வேன் மீது ஏறி நின்று மாஸ் காட்டிய ‘மாஸ்டர்’ விஜய்

வேன் மீது ஏறி நின்று மாஸ் காட்டிய ‘மாஸ்டர்’ விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாஸ்டர்’ பட சூட்டிங்கில் விஜய் நடித்துக் கொண்டிருந்தபோதே வருமானத் வரித்துறையினர் விஜய்யை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதனால் 2 நாட்களாக சூட்டிங் தடைப்பட்டது.

விஜய்யிடம் இருந்து ரொக்கமாக பணம் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் அவரிடம் உள்ள சில ஆவணங்களை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றதாக கூறப்பட்டது.

இதனையடுத்து மீண்டும் மாஸ்டர் சூட்டிங்கில் கலந்துக் கொண்டார் விஜய்.

ஆனால் பாதுகாக்கப்பட்ட இடமான நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கூடாது என பாஜக.வினர் போராட்டம் நடத்தினர்.

இதனையறிந்த விஜய் ரசிகர்கள் அங்கு திரண்டனர்.

இதனால் இரு தரப்பும் மோதல் உருவாகவே பாஜகவினரை சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதனால் மாஸ்டர் சூட்டிங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியிலிருந்து காரில் வந்த விஜய் சூட்டிங்கில் கலந்துக் கொண்டார்.

என்.எல்.சி. 2-வது சுரங்க நுழைவாயில் பகுதி வழியாக அவரது கார் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு சென்றது.

என்.எல்.சி. தொழிலாளர்கள் மற்றும் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த படப்பிடிப்பு வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த படப்பிடிப்புக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும். மந்தாரக்குப்பம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இந்த நிலையில் விஜய்யை காண என்.எல்.சி முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

எனவே படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த அங்குள்ள வேன் மீது ஏறி தன் ரசிகர்களை பார்த்து கை அசைத்து செல்ஃபி எடுத்தார் விஜய்.

Vijay fans Mass crowd at Master shooting Neyveli spot

சென்னை விமான நிலையத்தில் ‘சூரரைப் போற்று’ இசை விழா

சென்னை விமான நிலையத்தில் ‘சூரரைப் போற்று’ இசை விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Soorarai Pottru audio launch will happend in Chennai Air Portஇறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப்போற்று.

சூர்யாவே தயாரித்துள்ள இந்த படத்தில் அபர்ணா முரளி நாயகியாக நடிக்க ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த படம் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியிருப்பதால் விமான பற்றிய நிறைய காட்சிகள் நிறைய உள்ளதாம்.

வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

எனவே இசை விழாவையும் சென்னை விமான நிலையத்தில் நடத்த பட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Soorarai Pottru audio launch will happend in Chennai Air Port

‘மாஸ்டர்’ இசை வெளியீடு; மீண்டும் மாஸ் காட்டுவாரா விஜய்..?

‘மாஸ்டர்’ இசை வெளியீடு; மீண்டும் மாஸ் காட்டுவாரா விஜய்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy Vijays Master movie audio launch newsவிஜய் மற்றும் விஜய்சேதுபதி இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படம் ‘மாஸ்டர்’.

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்பட சூட்டிங் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சூட்டிங்கின் போதே விஜய்யை அழைத்து சென்று அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இரண்டு நாட்கள் பின்னர் விசாரணையை முடித்துவிட்டு தற்போது மீண்டும் சூட்டிங்கில் கலந்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இப்பட இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்தவுள்ளனர்.

