்வாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Eeram 2 happen Arivazhagan waiting for Shankars OK Statement ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த ஆர்வம் வரிசையில் தற்போது இணைந்துள்ளார் இயக்குனர் அறிவழகன்.

டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில் 2009ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை பயமுறுத்திய படம் ஈரம். இந்த படத்தை இயக்கியிருந்தார் அறிவழகன்.

பெரும்பாலும் பேய் படங்கள் என்றால் அதில் மனிதர்களே பேய்களாக இருப்பார்கள். ஆனால் தண்ணீரை மட்டும் வைத்துக் கொண்டு மனிதர்களை பழிவாங்குவதை வித்தியாமாக செய்திருந்தார் இயக்குனர் அறிவழகன்.

இதில் ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் ஆகியோர் நடித்து இருந்தனர்.

தற்போது இந்த படத்தின் 2ஆம் பாகத்தை இயக்க தயாராகிவிட்டாராம்.

பெரும்பாலும் 2ஆம் பாக படங்கள் தோல்வியை தழுவி வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே தயாரிப்பாளர் ஷங்கர் என்ன சொல்லப்போகிறார்? என்பதை பார்ப்போம்.

தற்போது சுந்தர் சியின் அரண்மனை படத்தின் 3ம் பாகம். விஜய் சேதுபதியின் சூதுகவ்வும் மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய படங்களின் 2ம் பாகத்தை உருவாக்க தயாராகி வருகின்றனர்.

Will Eeram 2 happen Arivazhagan waiting for Shankars OK Statement

மீண்டும் ’வாலு’ நடிகருடன் இணைய ’ஸ்கெட்ச்’ போடும் டைரக்டர்

மீண்டும் ’வாலு’ நடிகருடன் இணைய ’ஸ்கெட்ச்’ போடும் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Chandar to join hands with STR aka Simbu againசிம்பு நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகவுள்ள படம் மஹா.

இந்த படத்தில் தன் முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் இணைந்து நடித்துள்ளார் சிம்பு.

இதனையடுத்து வெங்கட் பிரபுவின் மாநாடு, மிஷ்கின் இயக்கும் பெயரிடப்படாத படம் ஆகிய படங்கள் சிம்பு கைவசம் உள்ளது.

இந்த நிலையில் விஜய் சந்தர் இயக்கத்தில் மீண்டும் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் வாலு படத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்திருந்தனர். விஜய் சந்தர் தான் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

வாலு படத்திற்கு பின் ஸ்கெட்ச், சங்கத் தமிழன் போன்ற படங்களை விஜய்சந்தர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Chandar to join hands with STR aka Simbu again

கொரோனா சரியான பின்னரும் விஜயா ஆஸ்பிட்டலில் சிக்கிய விஜய் பட இயக்குனர்; உதவிய சிவகார்த்திகேயன்-நயன்தாரா பட தயாரிப்பாளர்

கொரோனா சரியான பின்னரும் விஜயா ஆஸ்பிட்டலில் சிக்கிய விஜய் பட இயக்குனர்; உதவிய சிவகார்த்திகேயன்-நயன்தாரா பட தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer KJR Rajesh helps Director Majith to discharge from Hospitalஇளைய தளபதி விஜய், பிரியங்கா சோப்ரா, நாசர், ரேவதி, விவேக் நடித்த தமிழன் படத்தை இயக்கியவர் மஜீத்.

மேலும் பைசா என்ற படத்தையும் இயக்கியுள்ளார் இவர்.

இவருக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா பாசிட்டிவ் என்பதால் சென்னை வடபழனியிலுள்ள விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

சேரும் போதே மஜீத்தின் மனைவி கொரோனா டிரீட்மெண்ட்டுக்கு மொத்த செலவு எவ்வளவு ஆகும்? என கேட்டுள்ளார்.

அதற்கு விஜயா மேனேஜ்மெண்ட் ஆள் சொன்னது 2,80,000/- ரூபாய் ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.

உடனே தங்கள் கையிருப்பைக் மஜித் மனைவி செக் செய்து, சரி ஓகே.. சிகிச்சையை ஆரம்பியுங்கள் என தெரிவித்துள்ளார்.

சில தினங்களில் கொரோனா பாதிப்பில் குணமாக பணத்தை செட்டில் செய்யக் தொகையை கேட்டபோது ஒருநாள் காத்திருக்கச் சொல்லி (கணக்குப் பார்ப்பதற்காக) அவர்கள் சொன்ன தொகை 3,40,000/- ரூபாய்.

