கொரோனா பாதிப்பால் ஆஸ்கர் விருது வென்ற நடிகர் டாம் ஹெங்ஸ் தவிப்பு

கொரோனா பாதிப்பால் ஆஸ்கர் விருது வென்ற நடிகர் டாம் ஹெங்ஸ் தவிப்பு

Tom hanksஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹெங்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தங்களின் சினிமா பணி தொடர்பாக இருவரும் ஆஸ்திரேலியா சென்ற போது கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே தம்பதியர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

தனது சமூக வலைத்தள பக்கத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக டாம் ஹெங்ஸ் உறுதி செய்துள்ளார்.

அரசியல் மாற்றம் இப்போ இல்லேனா எப்பவுமே இல்ல..; கஸ்தூரி போட்ட ‘ரஜினி’ வெடி

அரசியல் மாற்றம் இப்போ இல்லேனா எப்பவுமே இல்ல..; கஸ்தூரி போட்ட ‘ரஜினி’ வெடி

Rajini kasthuriஇன்று மார்ச் 12ஆம் தேதி ரஜினிகாந்த் 3 அரசியல் திட்டம் குறித்து பேசினார்.

ரஜினி பேச்சுக்கு சீமான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கருத்துதெரிவித்து வருகின்றனர்.

நடிகை கஸ்தூரியும் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.்ஒரே வார்த்தையோடு முடித்து கொண்டுள்ளார்.

அதில், “அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது நிகழவில்லை எனில் எப்போதுமே நிகழாது -ரஜினிகாந்த் அதிரடி என்று குறிப்பிட்டு

“போடுறாவெடிய ” என்ற வார்த்தையை பதிவிட்டுள்ளார்.

ரஜினியை பாராட்டி சொன்னாரா? கிண்டல் அடித்தாரா? என்பது கஸ்தூரிக்கே வெளிச்சம்.

மார்ச் 12 இன்றும் ஐடி ரெய்டு.; மாஸ்டர் விஜய்க்கு தொடரும் டார்ச்சர்..!

மார்ச் 12 இன்றும் ஐடி ரெய்டு.; மாஸ்டர் விஜய்க்கு தொடரும் டார்ச்சர்..!

Master Vijayஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘பிகில்’.

இந்த படத்திற்காக பெற்ற சம்பளம் குறித்தும், சொத்து மதிப்புகள் குறித்தும், கடந்த பிப்., 5ல், நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இப்படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ்., வீடு மற்றும் தியேட்டர்களிலும், இப்படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன் அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மூவருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பி அதிகாரிகள் விசாரித்தனர்.

இரு தினங்களுக்கு முன் ‛மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரான லலித்குமார் வீட்டில், வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று மார்ச் 12 விஜய்யின் பனையூர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அரசியல் மாற்றத்திற்கான ரஜினி சொன்ன 3 திட்டம் என்ன? முழுமையான தகவல்கள் இதோ

அரசியல் மாற்றத்திற்கான ரஜினி சொன்ன 3 திட்டம் என்ன? முழுமையான தகவல்கள் இதோ

Rajinikanth at press meetஅரசியல் சிஸ்டம் சரியில்லை முதலில் அதைச் சரி செய்யவேண்டும்’ என்றார் ரஜினிகாந்த்.

ஒரு நல்ல ஆட்சியைக் கொடுக்க வேண்டுமென்றால் வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் போதாது, இங்கு அரசியல் மாற்றம் வர வேண்டும்.

அந்த அரசியல் மாற்றத்துக்காக நான் சில திட்டங்களை வைத்திருக்கின்றேன்.

ரஜினியின் மூன்று திட்டங்கள்;

1)திட்டம் ஒன்று;
முதல்வராக ஆசையில்லை; மக்கள் எழுச்சி உருவாக வேண்டும்.. – ரஜினி

கட்சிப் பதவி தொடர்பானது . பெரிய அரசியல் கட்சிகளில் மாநில நிர்வாகிகளில் துவங்கி, ஊராட்சிகள் வரை கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி பதவிகள் இருக்கின்றன .

