ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் இணையும் சீனு ராமசாமி – விஜய்சேதுபதி

ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் இணையும் சீனு ராமசாமி – விஜய்சேதுபதி

vijay sethupathi and seenu ramasamy‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்மில் விஜய் சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி.

அந்த படம் ரிலீசுக்கு முன்னரே விஜய்சேதுபதியை புகழ்ந்து பேசியிருந்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அப்போதே ரசிகர்கள் விஜய்சேதுபதி என்பவர் யார்? என கேட்டார்கள்.

சின்ன சின்ன வேடங்களில் நடித்த போதே தன் மீது நம்பிக்கை வைத்தவர்கள் சீனு ராமசாமி & கார்த்திக் சுப்புராஜ் என்பதனால் அவர்கள் அழைத்தால் கதை கூட கேட்காமல் நடிப்பார் விஜய்சேதுபதி.

அதன் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்தார். இந்த பட தயாரிப்பாளர் லிங்குசாமியின் கடன் பிரச்சனையால் படம் இன்னும் ரிலீசாகவில்லை.

எனவே சீனு ராமசாமியின் ‘தர்மதுரை’ படத்துக்கு கால்ஷீட் தந்தார் விஜய்சேதுபதி.

இப்பட வெற்றியைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சேதுபதி.

இந்த நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்குவதாக சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை அசுரன் படத்தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார்.

இந்த படம் படம் முற்றிலும் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Vijay Sethupathi and Seenu Ramasamy joins for thriller movie

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *