தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இளைய மகன் சண்முகபாண்டியன்.
‘மதுரை வீரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
“வால்டர்”, “ரேக்ளா” படத்தை இயக்கிய u.அன்பு இயக்கத்தில் உருவாகிறது.
இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
டிரைக்கடர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில், விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை (ஆகஸ்ட் 25) விஜயகாந்தின் பிறந்த நாளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது இளைய மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர், நாளை (25/08/2023) வறுமை ஒழிப்பு தினமான எனது பிறந்த நாளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Vijayakanth spills beans on his son Shanmuga Pandian’s new movie