இந்த விழாவில் வருமான வரி சோதனை பற்றி நிச்சயம் விஜய் பேசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏற்கெனவே சர்கார், மெர்சல் விழாக்களில் விஜய்யின் அரசியல் கலந்து பேச்சு பரபரப்பானது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijays Master movie audio launch news

காதலர் தினத்தில் வெளியாகும் ஓ மை கடவுளே

காதலர் தினத்தில் வெளியாகும் ஓ மை கடவுளே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oh My Kadavuleஎல்லோருடமும் இளமை மாறாத ஒரே உணர்வு காதல். தமிழ் சினிமாவில் காதல் படங்களே வராதா ஏக்கத்தை போக்க, இளமை பொங்கும் படைப்பாக, தற்கால நவீன இளைஞரகளின் வாழ்வை அழகாய் சொல்லும் படமாக வருகிறது “ஓ மை கடவுளே”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் பத்திரைக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அபிநயா செல்வம் பேசியது…

நானும் தம்பி அசோக்கும் சிறுவயதில் இருந்தே நிறைய சேட்டைகள் செய்திருக்கிறோம். அவனுடைய கிரஷ்ஷிடம் எப்படி பேச வேண்டும் என்று கூட அவனுக்கு சொல்லி தந்துள்ளேன். என் வாழ்வில் எப்போதும் உடனிருப்பவன். அவனுடன் இந்தப்படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் எங்கள் வாழ்வில் முக்கியமான படம். அனைவருக்கும் பிடிக்ககூடிய படமாக எடுத்திருக்கிறோம். பார்த்துவிட்டு சொல்லுங்கள் நன்றி.

நிர்வாக தயாரிப்பாளர் நோவா பேசியது….

“ஓ மை கடவுளே” என் வாழ்வில் முக்கியமான படம் – அசோக் செல்வன்

சினிமாவில் ஜெயிக்கும் அதே நேரம் மனதுக்கு பிடித்த படத்தை செய்ய வேண்டும் என நினைக்கும் டீம் நாங்கள். நண்பர்களாக இணைந்து இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம். நண்பர்கள் எப்போதும் தோற்பதில்லை. இந்தப்படம் கண்டிப்பாக ஜெயிக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் விது அயன்னா பேசியது….

இது என்னோட மூன்றாவது படம் “மேயாத மான், எல் கே ஜி” என ஒவ்வொரு படமும் வேறு வேறு ஜானர். காதல் படம் என்றால் எனக்கு பிடிக்கும். இதுவும் காதல் படம் என்பதால் நான் ஒத்துக்கொண்டேன். இயக்குநர் மிகத்தெளிவானவராக இருந்தார். விஷுவல் நன்றாக இருப்பதாக பார்த்தவர்கள் சொன்னார்கள். எல் கே ஜி படத்தை ரிலீஸ் செய்த டீம் மீண்டும் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். அது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி நன்றி.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்தி பேசியது…

“ஓ மை கடவுளே” படத்தில் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றம் !

டில்லிபாபு சாரை முதலில் பார்த்த போது நீங்கள் தான் இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். பிஸுனஸ் விஷயம் எல்லாம் அப்புறம் பார்த்துகொள்ளலாம் என்றார். படம் அருமையாகவே இருந்தது. கடைசியாக சில்லுகருப்பட்டி ரிலீஸ் செய்தேன். அதே மனதுடன் நேர்மறை தன்மையுடன் இந்தப்படத்தையும் ரிலீஸ் செய்கிறேன். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவரும் ஒரு டீமாக எந்த ஈகோவும் இல்லாமல் வேலை செய்துள்ளார்கள். சந்தோஷமான மனதுடன் இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறேன் நன்றி.

நடிகர் சாரா பேசியது…

இது கிட்டதட்ட என்னோட ரூம்மேட்கள் சேர்ந்து எடுத்த படம். எல்லோரும் சேர்ந்து வேலை செய்தது மிக மகிழ்ச்சி. படப்பிடிப்பு நார்மலாகவே இருக்காது நண்பர்கள் சேர்ந்தால் நடக்கும் கலாட்டா எல்லாமே நடக்கும். ஹீரோயின் ரித்திகாவுடன் கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தேன். மிக எளிமையானவர் தானே மேக்கப் போட்டுக்கொண்டு இயல்பாக ஹீரோயின் எனும் பந்தாவே இல்லாமல் இருந்தார். பாடல்கள் அருமையாக வந்துள்ளது. படம் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை வாணி போஜன் பேசியது…

