கார்த்திக்கும் அவரது மகனும் நடிக்கும் படத்தில் இணைந்தார் வரலட்சுமி

கார்த்திக்கும் அவரது மகனும் நடிக்கும் படத்தில் இணைந்தார் வரலட்சுமி

Varalakshmi teams up with Karthik and his son Gautamஅப்பா கார்த்திக், அவரது மகன் கௌதம் கார்த்திக் ஆகியோர் முதன்முறையாக ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பதை பார்த்தோம்.

இப்படத்தை திரு என்பவர் இயக்க, கார்த்தியும் கௌதமும் அப்பா & மகனாகவே நடிக்கிறார்களாம்.

கௌதமுக்கு ஜோடியாக நடிக்க ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

தற்போது இன்னொரு ஹீரோயினியாக சரத்குமார் மகள் வரலட்சுமி நடிக்கிறாராம்.

Varalakshmi teams up with Karthik and his son Gautam

விஷால் அறிவிப்பால் லாபம் அடைந்த கருப்பன்; விஜய்சேதுபதி ஹாப்பி

விஷால் அறிவிப்பால் லாபம் அடைந்த கருப்பன்; விஜய்சேதுபதி ஹாப்பி

karuppan movie stillsரேனிகுண்டா படத்தை தொடர்ந்து பன்னீர் செல்வம் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் கருப்பன்.

இதில் விஜய்சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா, பசுபதி, சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் நடிக்க, இமான் இசையமைத்திருந்தார்.

கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி இப்படம் வெளியானது.

இந்நிலையில் தமிழக அரசின் கேளிக்கை வரியை எதிர்த்து புதிய படங்கள் அக்டோபர் 6 முதல் ரிலீஸ் ஆகாது என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தார்.

எனவே 8 படங்கள் ரிலீஸ்க்கு தயாராக இருந்தும் வெளியாகவில்லை.

எனவே முன்பு ஓடிக்கொண்டிருந்த படங்களையே தியேட்டர்களில் திரையிட்டு வருகின்றனர்.

இதனால் புதிய படங்களுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த தியேட்டர்களிலும் ‘கருப்பன்’ படத்தை திரையிட்டு வருகின்றனர்.

இதனால் கருப்பனுக்கு கூடுதலாக 100 தியேட்டர்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விஜய்சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருகிறார்களாம்.

Since new movies not released Karuppan screens increased

ஸ்கெட்ச் படத்தில் விக்ரமின் வில்லன் யார்.?

ஸ்கெட்ச் படத்தில் விக்ரமின் வில்லன் யார்.?

Who is the baddie of Vikram in Sketch movieவாலு படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் படத்தை இயக்கி வருகிறார் விஜய்சந்தர்.

இதில் விக்ரம் உடன் தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிக்க, தமன் இசையமைத்துள்ளார்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார்.

இதன் டீசரை தீபாவளி தினத்தன்று அக்டோபர் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் வில்லன் யார்? என்ற கேள்வி பல நாட்களாக ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

இப்படத்தின் கதைக்களம் வடசென்னை என்பதால், நிறைய பேர் ஹீரோவுக்கு எதிரியாக இருப்பார்களாம்.

எனவே இதில் வில்லன்கள் உள்ளனர் என தகவல்கள் வந்துள்ளன.

Who is the baddie of Vikram in Sketch movie

பஜனை கூட்டணியின் அடுத்த பூஜை… இருட்டு அறையில் முரட்டு குத்து

பஜனை கூட்டணியின் அடுத்த பூஜை… இருட்டு அறையில் முரட்டு குத்து

iamk stillsசந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்த ஹரஹர மஹாதேவகி படம் அண்மையில் வெளியானது.

அடல்ட் காமெடி படமாக உருவான இந்த பஜனை படம் இளைஞர்களை கவர்ந்தது.

இப்படம் வெளியாகும் முன்னரே தங்களின் அடுத்த படமான இருட்டு அறையில் முரட்டு குத்து பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர்.

