கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கையை சினிமாவாக்க காத்திருக்கும் இயக்குனர்கள்..; யாருக்கு ஓகே சொல்வார்.?

natarajanஅண்மையில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் வலைப்பயிற்சி பவுலராக சென்றவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன்.

இவர் தமிழகத்தை சேர்ந்தவர். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவரான நட்ராஜனுக்கு தற்போது 29 வயதாகிறது.

அந்த தொடரில் பந்து வீச்சில் சிறப்பாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இவரின் அண்மை பேட்டியில்…

ஐ.பி.எல். போட்டிக்கு முன்பு விராட்கோலி, டிவில்லியர்ஸ், டோனி போன்ற வீரர்களின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பதே என் கனவு.

அவர்களது விக்கெட்டை கைப்பற்றியது பெரும் மகிழ்ச்சி.

அதனை அடிக்கடி நினைக்கையில் தூக்கமே வரவில்லை.

ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு தற்போது வெளியில் போக முடியவில்லை.

முன்பு போல் இயல்பாக வெளியில் செல்ல நினைக்கிறேன்.

பழனி மலை முருகன் கோயிலுக்கு சென்று மொட்டை போட்ட பின்பும் பலர் என்னை அடையாளம் கண்டு கொண்டு பாராட்டினர்.

எனக்கு எப்போதும் போல சாதாரணமான மனிதனாக இருக்கவே ஆசை.

என் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க டைரக்டர்கள் சிலர் சந்திக்க வீடு தேடி வந்தனர்.

ஆனால் இப்போது எனக்கு அதில் ஆர்வம் இல்லை.

என் முழு கவனத்தையும் கிரிக்கெட்டில் செலுத்தவே விரும்புகிறேன்.”

இவ்வாறு நட்ராஜன் தெரிவித்துள்ளார்.

Tamil directors to do Yorker king Natarajan biopic ?

Overall Rating : Not available

Latest Post