ஒரு படம் செய்யும் போது அந்தப்படத்தில் படத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் அந்தப்படம் பிடித்திருக்க வேண்டும். இந்தப்படம் அப்படிபட்ட படம். நான் பார்ப்பவர்களிடம் எல்லாம் முதலில் “ஓ மை கடவுளே” ரிலீஸ் ஆக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். எல்லோரும் கேட்டார்கள் அப்படி என்ன படம் அது என்று. இது எங்கள் படம் நாம் தான் தயாரிப்பாளர் போல் இருக்கிறோம் என்று அசோக்கிடம் சொன்னேன். எல்லோரும் நண்பர்கள் போல் இணைந்து இந்தப்படத்தை எடுத்துள்ளோம். கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

‘ஓ மை கடவுளே’ படத்தில் அசோக் செல்வன்-ரித்திகா சிங்-வாணிபோஜன்

நடிகை ரித்திகா சிங் பேசியது…

இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். மூன்று வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்துள்ளேன். இப்படக்குழு அனைவரும் என் மீது மிகப்பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். தயாரிப்பாளர் அபிநயா என்னுடைய சகோதரி போல் மாறி விட்டார். இயக்குநர் அஷ்வத் மிகத் தெளிவானவர். காட்சிகள் எப்படி வர வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். சாரா மிகச்சிறந்த நண்பர், மிக கலகலப்பானவர். வாணி போஜன் மிக எளிமையானவர், மிக அழகானவர் அவர் என் சகோதரி போல் அன்பு செலுத்தினார். அசோக் செல்வன் மிகமிக ஆதரவாக இருந்தார். ஒரு நண்பனாக எந்த ஈகோவும் இன்றி கூட இருந்தார். அவர் போல பெண்களுக்கு துணையாக ஆண்கள் உலகில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப்படம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் எல்லோரும் பார்த்து ரசியுங்கள் நன்றி.

தயாரிப்பாளர் டில்லிபாபு பேசியது…

எங்கள் படங்களுக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. நாங்கள் பெரிய பட்ஜெட் படம் எடுப்பதில்லை. சின்ன படஜெட் படங்கள் தான் எடுக்கிறோம். அது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்கு ஆதரவு தந்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. எங்கள் கம்பனியில் வித்தியாசமான படங்கள் எடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. “ராட்சசன்” படத்திற்கு பின்னர் அடுத்து என்ன செய்யலாம் எனும் போது அஷ்வத் சொன்ன கதை எங்களுக்கு பிடித்தது. உடனே முடிவு செய்து இப்படத்தை ஆரம்பித்தோம். எல்லாமே கடவுளின் செயல் போல் தான் நடக்கிறது. இப்படம் நம் வாழ்வில் நடக்கும் கதைதான் ஆனால் அதை சொல்லும் விதத்தில் நேர்த்தி இருக்கும். இயக்குநர் அழகாக இயக்கியுள்ளார். ரித்திகா சிங் தான் இந்தக்கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று விரும்பினோம். அவரும் மிகுந்த ஒத்துழைப்பு தந்தார். மிக மிக இயல்பான நபராக இருந்தார். அர்ப்பணிப்பு மிக்கவரகா இருந்தார். அசோக் செல்வனுக்கு இந்தப்படம் முக்கியமான படமாக இருக்கும். அவருடைய திறமை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை என்றே சொல்வேன். அவர் இன்னும் பல உயரங்கள் செல்வார். வாணி போஜனை தமிழில் அறிமுகப்படுத்துவதில் பெரிய மகிழ்ச்சி. சாரா எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் இந்தப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறார். இந்தப்படம் பார்ப்பார்கள் அனைவருக்கும் சாராவை பிடிக்கும். விஜய் சேதுபதி மிகுந்த ஆதரவாக இருந்து நடித்து தந்தார். சக்தி ஃபிலிம் ஃபேக்டரிக்கு இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவருக்கு படம் காட்டினேன் அவருக்கு படம் பிடித்திருந்தது. கட்டிப்பிடித்து பாராட்டினார். தெலுங்கில் இருந்து வந்து படம் பார்த்து ரிமேக் செய்ய இப்போதே அணுகினார்கள். படம் ரிலீஸாகும் முன்பே எங்களுக்கு இந்த மரியாதை கிடைத்திருக்கிறது. அதை பெருமையாக நினைக்கிறேன். பூபதி அருமையாக எடிட் செய்திருக்கிறார். என்னை அதிகம் காயப்படுத்திய இயக்குநர் அஷ்வத் தான் ஆனால் அதிகமான சந்தோஷம் தந்த படத்தை தந்திருக்கிறார். அஷ்வத் உடன் இன்னும் ஒரு படம் செய்ய விரும்புகிறேன். படம் முதலில் நமக்கு பிடிக்க வேண்டும் அப்போது தான் அடுத்தவர்களுக்கு பிடிக்கும். பாடல்கள் மற்றும் டிரெயலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படமும் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் பேசியது….