இதனையடுத்து மஜீத்தின் மனைவி நிறைய கேள்விகள் கேட்க கேட்க தொகை 4 லட்ச ரூபாய் ஆனது.

மஜீதும் வேறு வழியில்லாமல் சில நிர்வாகிகளிடம் விபரம் சொல்ல, அம்மா கிரியேசன்ஸ் டி. சிவா அவர்கள் 80,000/- ரூபாய் ஏற்பாடு செய்து நேரடியாக விஜயா ஹாஸ்பிட்டலுக்கே அனுப்பி விட்டாராம்.

ஆனாலும் டிஸ்சார்ஸ் செய்யாமல் பிரச்சனை தொடர… இறுதியாக அவர்கள் கேட்கும் தொகை 4,65,000/- ரூபாய் என ஆனது.

இதனையடுத்து தயாரிப்பாளர் ஜேஜேஆர். ராஜேஷ் உதவிக்கு வந்துள்ளார்.

மீதமுள்ள மொத்த தொகையை செட்டில் செய்ய பின்னர் மஜீத் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

நயன்தாரா நடித்த ஐரா, சிவகார்த்திகேயனின் நடித்த ஹீரோ மற்றும் டாக்டர் படங்களை ஜேஜேஆர். ராஜேஷ் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Producer KJR Rajesh helps Director Majith to discharge from Hospital

தற்கொலைக்கு எதிராக பேசிய நடிகரே தற்கொலை.; இப்போ புரியுதா? ரீல் வேற… ரியல் வேற

தற்கொலைக்கு எதிராக பேசிய நடிகரே தற்கொலை.; இப்போ புரியுதா? ரீல் வேற… ரியல் வேற

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sushant Singh Rajput suicide reveals Reel and Real heroes டிவியில் தொடங்கி சினிமாவில் தன் பயணத்தை தொடர்ந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

கடந்த 2013-ம் ஆண்டில் Kai Po Che பட மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

கிரிக்கெட்டர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான Dhoni the untold story படத்தில் தோனியாகவே வாழ்ந்து காட்டினார்.

இதன் மூலம் இந்தியா முழுக்க அறியப்பட்ட நபராக மாறினார்.

7 ஆண்டுகளில் 10 படங்கள். 34 வயதிற்குள் பிரபலமான நடிகராக உயர்ந்தார்.

சுஷாந்த் சிங்கும் நடிகை ரியா சக்ரபோர்த்தியும் காதலித்து வந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இவர்கள் நவம்பரில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் காலம் அவரின் முடிவை மாற்றிவிட்டது.

இவர் கடைசியாக நடித்த சிச்சோரே தற்கொலைக்கு எதிரான கருத்தை வலியுறுத்தியது.

சினிமாவில் வீர வசனம் பேசிய இவர் நிஜ வாழ்க்கையில் கோழையாக மாறி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

ஒரு பக்கம் ரசிகர்கள் மீளா துயரத்தில் இருந்தாலும் அவரை விரும்பியவர்களுக்கே இது பேரதிர்ச்சியாக உள்ளது.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக புரிந்துக் கொள்ள முடிகிறது.

சினிமாவில் நாம் காண்பவர்கள் ரீல் ஹீரோக்களே… அவர்கள் ரியல் ஹீரோக்கள் அல்ல… அவர்கள் சொல்வதை முழுமையாக நம்பி விட வேண்டாம்.

யாரோ ஒருவர் எழுதிய வசனத்திற்கு அவர்கள் நடிக்கிறார்கள். அவ்வளவுதான்.. இனிமேலாவது உங்கள் அபிமான ஹீரோக்களை கண்மூடித்தனமாக நம்பி தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை முடிவை எடுக்கும் முன்.. நாம் சினிமாவில் இப்படி எல்லாம் பேசி நடித்தோமே… நம் ரசிகர்கள் என்ன நினைப்பார்கள்? என்று ஒரு கனம் யோசித்திருக்கலாம்…

கடந்த ஜூன் 3-ம் தேதி கடைசியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சுசாந்த் சிங்… தன் தாயின் மறைவுக்கு பிறகு வாழ்க்கையே மாறிவிட்டதாகவும் அந்த சோகத்தை நடிப்பின் மூலம் ஈடு செய்து வருவதாகவும் உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆத்மா சாந்திடைய வேண்டுகிறோம்.

