பெய்ரூட் துறைமுகத்தை சிதறடித்த அம்மோனியம் நைட்ரேட் பற்றி ஒரு பார்வை..

beirutஉலகத்தையே உலுக்கிய ஒரு சம்பவமாக பெய்ரூட் துறைமுகம் வெடிவிபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த வெடி விபத்துக்கு காரணமாக அம்மோனியம் நைட்ரேட் என்ன? என்பதை இங்கே பார்ப்போம்…
அம்மோனியம் நைட்ரேட் என்பதன் வேதியியல் மூலக்கூறு பெயர் NH4NO3 ஆகும்.
இயற்கையாகவே கிடைக்கும் இந்த வேதிப்பொருள் பெரும்பாலும், விவசாயம் மற்றும் வெடி பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

பயிர்களுக்கு தழைச்சத்து கிடைப்பதற்காக இது உரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பெரிய கட்டிடங்களை இடிக்கவும், பாறைகளை உடைக்க மற்றும் கிணறுகள் தோண்டுவதற்கு தேவையான வெடிபொருட்கள் தயாரிக்கவும் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுகிறது.
ஆனால் அம்மோனியம் நைட்ரேட் எளிதாக வெடிக்கும் ரசாயனம் இல்லை எனவும் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அம்மோனியம் நைட்ரேட்டை ஒரு அளவுக்கு மேல், ஓரிடத்தில் நீண்டகாலமாக வைத்திருந்தால், அது குறிப்பிட்ட அளவு வெப்பத்தை வெளியிடும் எனவும் சொல்லப்படுகிறது.
அதில் இருந்து வெளியாகும் வெப்பமே, நெருப்பாக மாறும் என்றும், அம்மோனியம் நைட்ரேட்டில் இருந்து ஆக்சிஜன் வெளியாகும் என்பதால், அதுவே தீ கொழுந்துவிட்டு எரிய வாய்ப்பாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
இது பற்றி எரியும்போது சிவப்பு நிற புகையை வெளியிடும் என்றும், அதிக நச்சுத்தன்மை கொண்ட இந்த புகையை ஜீவராசிகள் சுவாசித்தால் அது அவர்களை நொடியில் கொல்லும் என்றும் அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Overall Rating : Not available

Latest Post