ஒரு சூப்பரான ஃபிரஷ்ஷான டீமுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இது ஒரு ஃபேண்டஸி ரோம் காம் ஸ்டோரி. அஷவத் மிகத்தெளிவாக எழுதுபவர். அற்புதமான படைப்பாளி. மிகத்திறமை வாய்ந்தவர். இந்தப்படம் ரசிகனாக என்னை அதிகமாக கவர்ந்திருக்கிறது. இதில் எட்டு பாடல்கள். படம் எல்லோருக்கும் விருந்தாக இருக்கும் நன்றி.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பேசியது….

இந்த மேடை நெடு நாளைய கனவு. நான் சினிமா எடுப்பேன் என அம்மா, அப்பா நம்பவில்லை. என் குறும்படம் ஒன்றை பார்த்த பிறகு தான் நம்ப ஆரம்பித்தார்கள். இப்போது வரை பெரிய ஆதரவாக உள்ளார்கள். இந்த மேடையில் இருப்பவர்கள் அனவருமே எனது நெருங்கிய நண்பர்கள். அவர்களால் தான் இந்தப்படம் நடந்தது. அசோக் எனது நெருங்கிய நண்பன். அபியிடம் அனுப்பி கதை சொல்ல சொன்னார் அப்படி தான் இந்தப்படம் ஆரம்பித்தது. தயாரிப்பாளர் டில்லிபாபு அவரை முதலில் சந்தித்த போதே லேட்டாகத்தான் போனேன். ஆனால் அவருக்கு கதை பிடித்திருந்தது. எந்த ஈகோ இல்லாமல் ராட்சசனுக்கு பிறகு என் படம் தயாரிக்க ஒத்துகொண்டார். அவர் இல்லை என்றால் இந்த மேடை இல்லை. இந்த டீமில் இருக்கும் அனைவருமே தங்கமான மனிதர்கள். லியான் ஜேம்ஸ் என்னோட அலைவரிசையில் இயங்கும் மனிதர். அவருக்கு லவ் என்றால் பிடிக்கும். இந்தப்படத்தில் இசை வெகு முக்கியம் அதை அவர் நிவர்த்தி செய்துள்ளார். சாராவை இதுவரையிலும் யாரும் சரியாக பயன்படுத்தவில்லை. இப்படத்தில் அவரை அனைவருக்கும் பிடிக்கும். வாணி போஜன் கேரக்டருக்கு நிறைய பேரை அணுகினோம் ஆனால் அக்கா எனும் வார்த்தையால் யாரும் செய்ய மாட்டேன் என்றார்கள். ஆனால் வாணி போஜன் அவரே முன்வந்து இந்தக்கதாப்பாத்திரத்தை செய்தார். அவர் இந்தப்படத்திற்கு பிறகு எல்லோருடைய கிரஷ்ஷாக மாறி விடுவார். ரித்திகா சிங் இறுதிசுற்றுக்கு பிறகு இந்தப்படத்தில் அனைவருக்கும் அவரைப்பிடிக்கும். அவர் மிகச்சிறந்த நடிகர். அவர் மிக எளிமையாக இருந்தார். மிக மிக அர்ப்பணிப்பானவர். அவர் நிறைய தமிழ் படங்கள் செய்ய வேண்டும். பூபதி என்னுடைய காலேஜ் ஜீனியர் என்னுடைய குறுமபடத்திலிருந்து அவர் தான் எடிட்டர். இனிமேல் செய்யும் படங்களுக்கும் அவர் தான் செய்வார். அசோக் என் மச்சான் நாளைய இயக்குநரிலிருந்து தெரியும். நான் என்ன சொன்னாலும் செய்வேன் என சொல்பவர். அவரது முழுத்திறமையை இப்படம் வெளியில் காட்டும். இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் அசோக் செல்வன் பேசியது…

ரொம்ப நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன். என் அக்கா அபிநயா செல்வம் பிரில்லியண்ட். என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட். ஆனால் மிகப்பெரும் தைரியமாக படத்தை எடுத்திருக்கிறார். அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக எழுதும் திறமை இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்திற்கு பிறகு எங்களுடன் இணைந்து படம் செய்ததற்கு டில்லிபாபு சாருக்கு நன்றி. காதல் படத்திற்கு இசை வெகு முக்கியம் லியான் ஜேம்ஸ் பாதி படம் முடிந்த பிறகு தான் உள்ளே வந்தார். ஆனால் அத்தனை அற்புதமாக இசையமைத்துள்ளார். விது , பூபதி எல்லோருமே நண்பர்கள். இவர்களுடன் வேலை பார்த்தது சந்தோஷம். வாணி அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. ரித்திகா இப்போது நெருக்கமான நண்பியாக மாறிவிட்டார். அவருடன் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன். சாராவை முதலில் நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் படம் பார்த்த பிறகு அவர் தான் மனதில் நின்றார். சினிமாவில் பணம் சம்பாதிக்க ஆசை இல்லை அதனால் தான் இந்த பெரிய இடைவெளி. எனக்கு நிறைய வித்தியாசமான கேரக்டர், கதைகள் செய்ய ஆசை. இப்போது காதல் கதைகள் எதுவும் வருவதில்லை அதனால் இந்தப்படம் செய்யலாம் எனத் தோன்றியது. எனக்கு பிடித்து ஆசைப்பட்டு செய்த படம் உங்களுக்கும் பிடிக்கும். அஷ்வத் 8 வருடம் ஒன்றாக பயணிக்கும் நண்பன். அஷ்வத் இந்தப்படம் செய்கிறான் என்பதால் எனக்கு பயமே இல்லை அந்தளவு முழுமையாக அவனை நம்புகிறேன். படத்தில் முக்கியமான பாத்திரம் ஒன்னு இருக்கு. அதுக்கு விஜய் செதுபதி அண்ணாகிட்ட கேட்டோம். நான் நல்லா வர வேண்டும் என்று மனதார நினைப்பவர். கதையே கேட்காமல் எனக்காக நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு பெரிய மனசு எளிமையா வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிட்டார். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் கடவுளாக நடிக்கிறார். மற்றதெல்லாம் திரையில் பாருங்கள் நன்றி.

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

வாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து

இசை – லியான் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு – விது அயன்னா

படத்தொகுப்பு – பூபதி செல்வராஜ்

கலை இயக்கம் – இராமலிங்கம்

உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்

உடைகள் – முகம்மது சுபையர்

சண்டைப் பயிற்சி – ராம்குமார்

பாடல்கள் – கோ சேஷா

புகைப்படம் – ராஜா

தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்

நிர்வாக தயாரிப்பு – நோவா.

தீபாவளிக்கு குழந்தைகளுக்கு விருந்தளிக்க வரும் ‘வலிமை’

தீபாவளிக்கு குழந்தைகளுக்கு விருந்தளிக்க வரும் ‘வலிமை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajiths Valimai movie release updatesவினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை.

இந்த படத்தை மறைந்த நடிகையின் ஶ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரித்து வருகிறார்.

வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வலிமை படத்தை நவம்பர் 12-ஆம் தேதி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நவம்பர் 14 தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. மேலும் நவம்பர் 14 குழந்தைகள் தினம் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Ajiths Valimai movie release updates

இப்படி இருந்தா ரஜினி எப்படி நாட்டை காப்பாற்றுவார்..? – டி.ராஜேந்தர்

இப்படி இருந்தா ரஜினி எப்படி நாட்டை காப்பாற்றுவார்..? – டி.ராஜேந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

T Rajendar talks about Rajini and AR Murugadoss ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவான தர்பார் படம் கடந்த ஜனவரி 9ல் ரிலீசானது.