அதன்படி அக்டோபர் 7ஆம் தேதி இதன் பூஜை போடப்பட்டது.

அதன் விவரம் வருமாறு….

ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் K E ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

இதில் கௌதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சந்தோஷ் பி ஜெயகுமார். இப்படத்திற்கு தருண் பாலாஜி ஒளிப்பதிவை மேற்கொள்ள, இசையமைப்பாளர் பாலமுரளி பாலா இசையமைக்கிறார்.

பிரசன்னா G K படத் தொகுப்பை கவனிக்க, சுப்ரமணிய சுரேஷ் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறார்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் சன்தோஷ் பி ஜெயக்குமார் பேசும் போது,‘ இது ஒரு அடல்ட் ஹாரர் காமெடி ஜேனரில் உருவாகும் படம்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. நாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இறுதியானவுடன் விரைவில் அறிவிப்போம். படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகும்.’ என்றார்.

இதன் டைட்டில் லுக் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் காண்டம் மற்றும் பிரா உள்ளிட்டவைகளும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Iruttu Araiyil Murattu Kuthu movie Pooja and First look updates

Iruttu Araiyil Murattu Kuthu movie Pooja and First look updates

ஜெய்யின் லைசென்ஸை கேன்சல் செய்து ரூ.5200 ஃபைன் போட்டது கோர்ட்

ஜெய்யின் லைசென்ஸை கேன்சல் செய்து ரூ.5200 ஃபைன் போட்டது கோர்ட்

jai artகடந்த மாதம் குடிபோதையில் கார் ஓட்டிய சர்ச்சையில் சிக்கினார் நடிகர் ஜெய்.

மேலும் விபத்து ஏற்படுத்தியதாலும் லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதாலும் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஜெய் ஆஜராக வேண்டும் என பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் அவர் ஆஜராகவில்லை என்பதால் அவரை கைது செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்து, தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார் ஜெய்.

இதனையடுத்து ஜெய்க்கு ரூ. 5200 அபராதமும், 6 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்தும் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jai driving licence is cancelled for 6 months for Drunk Driving case

கமல் நன்றாக நடிப்பார்; ஆனால் தலைவர்ன்னா ரஜினிதான்.. – சாருஹாசன்

கமல் நன்றாக நடிப்பார்; ஆனால் தலைவர்ன்னா ரஜினிதான்.. – சாருஹாசன்

Kamal is good Actor but Rajini is Thalaivar says Charuhasanகமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் அவர்கள் ரஜினி மற்றும் கமலின் சினிமா பயணம் குறித்து தன் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

அவர் கூறியதாவது…

சிவாஜி நன்றாக நடிப்பார். அவர் நடிக்கட்டும்ய்யா. நமக்கு அண்ணன் எம்ஜிஆர்தான் என்று நாங்கள் சொல்வோம். அன்று பலருடைய மனநிலையும் இதுதான். அதே நிலைமைதான் இன்று ரஜினிக்கும் கமலுக்கும் உள்ளது.

கமல் நன்றாக நடிக்கக்கூடிய திறமையான நடிகர். ஆனால் ரஜினிக்குதான் நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர்தான் தலைவர்.

கமலுக்கு நிறைய ரசிகைகள் உண்டு. கமலை பெண்கள் ரசிப்பதால் கோபப்படுபவர்களும் அதிகம் உண்டு.

ரஜினியை காதலிக்கிறேன் என யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் மக்களை கவரும் காந்தம் கவர்ச்சி ரஜினியிடம் உள்ளது.

ரஜினி கட்சி துவங்கமாட்டார். அவர் அரசியல் பேசிக் கொண்டிருப்பார். கமலை விட நண்பர் ரஜினி எனக்கு நெருக்கமானவர்.

ரஜினியை விமர்சித்தால் வாக்குகள் சிதறும். அதனால்தான் எந்த அமைச்சரும் ரஜினியைத்தான் விமர்சிக்க மாட்டார்கள்.” என்றார்.

Kamal is good Actor but Rajini is Thalaivar says Charuhasan

More Articles
Follows