‘வேட்டைக்காரன்’ படத்தில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு பாடலுக்கு ஆடி நடித்திருந்தார்.
அதன் பின்னர் வெளிநாட்டில் படிக்க சென்ற அவர் சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமா தொடர்பான படிப்பையும் மேற்க்கொண்டு வருகிறார் சஞ்சய்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான உப்பெனா தெலுங்கு பட தமிழ் ரீமேக்கில் சஞ்சய் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் (தெலுங்கில்) விஜய்சேதுபதி வில்லனாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.
இப்பட தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளாராம் விஜய்சேதுபதி.
எனவே இப்படத்தை தமிழில் தயாரித்து இதிலும் மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான (தெலுங்கு) அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ஆதித்ய வர்மா’ படத்தில் தான் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vijay son to debut as hero in this remake ?