பிரபல நடிகை ஸ்ரீவித்யாவின் வீடு ஏலத்திற்கு வந்தது

பிரபல நடிகை ஸ்ரீவித்யாவின் வீடு ஏலத்திற்கு வந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

srividyaரஜினி, கமல் உள்ளிட்ட பலருடன் நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன் அழகான நடிப்பால் கவர்ந்தவர் ஸ்ரீவித்யா.

80-களில் டாப் ஹீரோயினாக இருந்த இவர், நாயகி, தங்கை, அக்கா, அம்மா, பாட்டி என பல்வேறு கேரக்டர்களில் நடித்துள்ளார்.

சென்னை அபிராமபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த இவர், 2006 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக கேரளாவில் மரணமடைந்தார்.

இவரின் மரணத்திற்கு பிறகு, இவரது அபிராமபுர வீட்டை அவரின் சகோதரர் நிர்வகித்து வந்தார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, இந்த வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த ரெய்ட்டின் போது வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது-

இதனையடுத்து, அவரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

ரூ. 4,50,800 வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதன் காரணமாக, அவரது வீட்டை வரும் 26-ம் தேதி வருமான வரித்துறை ஏலத்தில் விடுகிறது.

இதன் ஆரம்பக்கட்ட ஏல தொகை, ரூ.1.14 கோடி. இதுகுறித்த நோட்டிஸ் அவரின் இல்லத்தின் முன்பு ஒட்டப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம்னா இழப்பு இருக்கும்; தயாரிப்பாளருக்கு விசுவாசி அஜித் அட்வைஸ்

வேலை நிறுத்தம்னா இழப்பு இருக்கும்; தயாரிப்பாளருக்கு விசுவாசி அஜித் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith advice his Viswasam producer to co operate in Film Industry Strikeநடிகர் சங்கமே ஒன்று திரண்டு நட்சத்திர விழா நடத்தினால் கூட அதில் கலந்துக் கொள்ளாதவர் அஜித்.

ரசிகர்களிடம் நான் சினிமா பார்ப்பதற்கு பணம் வாங்கி விடுகிறோம். பின்பு எதற்கு இந்த கலை நிகழ்ச்சி வசூல் என்பார்.

தற்போது அவரது விசுவாசத்திற்கு சான்றாக இன்னொரு நிகழ்வு நடந்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக குழு அறிவித்தபடி மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகவில்லை.

மேலும் இன்று மார்ச் 16 முதல் திரைப்பட துறை சார்ந்த அனைத்து படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சினிமா தியேட்டர் சங்கங்களும் தாங்களும் தியேட்டர்களை மூடி விடுகிறோம் என்று அறிவித்து அதன்படி செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால் சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளில் மட்டும் பழைய படங்கள் திரையிடப்படும் என அறிவித்துள்ளார் அபிராமி ராமநாதன்.

இதனிடையில் அஜித் நடிக்கவுள்ள விஸ்வாசம் படத்திற்கான அரங்குகள் அமைக்கப்பட்டு விட்டன.

படப்பிடிப்பு தொடங்கவில்லை என்றால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் முறையிட்டதுடன் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி கேட்டுள்ளாராம்.

இதனையறிந்த அஜித், “அனைவரது நலனுக்கான போராட்டத்தில் நமது நலன் மட்டும் பார்ப்பது நியாயம் அல்ல.

சங்கத்தின் முன்னாள் தலைவரான நீங்கள் முடிவை அமுல்படுத்த தீவிரமாக உழைக்க வேண்டும். அதைவிடுத்து விஸ்வாசம் படத்திற்கு மட்டும் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி கேட்டது தவறானது” என்று சத்யஜோதி தியாகராஜனுக்கு அட்வைஸ் செய்தாராம்.

Ajith advice his Viswasam producer to co operate in Film Industry Strike

விக்கிக்கு கார் பரிசு கொடுத்து விநியோகஸ்தரிடம் சிக்கிய சூர்யா

விக்கிக்கு கார் பரிசு கொடுத்து விநியோகஸ்தரிடம் சிக்கிய சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vignesh shivan suriyaகடந்த ஜனவரி மாதம் 2018 பொங்கலுக்கு வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம்.

விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யா நடிக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தமிழகத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு டொயாட்டா கார் ஒன்றை பரிசளித்தார் சூர்யா.

இது அப்பட வெற்றிக்கு அன்பளிப்பு என்ற செய்திகள் வெளியானது.

ஆனால் தானா சேர்ந்த கூட்டம் படத்தை வாங்கி வெளியிட்ட சேலம் விநியோகஸ்தர் தனது கணக்கை அப்படியே வெளியிட்டு, ஓடாத தோல்விப் படத்துக்கு ஏன் இந்த பில்டப்பு? என்று கேட்டிருக்கிறார்.

இதில் யார் சொல்வது உண்மை.? என கோலிவுட் குழம்பியுள்ளது. படத்தயாரிப்பாளர் உண்மையை சொல்வாரா? என காத்திருப்போம்.

Suriya gift to Vignesh Shivan creates issue Whether TSK movie is hit or flop

விநியோகஸ்தரின் லாப நஷ்ட கணக்கு படம் இதோ…

tsk salem box office

தமிழ் புத்தாண்டில் தளபதி ரசிகர்களுக்கு விஜய் 62 விருந்து

தமிழ் புத்தாண்டில் தளபதி ரசிகர்களுக்கு விஜய் 62 விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 62 first look release on Tamil New yearசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் விஜய் 62 படம் உருவாகி வருகிறது.

துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய இரு படங்களின் வெற்றிக்கு பின்னர் ஏஆர். முருகதாஸ் மற்றும் விஜய் இதில் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனவே இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை ரசிகர்களுடன் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இரண்டுக்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படக்குழு மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்கு செல்லவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளிவரும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இதனால், தளபதி ரசிகர்கள் தமிழ் புத்தாண்டை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Thalapathy 62 first look release on Tamil New year

விஜய்-தனுஷ் படத்தை அடுத்து வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி

விஜய்-தனுஷ் படத்தை அடுத்து வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

varalaxmi sarathkumarபாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் தேசிய விருதை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டவர் வரலட்சுமி சரத்குமார்.

அந்தளவுக்கு அருமையான நடிப்பை கொடுத்திருந்தார்.

இவர் தற்போது ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் இவரது பிறந்தநாளில் விஜய்யின் 62-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி தற்போது அதிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கவுள்ள ‘வெல்வெட் நகரம்’ என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கியுள்ளனர்.

இதில் ஜெர்னலிஸ்டாக நடிக்கிறார் வரலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி கட்சியில் மகள் சௌந்தர்யாவுக்கு முக்கிய பொறுப்பு.?

ரஜினி கட்சியில் மகள் சௌந்தர்யாவுக்கு முக்கிய பொறுப்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini daughter Soundarya may have major responsibility in Rajini Political Partyஅரசியலுக்கு வருவது உறுதி, எம்ஜிஆரை போல நல்லாட்சியை கொடுப்பேன் என அதிரடியாக அறிவித்துவிட்டு தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு இமய மலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

தனது ஆன்மிக பயணத்தை முடித்த பிறகு, அரசியல் கட்சி பெயரை அறிவித்துவிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார் ரஜினிகாந்த் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ரஜினி தொடங்க உள்ள கட்சியில் தனது இளைய மகள் சௌந்தர்யாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கான வேலைகளில் தற்போது சௌந்தர்யா ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இது ஒரு புறம் இருக்க, மற்றொரு பக்கம், ரஜினியின் அடுத்த அரசியல் வாரிசு தனுஷ் என அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் கூறும்போது… குடும்ப அரசியலை விரும்பாதவர் தலைவர் ரஜினி. எனவே இந்த செய்தியில் உண்மையில்லை என தெரிவிக்கின்றனர்.

ம்ம்ம்ம்ம்… பொறுத்திருந்து பார்ப்போம்…

Rajini daughter Soundarya may have major responsibility in Rajini Political Party

More Articles
Follows