சுஷாந்த் சிங் நினைவு இல்லம் & ட்ரஸ்ட் தொடங்க குடும்பத்தினர் முடிவு

sushant singh rajputகிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியின் வாழ்க்கை படத்தில் தோனியாகவே வாழ்ந்து காட்டியவர் ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

34 வயதான இவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.

இது இந்திய சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சுஷாந்த் மறைவுக்குப் பிறகு அவருடைய குடும்பத்தினர் ‘குட்பை சுஷாந்த்’ என இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சினிமா, அறிவியல், விளையாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் இளம் திறமைசாலிகளுக்கு ஆதரவாக சுஷாந்த் சிங் ராஜ்புட் அறக்கட்டளை ஒன்றை நிறுவ உள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் சிறு வயதில் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் என்ற இடத்தில் அவர் வளர்ந்த வீட்டை நினைவில்லமாகவும் மாற்ற உள்ளார்களாம். அதில் சுஷாந்த் நினைவாக அவர் பயன்படுத்திய பொருட்கள், ஆயிரக்கணக்கான புத்தகங்கள், அவருடைய டெலஸ்கோப், பிளைட் சிமுலேட்டர் உள்ளிட்டவற்றை அவருடைய ரசிகர்களுக்காகவும், ஆர்வலர்களுக்காகவும் வைக்க உள்ளனர்.

மேலும் சுஷாந்த உயிரோடு இருக்கும்போது பயன்படுத்திய இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பேஸ்புக் ஆகிய கணக்குகளை அவருடைய நினைவாக தொடர்ந்து செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் அவரின் ஆன்மாவுக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளனர்.

Overall Rating : Not available

Latest Post