இந்த ஐம்பதாயிரம் பதவியில் இருப்பவர்களின் குடும்பத்தினர் ,உறவினர், நண்பர்கள் என்று ஒரு பதவிக்கு ஐம்பது பேர் என்று எடுத்துக் கொண்டாலும் அவர்களின் எண்ணிக்கை இருபத்தைந்து லட்சமாக இருக்கும்.

இவர்கள் அனைவரையும் திருப்தி படுத்த வேண்டிய கட்டாயம் ஆளும் கட்சியினருக்கு ஏற்படுவதால் பெரிய அளவில் ஊழல் நடைபெற வாய்ப்புகள் உருவாகின்றன .

கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெற்று தர கட்சிகளுக்கு பெரிய அளவில் உதவுவார்களே தவிர, தேர்தலுக்கு பிறகு இவர்களால் அரசுக்கும், மக்களுக்கும் தொந்தரவது தான் அதிகம் .

ஆகவே தேர்தல் முடிந்தவுடன் கட்சிக்குத் தேவைப்படும் அத்தியாவசியமான பதவிகளை மட்டும் வைத்துக் கொண்டு தேவையற்ற மற்ற பதவிகளை நீக்க வேண்டும். இதுதான் என்னுடைய முதல் திட்டம் .

2)திட்டம் இரண்டு;

ரஜினியின் அரசியல் முடிவை வரவேற்று வாழ்த்துகிறோம்… – சீமான்

பொதுவாகவே இந்தியாவில் சட்ட மன்றங்களிலும் பாராளுமன்றத்திலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் பெரும்பாண்மை உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த வயதுக்கு கீழ் உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு இளைஞன் அரசியலில் பிரகாசிக்க வேண்டுமென்றால், எம்.பி மகனாகவோ, எம்.எல்.ஏ மகனாகவோ, பசெல்வாக்கு உள்ளவராக இருக்க வேண்டும் என்ற நிலை மாற வேண்டும். நல்லவர்கள், படித்தவர்கள், இளைஞர்கள் அரசியலில் ஈடு படுபட முன்வர வேண்டும்.

எனது கட்சியில் ஐம்பது வயதுக்கு கீழ் உள்ளவர்கள், ஓரளவு படித்தவர்கள் ,நேர்மையான தொழில் செய்பவர்கள், அவர்கள் வாழும் பகுதியில் கண்ணியமானவர் களை தேர்வு செய்து, 60 முதல் 65 சதவீதம் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து மீதியுள்ள 35 – 40 சதவீதத்தில் வேறு கட்சியில் வாய்ப்பு கிடைக்காத நல்லவர்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.ஸ், ஐ.பி.ஸ் அதிகாரிகள் விருப்பப்பட்டு நமது இயக்கத்தில் சேரவிரும்பினால் அவர்களுக்கு வாய்ப்பளித்து அனைவரையும் சட்டமன்றத்திற்கு அனுப்பி அதிகார சூத்திரத்தை கையில் எடுத்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.

அதற்கு நான் பாலமாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்தை அடைவதற்கு கடந்த 45 வருடங்களாக நான் திரையுலகில் ஈட்டிய புகழ், தமிழ் மக்கள் என் மீது செலுத்தி வரும் பேரன்பு அவர்களுக்கு என் மேல் இருக்கும் நம்பிக்கை அனைத்தும் உதவுமென நம்புகிறேன்.

3)திட்டம் மூன்று;

கட்சித் தலைமையையும், ஆட்சித் தலைமையையும் தனித் தனியாக பிரிப்பது .

அதாவது கட்சியை நடத்தும் தலைவர் வேறு ,ஆட்சியை நடத்தும் தலைவர் வேறு.