கூடுதல் தகவல்..

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050

Sushant Singh Rajput suicide reveals about Reel and Real heroes

45 லட்சம் கொடுத்தார்.. காலில் விழுந்தார் ரஜினி..; பெத்தராயுடு பெருமை பேசும் மோகன்பாபு

45 லட்சம் கொடுத்தார்.. காலில் விழுந்தார் ரஜினி..; பெத்தராயுடு பெருமை பேசும் மோகன்பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pedarayudu turns 25 Mohan babu reveals about Rajinis helpகே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இரு வேடங்களில் சரத்குமார் நடித்த படம் ‘நாட்டாமை’.

குஷ்பூ, மீனா, விஜயகுமார், கவுண்டமணி, செந்தில் நடித்த இந்த படம் தமிழ் சினிமாவில் பெரும் வசூல் சாதனைகளை படைத்தது.

இதன் வெற்றியை பார்த்த ரஜினி தெலுங்கில் ரீமேக் செய்ய நண்பர் மோகன் பாபுவிடம் கூறியுள்ளார்.

“தமிழ்ப்படம் நாட்டாமை பார்த்தியா.? சரத்குமார் நடிச்ச ஹிட் படம். அதை ரீமேக் பண்ணு.. நான் கெஸ்ட் ரோல்.. உனக்கு அப்பாவா ஆக்ட் பண்றேன்னு சொல்லிருக்கார்.

தெலுங்கில் ‘பெத்தராயுடு’ என்ற பெயரில் ரஜினி-மோகன்பாபு நடிப்பில் ரிலீசாகி இன்றோடு 25 ஆண்டுகள் கடந்து விட்டன.

ரவிராஜா பினி செட்டி என்பவர் இயக்கியுள்ளார்.

படம் உருவாகும் போதே பைனான்ஸ் பிரச்னை வந்துள்ளது. எனவே மோகன்பாபுக்கு ரூ 45 லட்சம் கொடுத்து படத்தை முடிக்க உதவியிருக்கிறார் ரஜினி.

பூஜை அன்றே ஓப்பனிங் ஷாட் நடைபெற்றுள்ளது. என்டிஆர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கதைப்படி அப்பாவான ரஜினிக்கு மோகன் பாபு மாலை போட்டுள்ளார்

ஆனால் எதிர்பாரா விதமாக அதே மாலையை மோகனுக்கு போட்டு அவர் பாதம் தொட்டு வணங்கியிருக்கிறார் ரஜினி.

அந்த போட்டோவை இன்னமும் பத்திரமா வைத்துள்ளார்.

இப்படியாக பெத்தராயுடு பெருமை பேசி நெகிழ்ந்துள்ளார் மோகன் பாபு..

நன்றி : தேவிமணி

Pedarayudu turns 25 Mohan babu reveals about Rajinis help

தமிழ்த்தாய் வாழ்த்து ஆல்பம்..: கமல் ஏஆர் ரஹ்மான் தீவிர முயற்சி

தமிழ்த்தாய் வாழ்த்து ஆல்பம்..: கமல் ஏஆர் ரஹ்மான் தீவிர முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal ar rahmanதலைவன் இருக்கின்றான் என்ற நேரலை நிகழ்ச்சிக்காக (வீடியோவில்) கமல் மற்றும் ஏஆர் ரஹ்மான் பங்கேற்றனர்.

அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து ஆல்பம் உருவாக்கும் முயற்சியில் கமல்ஹாசனும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துள்ளதை அறிவித்தனர்.

இதற்கான பாடலை எழுதி, ஆல்பத்தை கமல் இயக்க உள்ளார். ரஹ்மான் இசை அமைத்து பாடுகிறார்.

இதுகுறித்து கமல் கூறியதாவது: ஒரு ஆண்டுக்கு முன்பே இந்த யோசனையை ரஹ்மானிடம் சொல்லிவிட்டேன். அவரும் செய்யலாம் என்றார்.

படைப்பாளிளை வலிந்து வேலை வாங்க முடியாது. இது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்றார்.

ரஹ்மான் கூறும்போது… அப்படி ஒரு ஆசை எனக்கும் இருக்கிறது. அதற்கு நிறைய உழைக்க வேண்டும். கமலும் ஊக்கப்படுத்தி வருகிறார். நேரம் வரும்போது எல்லாம் தானாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

Kamal and AR Rahman rejoin for Thamizh Thai Vaazhuthu Album

More Articles
Follows