கிட்டதட்ட ஒரு மாதம் ஆன நிலையில் நிறைய தியேட்டர்களிலும் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் நாங்கள் எதிர்பார்த்த லாபத்தை படம் தரவில்லை. நஷ்டத்தை நஷ்டம் ஏற்படுத்திவிட்டதாக சில விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தமிழ் திரையுலகமே சில நாட்களாக பரபரப்பாகியுள்ளது.

இதனையடுத்து விநியோகஸ்தர்கள் லைகா நிறுவனத்திடம் முறையிட அவர்கள் ரஜினி மற்றும் முருகதாஸிடம் முறையிட சொன்னதாக தெரிகிறது.

இதனால் சிலர் ஏ.ஆர்.முருகதாஸை சந்திக்கச் சென்றனர். ஆனால் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளதாக அந்த விநியோகஸ்தர்கள் மீது குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரம் மிகவும் சர்ச்சையானது.

இந்த நிலையில் தர்பார் பட நஷ்ட விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர்.

அப்போது… “தர்பார் திரைப்படத்தால் தமிழகம் முழுவதும் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். லைகா விநியோகஸ்தர்களுக்கு சரியான பதிலைச் சொல்லவில்லை.

குறைந்தபட்ச உத்திரவாதத்தில் வாங்கியிலிருந்தால் சங்கங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிடலாம்.

ஆனால் விளக்கில் விட்டில் பூச்சி விழுவதை போல் விழுந்துவிட்டார்கள்,

தர்பார் படம் ஒரிஜினர் படம் போல இல்லை. டப்பிங் படம் போலாகிவிட்டது

தங்களது கோரிக்கையை முருகதாஸிடம் கூறச் சென்ற விநியோகஸ்தர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

முருகதாஸிடம் மூத்த இயக்குநர் என்ற முறையில் கேட்கிறேன். உங்களுக்கான சங்கம் உள்ளது அப்படியிருக்கையில் காவல்துறையில் புகார் அளிக்கலாமா?

படத்தை நீங்கள் எடுத்தால் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது யார்? விநியோகஸ்தர்கள் தான்.

இதற்கு முன் நீங்கள் இவ்வளவு சம்பளமா வாங்கினீர்கள்? உங்களை சந்திக்க மூகமுடி அணிந்து கூட்டமாக வந்தார்களா?

துப்பாக்கியோடு வந்தார்களா? கத்தியோடு வந்தார்களா? அவர்கள் மீது புகார் அளித்ததை மூத்த இயக்குநர் என்ற முறையில் மிகுந்த வருத்தமடைகிறேன்.

அவர்கள் கைது செய்யப்பட்டால் எங்கள் சங்க சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள விநியோகஸ்தர்களையும் எங்களுக்கு ஆதரவான தயாரிப்பாளர்களை திரட்டி நாங்கள் குரல் கொடுப்போம்.

ஒரு வேளை தர்பார் படத்தை வாங்கிய குற்றத்திற்காக அவர்களுக்கான பரிசு கைது தான் என்றால் ‘வாங்கியது தர்பார் எண்ணுவது பார்(கம்பி) என்றால் ரஜினி படத்தை வாங்கியவர்களை காப்பாற்ற முடியாதவர்களா? தமிழகத்தை காப்பாற்ற போகிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் என்ன ஆங்கில பட இயக்குனரா? வெளிநாட்டிலிருந்து வந்துவிட்டரா? முருகதாஸ் அவர்களே கரண்டில் இல்லாதவர்கள் கரண்டில்(மின்சாரத்தில்) கூட கைவைக்க சொல்வார்கள் பார்த்து இருங்கள். அடுத்தப் படத்தில் இவ்வளவு சம்பளம் வாங்க முடியுமா? ”

இவ்வாறு டி ராஜேந்தர் பேசினார்.

T Rajendar talks about Rajini and AR Murugadoss

More Articles
Follows