இந்த இரண்டையும் ஒன்றாகவே இணைத்து பார்த்து பழகிவிட்ட தமிழக அரசியலில் ஒரு மாற்று அரசியலை கொண்டுவர வேண்டியது. கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒரே நபரின் தலைமை எனும் பட்சத்தில் தேர்தலில் ஜெயித்து ஆட்சி அதிகாரத்திற்கு வருபவரின் ஐந்துவருட ஆட்சியில் என்ன தப்பு நடந்தாலும் மக்களோ, கட்சி பிரமுகர்களோ ஆட்சியாளரை தட்டி கேட்க முடியாது.

அவரை பதவியிலிருந்து கீழே இறக்கவும் முடியாது . இதையும் மீறி கட்சியில் இருப்பவர்கள் தட்டிக் கேட்டால் அவர்களை பதவியிலிருந்து இறக்கிவிடுவார்கள் அல்லது தூரமாக தள்ளி வைத்து விடுவார்கள்.

இந்த நிலை மாற கட்சி தலைமை மிகவும் வலிமையாக இருந்தால் தான் ஆட்சியில் இருப்பவர்கள் தவறுசெய்யும் போது தட்டி கேட்க முடியும் . தவறு செய்தவர்களைத் தூக்கி எறியவும் முடியும் .

மேலும் மக்களுக்கு கட்சி கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் சரிவர செயல்படுத்தும் படி பார்த்துக்கொள்ளும் .கட்சி சார்ந்த விழாக்களில், ஆட்சியாளர்கள் கலந்து கொள்ள வேண்டியதில்லை.

ஆட்சி நிர்வாகத்தில் அவர்களின் முழுக்கவனமும் இருப்பதற்கு இது உதவும்.

கட்சி சிறப்பாக நடைபெற மக்கள் வளர்ச்சிப் பணியில் அனுபவம் வாய்ந்த பல்வேறு துறைகளை சார்ந்த வல்லுனர்களை தேர்ந்தெடுத்து ஒரு ஆலோசனைக் குழுவை உருவாக்கி அவர்கள் பரிந்துரைக்கும் ஆலோசனைகளை ,அரசின் மூலம் செயல்படுத்தப்படுவதை கட்சி தலைமை உறுதி செய்யும்.

இதுவே எனது மூன்றாவது திட்டம் . இது தான் அரசியல் மாற்றத்துக்கான எனது முக்கியான திட்டங்கள் என அவர் கூறினார்.

BREAKING ரஜினியின் அரசியல் முடிவை வரவேற்று வாழ்த்துகிறோம்… – சீமான்

BREAKING ரஜினியின் அரசியல் முடிவை வரவேற்று வாழ்த்துகிறோம்… – சீமான்

Rajini seemanஇன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசிய போது…

முதல்வர் பதவி மீது ஆசையில்லை…

50 வயதுக்குட்பட்டவர்கள் பதவிக்கு வரவேண்டும்.

கட்சி வேறு; ஆட்சி வேறு.. ஊழலற்ற சமுதாயம் உருவாக மக்கள் எழுச்சி பெற வேண்டும். அப்போதுதான் நான் அரசியலுக்கு வருவேன்.

விவேகானந்தர் & அண்ணா சொன்னதை போல் தலைமை ஏற்க இளைஞர்கள் வர வேண்டும்” என்றார் ரஜினி.

இந்த நிலையில் ரஜினியின் இந்த பேச்சு குறித்து சீமான் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

BREAKING முதல்வராக ஆசையில்லை; மக்கள் எழுச்சி உருவாக வேண்டும்.. – ரஜினி

திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்!

இதே போன்று தான்,

அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்!

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

என பதிவிட்டுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதுப்படம்

ஜி.வி.பிரகாஷ் இசையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதுப்படம்

Raghava lawrence‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களைத் தயாரித்த ஃபைவ்ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் மாஸ்டர் ராகவேந்திரா லாரன்ஸ் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் அறிவிப்பு புரடொக்ஷன் நம்பர் -7 என இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் பெயர் மட்டுமல்ல ., இப்பட இயக்குனர், இப்படத்தில் பணிபுரிய இருக்கும் இன்னபிற டெக்னீஷியன்கள், இடம்பெற இருக்கும் பிற நட்சத்திரங்கள் உள்ளிட்டோர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

More Articles
Follows