தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் அஜித் திரைத்துறைக்கு வந்து 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
அவரது ரசிகர்கள் இந்த நிறைவு விழாவை ஸ்பெஷல் காமென் டிபியை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
பல பிரபலங்கள் இந்த டிபி.யை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை வனிதாவும் ஒரு காமென் டிபியை பதிவிட்டு அஜித்தைப் பற்றி தன் கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில்…
“நம்ப முடியாதது. ஆனால் உண்மை. நாங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தான் சினிமாவில் நுழைந்தோம். சினிமாவில் நல்லதையும், மோசமானதையும் பார்த்தோம்.
அஜித் இந்த வெற்றிக்கு தகுதியானவர். நான் சந்தித்த மிக உண்மையான மனிதர்களில் ஒருவர்.
உங்களுக்கும், ஷாலினிக்கும் அனைத்து சிறப்புகளையும் கடவுள் கொடுப்பார்” என வனிதா பதிவிட்டுள்ளார்.
சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக வனிதா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.